இலங்­கையின் மனித உரிமை மீறல் விவ­கா­ரங்கள் ஜெனீ­வாவை நோக்கி நகர்த்­தப்­பட்டு ஏழு ஆண்­டு­க­ளா­கி­யி­ருக்­கின்ற சூழலில், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 32 ஆவது கூட்­டத்­தொடர் ஜெனீ­வாவில் நடந்து

392

 

இலங்­கையின் மனித உரிமை மீறல் விவ­கா­ரங்கள் ஜெனீ­வாவை நோக்கி நகர்த்­தப்­பட்டு ஏழு ஆண்­டு­க­ளா­கி­யி­ருக்­கின்ற சூழலில், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின்  32 ஆவது கூட்­டத்­தொடர் ஜெனீ­வாவில்  நடந்து

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரை முடித்து வைத்­ததால், ஆறு மாதங்­க­ளுக்கு ஒரு­முறை ஜெனீ­வா­வுக்குப் பதி­ல­ளிக்க வேண்­டிய அழுத்­தங்­களை தமது அர­சாங்கம் எதிர்­கொண்­ட­தாக, ஆட்­சியை இழந்த பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கூறியிருந்தார்.

போருக்குப் பின்னர், ஜெனீ­வாவில் முன்­னைய அர­சாங்கம் கடு­மை­யான அழுத்­தங்­களை எதிர்­கொண்­டி­ருந்­தது.

ஆட்­சி­யி­லி­ருந்த வரைக்கும் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் ஜெனீவா அழுத்­தங்­களை பெரி­ய­தொரு விட­ய­மாக வெளிப்படுத்தவில்லை.  வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்­டா­தது போன்றே பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டது.

ஆனால், ஆட்­சி­மாற்­றத்­துக்குப் பின்னர், முன்­னைய அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த அமைச்­சர்­க­ளான மஹிந்த சம­ர­சிங்க, ராஜித சேனாரத்ன போன்­ற­வர்கள் ஜெனீவாவில் கடு­மை­யான அழுத்­தங்­களை சந்­திக்க நேரிட்­டது என்­பதை வெளிப்­ப­டை­யா­கவே கூறியிருந்தனர்.

கலா­நிதி தயான் ஜய­தி­லக, கலா­நிதி ராஜீவ விஜே­சிங்க போன்ற இலங்­கையின் முன்னாள் இரா­ஜ­தந்­தி­ரிகள், இந்த அழுத்­தங்­களை எவ்வாறு எதிர்­கொள்ள நேரிட்­டது என்­பது பற்றி பின்னர், ஊட­கங்­களில் கட்­டு­ரை­க­ளையும் எழு­தி­யி­ருந்­தனர்.

மஹிந்த ராஜபக் ஷ அர­சுக்கு ஜெனீவா என்­பது சிம்­ம­சொப்­ப­ன­மான விவ­கா­ர­மா­கவே மாறி­யி­ருந்­தது.

mahinda_11  முள்­ளி­வாய்க்கால் தொடக்கம்.. ஜெனீவா வரை!! - (பகுதி-1)  -கார்­வண்ணன் mahinda 11
ஜெனீவா நெருக்­க­டிகள் உச்­சக்­கட்­டத்தை எட்­டி­யி­ருந்த போது தான், மஹிந்த ராஜபக் ஷ கடந்த ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலை முன்கூட்டியே நடத்­தி­யி­ருந்தார்.

அவர் தேர்­தலை ஏன் இரண்டு ஆண்­டுகள் முன்­கூட்­டியே நடத்த முனைந்தார்? என்­பது பற்­றிய சந்­தே­கங்கள் இப்­போதும் எழுப்பப்படுகின்­றன.

ஜெனீவா நெருக்­க­டி­யி­லி­ருந்து தப்­பிக்­கவா அந்த முடிவு எடுக்­கப்­பட்­டது? என்று கேள்வி எழுப்­பப்­ப­டு­கி­றது. அண்­மையில் இந்தக் கேள்­வியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே எழுப்­பி­யி­ருந்தார்.

