பண்டாரநாயக்கவும் சமஷ்டி முறையில் தமிழர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்க முயற்சித்தார். ஆனால், இனவாதிகளின் பிடியிலிருந்து தப்பிக்க தனது கொள்கையை மாற்றிவிட்டார்

327

 

ஈழத் தமிழர்களுக்கெதிரான யுத்தத்தைத் தொடுத்த சிங்களப் பேரினவாதிகள், எக்காலத்திலும் அவர்களுக்கு அரசியல் தீர்வை வழங்கக்கூடாது எனக் காலங்காலமாகக் கங்கணம் கட்டிவருவதை தற்போதைய நல்லாட்சியிலும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

in09_sri_lanka_2273895g maithri-ranil-chandrika news%5c2014%5c11%5cimages%5cnews25 ranil-maithri
மைத்திரி ரணில் தலைமையிலான அரசு தயாரித்துக்கொண்டிருக்கும் புதிய அரசமைப்பை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றத்தில் நடத்தும் பொது வாக்கெடுப்பில் தோற்கடிப்போம் என மஹிந்தவுக்கு ஆதரவான அணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சூளுரைத்துள்ளார். வென்னப்புவ கிரிமிட்டியான பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
நாட்டின் இறைமைக்கும், அபிவிருத்திக்கும் பெரும் தடைக்கல்லாக இனப்பிரச்சினை காணப்படுகின்றது என்பது யாவரும் அறிந்த உண்மை. தமது அரசியல் வியாபாரத்தை நடத்துவதற்கு இனப்பிரச்சினையை மூலதனமாகப் பயன்படுத்தினார்கள் கடந்த கால ஆட்சியாளர்கள்.

இதன் விளைவாக இலட்சக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியாகியிருந்தன. அத்துடன், கோடிக்கணக்கான உடைமைகளும அழிக்கப்பட்டன. இதற்கும் மேலாக சர்வதேசத்தில் நாடு கெட்ட பெயரையும் எடுத்திருந்தது.

கடந்த கால படிப்பினைகளுக்கு மத்தியிலும் தமது சுயநல அரசியலுக்காகத் தென்னிலங்கையின் கடும் போக்குக்கொண்ட சிங்கள இனவாதிகள் போர்க்கொடி தூக்குகின்றனர்.
இலங்கையில் மீண்டும் இனமோதல்கள் முரண்பாடுகள் யுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கு தேசிய அரசு கடந்த ஓராண்டு காலமாகப் புதிய அரசமைப்பைத் தயாரித்துக்கொண்டு வருகின்றது.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தை நீக்கல் மற்றும் தேர்தல் முறைமையில் மாற்றம் போன்றவற்றை உள்ளடக்கியதாகப் புதிய அரசமைப்பு அமையுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் பெரும் தடையாக நடைமுறையிலுள்ள அரசமைப்பு உள்ளது எனப் பல்வேறு நிபுணர்களினாலும் சுட்டிக்காட்டப்பட்டது.
1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில இரண்டு முறை அரசமைப்பில் மாற்றம் öŒ#யப்பட்டிருந்தது. ஆனால், இவ்விரண்டு அரசமைப்பு மாற்றங்களிலும் தமிழர்களுக்குக் காத்திரமான முறையில் அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஆட்சியாளர்கள் முன்வந்திருக்கவில்லை. சிறுபான்மை இனத்தவர்களின் கருத்துகள் ஆலோசனைகள் என்பன இவற்றில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.
மைத்திரி ரணில் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு நடுப்பகுதியில் உருவாக்கப்படும் புதிய அரசமைப்புக்கான சட்ட ஆலோசனைக் குழுவொன்றை நியமித்திருந்தது. இக்குழுவில் தமிழ், முஸ்லிம் சட்டவல்லுநர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இக்குழுக்களிலுள்ளவர்களின் சட்ட ஆலோசனையின்படி புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்தப் புதிய அரசமைப்பில் சிறுபான்மையினரின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென மைத்திரி ரணில் சந்திரிகா தலைமையிலான கூட்டணி தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேர்தலில் இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.
இதன்படி புதிய அரசமைப்பின் பிரகாரம் தமிழர்களுக்கு அரசியல்தீர்வு கிடைக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன், தமிழர்களுக்குப் பாதகமான அரசியல் தீர்வு கிடைக்கும் பட்சத்தில் அதனைத் தாம் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தார் அக்கட்சியின் தலைவர் சம்பந்தன். சமஷ்டி முறையில்தான் தமிழர்களுக்குத் தீர்வு வழங்க வேண்டுமெனக் கூட்டமைப்பு தெரிவித்து வருகின்றது.
புதிய அரசமைப்பு தாயாரிக்கப்படும் நேரத்தில் வடக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரம்தான் சரியானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அண்மையில் தெரிவித்திருந்தார். இவர் 2000 ஆம் ஆண்டில் சமஷ்டி முறையை ஒத்த தீர்வைத் தமிழர்களுக்கு வழங்க முன்வந்திருந்தார். ஆனால், அது கைகூடவில்லை.
இவரது தந்தை பண்டாரநாயக்கவும் சமஷ்டி முறையில் தமிழர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்க முயற்சித்தார்.

