யாழ். குடாநாட்டில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.இரண்டு மாதங்களில் தீர்வு!

283

யாழ். குடாநாட்டில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில், யாழ். குடாநாட்டில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதன் ஊடாக இந்தியாவிலேயே அதனை கட்டுப்படுத்து தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகலரத்நாயக்க இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், போதை பொருள் பாவனை மற்றும் சில முக்கிய பிரச்சினைகளுக்கு 2 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

625-590-560-350-160-300-053-800-944-160-90

இது தொடர்பிலான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

போதை பொருள் கட்டுப்பாடு தொடர்பாக, யாழ்.குடாநாட்டில் போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்த விஷேடமாக புலனாய்வு பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தப்படவேண்டும்.

மேலும் பொலிஸாருக்கு தகவல்களை வழங்குவது தொட்பில் மக்கள் நம்பிக்கையற்று உள்ளனர். போதை பொருள் கட்டுப்பாட்டுக்கு யாழ்.மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்காமல் இந்திய மத்திய அரசாங்கத்துடன் இந்த விடயம் தொடர்பில் பேசி அங்கேயே தடுக்கவேண்டும்.

625-0-560-320-160-600-053-800-668-160-90

அதேபோல் கரையோரங்களில் பாதுகாப்பு அவசியம் என கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்த சிவில் சமூகம் சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த கடற்படையினர், இலங்கை கடற்படையானது முடிந்தளவுக்கு இந்தியாவில் இருந்து போதை பொருள் இலங்கைக்குள் வருவதை தடுக்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை எடுக்கிறது.

குறிப்பாக மன்னார், பருத்திதுறை, இளவாலை போன்ற பகுதிகளில் விஷேட கவனம் காட்டப்படுகிறது என கூறினர்.

இதற்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் பதிலளிக்கையில், சந்தேகத்திற்கிடமான இடங்களில் விஷேட பொலிஸ் மற்றும் கடற்படை காவலரண்கள் அமைக்கப்படவேண்டும் என கூறியுள்ளார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2

SHARE