போருக்குப் பின்னர், இலங்­கையின் அர­சி­ய­லையும் – அர­சாங்­கத்­தையும் ஆட்டிப் படைக்­கின்ற ஒரு கரு­வி­யாக ஜெனீவா மாறி­யது.

இந்த மாற்றம் எவ்­வாறு நிகழ்ந்­தது? எங்­கி­ருந்து ஆரம்­பித்­தது? எங்கு போய் முடியப் போகி­றது? இந்தக் கேள்­வி­க­ளுக்கு கடந்­து­போன வர­லாற்றைத் திரும்பிப் பார்த்து, விடை தேடு­கி­றது இந்தத் தொடர்.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான, மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தின் போர், 2009 மே 19ஆம் திகதி முடி­வுக்கு வந்த பின்னர், புதிய போர்க்­களம் ஒன்று ஜெனீ­வாவில் திறக்­கப்­பட்­டது.

2006ஆம் ஆண்டில், ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை உரு­வாக்­கப்­பட்ட பின்னர், ஜெனீ­வாவில், இலங்­கையில் தமி­ழர்­க­ளுக்கு நீதிகோரும் போராட்­டங்கள் புலம்­பெயர் தமி­ழர்­களால் பெரு­மெ­டுப்பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்த போதிலும், 2009இல் முள்ளிவாய்க்காலில்  போர் முடி­வுக்கு வந்த பின்னர் தான் ஜெனீ­வாவில்   இன்­னொரு போர் முனை பகி­ரங்­க­மாகத் திறக்­கப்­படும் நிலை உரு­வா­னது.

இறு­திக்­கட்டப் போரில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­களும், சர்­வ­தேச மனித உரிமை மற்றும் மனி­தா­பி­மானச் சட்ட மீறல்­களும் தான், ஜெனீ­வாவில் புதிய போர்க்­களம் திறக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தன.

முள்­ளி­வாய்க்­காலில் போர் முடி­வுக்கு வந்த கையுடன், புலி­களின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த பிர­தே­சங்­களில் நிகழ்ந்த பேர­வ­லங்கள் பற்­றிய தக­வல்கள் கொஞ்சம் கொஞ்­ச­மாக வெளி­வரத் தொடங்­கின.

அர­சாங்கம் முன்னர் கூறி­வந்­த­தற்கு மாறாக, இரண்­டரை இலட்சம் மக்கள் விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்டுப் பகு­தி­யி­லி­ருந்து வெளி­யேறி வந்து வவு­னி­யா­வி­லுள்ள முகாம்­களில் அடைக்­கப்­பட்ட போது, சர்­வ­தேச சமூகம் திகைத்துப் போனது.

சர்­வ­தேச சமூ­கத்­தி­னதும், ஊட­கங்­க­ளி­னதும் கண்­களை மறைத்­து­விட்டு ஒரு கொடு­மை­யான போர், வன்­னியில் நிகழ்த்தப்பட்டிருப்பதற்­கான வாய்ப்­பு­களை சர்­வ­தேச சமூகம் புரிந்­து­கொண்­டது.

இங்­கி­ருந்து தான், இலங்கை அரசின் கழுத்தில் முடிச்­சுக்கள் போட ஆரம்­பிக்­கப்­பட்­டன. ஜெனீவா கள­மு­னைக்­கான திற­வு­கோ­லாக முள்ளி­வாய்க்­காலைக் குறிப்­பி­டலாம்.

 

மூன்று தசாப்­தங்­க­ளாக இலங்­கையில் நீடித்த போர் முடி­வுக்கு வந்­த­போது சர்­வ­தேச சமூகம் அதனைக் கொண்­டாடி வர­வேற்கத் தவறவில்லை.

index  முள்­ளி­வாய்க்கால் தொடக்கம்.. ஜெனீவா வரை!! - (பகுதி-1)  -கார்­வண்ணன் index3போர் முடி­வுக்கு வந்­த­தாக அர­சாங்கம் அறி­வித்த பின்னர், ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூன், ஒரு அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்தார்.