ஆனால், இனவாதிகளின் பிடியிலிருந்து தப்பிக்க தனது கொள்கையை மாற்றிவிட்டார். பின்னர் தந்தை öŒல்வாவிடம் ஒப்பந்தமொன்றைச் öŒ#திருந்தார். அதுவும் இனவாதிகளினால் கிழித்தெறியப்பட்டது.
2002 ஆம் ஆண்டு ரணில் தலைமையிலான அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின்படி பல்வேறுபட்ட அரசியல் பேச்சுகள் இருதரப்பினருக்குமிடையில் மேற்கொள்ளப்பட்டிந்தன. இந்நிலையில், தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் புலிகளின் ஊடாக ரணில் அரசு வழங்கப்போகிறது என சந்திரிகா தனது நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி ரணில் அரøŒ 2004 ஆம் ஆண்டு இரவோடு இரவாகக் கலைத்திருந்தார்.
இவ்வாறு இலங்கையை ஆட்சிöŒ#த இரண்டு தேசிய கட்சிகளும் மாறி மாறித் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு முட்டுக்கட்டை இட்டன. அதாவது, ஒரு தரப்பினரால் தழிழர்களுக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்போது மற்றைய தரப்பினால் அது இனவாதக் கண்ணோட்டமாகப் பார்க்கப்பட்டு திரிவுபடுத்தி சிங்கள மக்களின் ஆதரவைப்பெற்று ஆட்சியில் ஏறுவது வழக்கமாகிவிட்டது.

இதற்கு நடைமுறையிலுள்ள அரசமைப்பும் ஒத்திøŒத்துப்போனது; ஒத்து ஊதத் தொடங்கியது.
ஆனால், தற்போது இக் கட்சிகள் இரண்டுமே ஆட்சியில் பங்கெடுத்துள்ளன. இருந்தபோதிலும், ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக புதிய ஏதிரணி ஒன்று உருவாகியுள்ளது. மஹிந்தவுக்கு Œõர்பான பொது ஏதிரணியினர் இனவாதக் கருத்துகளையும், அரசுக்கெதிரான கோஷங்களையும் கக்குகின்றனர்.
நாடு பிளவுபடப்போகிறது: புலிகள் புத்துயிர் பெறுகின்றனர்: வெளிநாடுகள் தமிழீழத்தை ஆதரிக்கின்றன என்றெல்லாம் இனவாதக் கருத்துகளை விதைத்து வருகின்றனர். இதன் ஒர் அங்கமாகத்தான் புதிய அரசமைப்பின் மீதான தமது கோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
எந்தவொரு அரசமைப்பு சட்டமும் நாடாளுமன்றத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் வெற்றிபெறும் பட்சத்தில்தான் அது அமுலாக்கப்படும். புதிய அரசமைப்புக்கான பொது வாக்கெடுப்பு எதிர்வரும் நவம்பர் மாதமளவில் நடத்தப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான், புதிய அரசமைப்பை பொது வாக்கெடுப்பில் தோற்கடிப்பதற்கு மஹிந்தவுக்கு ஆதரவான அணி தயாராகிவருவதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது இனவாதக் கருத்துகளைப் பரப்புவதில் விமல் வீரவன்சவுக்கு கணிசமான பங்குண்டு.
புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கும் நாட்டின் எதிர்கால சுவிட்சத்திற்கும் புதிய அரசமைப்பு அடித்தளாமாக அமையுமெனின் எவ்வித இடையுறுகளுக்கும் மத்தியில் தேசிய அரசு அதனை நாடாளுமன்றத்தில் பொது வாக்கெடுப்பில் வெற்றிபெறச் öŒ#ய வேண்டும்.
எனெனில், இரண்டு கட்சிகளும் இணைந்த ஆட்சியில் எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. தமிழர்களுக்கு உருப்படியான தீர்வை அரசு முன்வைக்கும் பட்சத்தில் அதனை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சியில் சிங்கள தலைமைகள் இல்லை. இப்படியொரு அரிய சந்தர்ப்பம் மீண்டும் நாட்டில் ஏற்பட வா#ப்பில்லை. எனவே, தற்போதைய ஆட்சியாளர்கள் உருவாக்கப்படுகின்ற அரசமைப்பில் சிறுபான்மையினர்களின் அரசியல் நலனி;ல் கூடுதல் அக்கறை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட தமிழர்களின் அபிலாஷையாகவுள்ளது.

மறவன்

SHARE