“இலங்­கையில் இரா­ணுவ நட­வ­டிக்­கைகள் முடி­வ­டைந்­தி­ருப்­ப­தை­யிட்டு மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். அதே­வேளை, பொது­மக்­களின் உயிரிழப்­புகள் குறித்து ஆழ்ந்த கவ­லை­ய­டை­கிறேன்.

இலங்­கையில் மோதல்கள் நடை­பெற்­ற­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­ப­டு­வ­தற்கு நாம் ஆத­ர­வ­ளிப்போம்.

சர்­வ­தேச மனி­தா­பி­மானச் சட்­டங்கள் எங்­கெல்லாம் மீறப்­ப­டு­கின்­ற­னவோ அங்­கெல்லாம் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும்.

பல நூற்­றாண்டு கால­மாக சமூ­கங்­களைப் பிரித்து வைத்­த­தனால் ஏற்­பட்­டுள்ள காயங்­க­ளுக்கு மருந்து போட வேண்டும் என்று அதில் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

போரின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும் என்­ப­தையும் அதற்கு ஐ.நா. உதவத் தயார் என்றும் அந்த அறிக்­கையில் ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூன் தெளி­வாகக் கூறி­யி­ருந்தார்.

showimageinstory  முள்­ளி­வாய்க்கால் தொடக்கம்.. ஜெனீவா வரை!! - (பகுதி-1)  -கார்­வண்ணன் showImageInStoryஇறு­திக்­கட்­டத்தில் நிகழ்ந்த மீறல்கள் தொடர்­பான, போர்க்­குற்ற விசா­ர­ணை­க­ளுக்கு பிள்­ளையார் சுழியைப் போட்டு வைத்தவர்கள் இருவர்.

அவர்­களில் ஒருவர் தான் ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூன்.

இரண்­டா­மவர் யார் என்று பார்ப்­ப­தற்கு முன்­ன­தாக, பான் கீ மூன் எவ்­வாறு இதனைத் தொடக்கி வைத்தார், அவ­ரது பொறியில் மஹிந்த ராஜபக் ஷ எவ்­வாறு மாட்டிக் கொண்டார் என்று பார்க்­கலாம்.

போர் முடி­வுக்கு வந்த பின்னர், ஐ.நா பொதுச்­செ­யலர் பான் கீ மூன் விடுத்த அறிக்­கையை இலங்கை அர­சாங்கம் அவ்­வ­ளவு தீவி­ர­மான விட­ய­மாக எடுத்துக் கொள்­ளவும் இல்லை. இதற்குப் பின்னால் பாரிய சிக்­கல்கள் ஏற்­படும் என்று கரு­தி­யி­ருக்­க­வு­மில்லை.

போர் முடிந்­த­தாக அர­சாங்கம் அறி­வித்த அடுத்­த­டுத்த நாட்­க­ளி­லேயே ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூன் கொழும்பில் வந்து இறங்கினார்.

அவர் கொழும்பு நோக்கிப் புறப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக அமெ­ரிக்கா, பிரான்ஸ், பிரித்­தா­னிய வெளி­வி­வ­கார அமைச்­சர்­க­ளுடன் ஆலோசனை­களை நடத்­தி­யி­ருந்தார்.

mulivaikal  முள்­ளி­வாய்க்கால் தொடக்கம்.. ஜெனீவா வரை!! - (பகுதி-1)  -கார்­வண்ணன் mulivaikal2009 மே 22 ஆம் திகதி பின்­னி­ரவில் இலங்கை வந்த அவர், விமா­னப்­ப­டையின் ஹெலி­கொப்டர் மூலம் இறு­திக்­கட்டப் போர் நடந்த முள்­ளி­வாய்க்கால் பகு­தியை வானத்தில் இருந்தே பார்­வை­யிட்டார்.

வவு­னி­யாவில் இலட்­சக்­க­ணக்­கான மக்கள் முள்­வே­லி­க­ளுக்குப் பின்னால் அடிப்­படை வச­தி­க­ளற்ற கூடா­ரங்­களில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த மெனிக் பாம் முகா­முக்கும் சென்­றி­ருந்தார்.

சுமார் 20 நிமி­டங்கள் முகாமில் இருந்த மக்­க­ளுடன் பான் கீ மூன் கலந்­து­ரை­யா­டினார். ஐ.நா. பொதுச்­செ­ய­ல­ருடன் நிழல் போலத் தொடர்ந்த புல­னாய்­வா­ளர்கள், மக்­களை மறை­மு­க­மாக அச்­சு­றுத்திக் கொண்­டி­ருந்­த­துடன், யாரா­வது எதை­யா­வது சொல்­கி­றார்­களா என்று தக­வல்­க­ளையும் திரட்டிக் கொண்­டி­ருந்­தனர்.

அதன் பின்னர் பான் கீ மூன், கண்­டியில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வைச் சந்­தித்தார்.

அந்தச் சந்­திப்பின் போது, இடம்­பெ­யர்ந்த மக்­களின் மீள்­கு­டி­யேற்றம், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான உத­விகள், போரின் போது இடம்­பெற்ற மீறல்கள் குறித்து பேசப்­பட்­டது.

அந்தப் பேச்­சுக்­களின் முடிவில், ஒரு கூட்­ட­றிக்­கையை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும், ஐ.நா. பொதுச்­செ­ய­லாளர் பான் கீ மூனும் இணைந்து வெளி­யிட்­டனர். மேலோட்­ட­மாகப் பார்த்தால் அந்தக் கூட்­ட­றிக்­கையில் ஒன்­று­மில்­லா­தது போலத்தான் இருந்­தது.

ஆனால், அதுவே மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­துக்கு பெருந்­த­லை­வ­லியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பான் கீ மூன் போட்ட பிள்­ளையார் சுழி என்­பது பின்­னரே தெரிய வந்­தது.

ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூன் இலங்கை வந்­தி­ருந்த போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அவரைச் சந்­திக்க விடா­த­படி அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்­தது.

ஒரு கட்­டத்தில், இலங்­கையை விட்டுப் புறப்­பட்டுச் செல்லும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்திக்க ஏற்பாடு செய்து தரலாம் என்று அரசாங்கம் கூறியது.

அதனை நம்பி கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருக்க, அவர்களின் கண்களில் படாமலேயே, கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் மூலம், ஏற்றிச் சென்று, பான் கீ மூனை கொப்பன்ஹேகனுக்குச் செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தது அரசாங்கம்.

“அப்பாடா பான் கீ மூன் போய் விட்டார்” என்று அரசாங்கத்தினால் நிம்மதி கொள்ள முடியவில்லை.

ஏனென்றால், அடுத்த தலைவலி அப்போது தான், ஜெனீவாவில் முளைகொள்ளத் தொடங்கியிருந்தது.

அது என்ன? பான் கீ மூன்- மஹிந்த ராஜபக் ஷ இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், இடம்பெற்றிருந்தவை என்ன? போர்க்குற்ற விசாரணைக்குப் பிள்ளையார் சுழி போட்ட இரண்டாமவர் யார்?

ஆண்டு மே மாதம் போர் முடி­வுக்கு வந்த ஒரு வாரத்­துக்­குள்­ளா­கவே, இலங்­கைக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த ஐ.நா. பொதுச்செயலர்பான் கீ மூன், அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து கூட்­ட­றிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்தக் கூட்­ட­றிக்­கையின் அடிப்­ப­டையில் தான், இலங்­கையின் மனித உரி­மைகள் நிலை தொடர்­பாக ஐ.நா.வின் அத்­தனை நடவடிக்கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இலங்கை அர­சாங்­கத்தை தெரிந்தோ, தெரி­யா­மலோ, சிக்­க­லுக்குள் மாட்­டி­விட்ட கூட்­ட­றிக்­கையின் மிக­முக்­கி­ய­மான பகு­திகள் இங்கு தரப்­ப­டு­கின்­றன.

“விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, போருக்குப் பிந்­திய புதிய சூழ­லுக்குள் இலங்கை பிரவேசிக்­கி­றது என்­பதை, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும், ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூனும் ஏற்றுக் கொள்­கின்­றனர்.

இந்­த­நி­லையில், இலங்கை அர­சாங்கம் உதவி, புனர்­வாழ்வு, நல்­லி­ணக்க விவ­கா­ரங்­களில், பல உட­னடி மற்றும் நீண்­ட­கால சவால்களுக்கு முகம் கொடுத்­துள்­ளது.

இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் அதே­வேளை, வடக்கில் நீண்­ட­கால அபி­விருத்­தி­களை மேற்­கொள்­ளவும், ஜன­நா­யக நிறுவனங்­க­ளையும் தேர்தல் அர­சி­ய­லையும் மீள நிறு­வு­வ­தற்கும், இந்தப் புதிய சூழல் இரண்­டரை தசாப்­தங்­க­ளுக்குப் பின்னர் வாய்ப்புகளை அளித்­தி­ருக்­கி­றது.

தனது திட்­டங்­களின் ஊடாக, வடக்கில் உள்ள மக்­க­ளுக்கு அர­சியல் மற்றும் பொரு­ளா­தார ரீதி­யாக அதி­கா­ர­ம­ளிக்கும் கடப்­பாட்டை நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்கம் உறுதி பூண்­டுள்­ளது.

எல்லா சமூ­கங்­க­ளி­னதும், அபி­லா­ஷைகள் மற்றும் குறை­களை தீர்த்து வைத்து, நீண்­ட­கால சமூக, பொரு­ளா­தார, அபி­வி­ருத்­தியை உறுதிப்­ப­டுத்தும் அடிப்­ப­டையில், நிலை­யான அர­சியல் தீர்வு ஒன்றைக் காண்­பதை நோக்கிப் பணி­யாற்­று­வ­தென ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும், ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூனும் இணங்­கு­கின்­றனர்.

சர்­வ­தேச மனித உரி­மைகள் நிய­மங்­களின் அடிப்­ப­டையில் மனித உரி­மை­களை ஊக்­கு­விப்­பது மற்றும் பாது­காப்­ப­திலும், இலங்­கையின் சர்­வ­தேச கடப்­பா­டு­களை பாது­காப்­ப­திலும், தாம் உறு­தி­பூண்­டி­ருப்­ப­தாக அர­சாங்கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

vanni-hospital  மஹிந்த ராஜபக் ஷ"  ஐ    ஐ.நா.வின் பொறியில் மாட்­டிவிட்ட பான் கீ முன்!! : (முள்­ளி­வாய்க்கால் தொடக்கம்   ஜெனீவா வரை–02) vanni hospitalசர்­வ­தேச மனி­தா­பி­மான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்­க­ளுக்கு தீர்வு காணும், பொறுப்­புக்­கூறும் செயல்­மு­றைகள் முக்கியமானவை என்று ஐ.நா. பொதுச்­செ­யலர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இந்த மனக்­கு­றை­களைத் தீர்க்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும்” இவையே கூட்­ட­றிக்­கையின் மிக முக்­கி­ய­மான- அர­சாங்­கத்தைச் சிக்­கலில் மாட்­டிய பகு­திகள்.

வெறு­மனே பொறுப்­புக்­கூறல் மற்றும் மனித உரிமை மீறல் விவ­கா­ரங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக இந்தக் கூட்­ட­றிக்கை அமைந்திருக்கவில்லை.

வடக்கில் மீண்டும் தேர்தல் அர­சியல் நிர்­வாக கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்­து­வது தொடக்கம், புனர்­வாழ்வு, மீள்­கு­டி­ய­மர்வு உள்­ளிட்ட எல்லா விட­யங்­க­ளையும் அது உள்­ள­டக்­கி­யி­ருந்­தது.

இந்த கூட்­ட­றிக்­கையின் கடைசிப் பந்­தியில் தான், இலங்கை அர­சாங்கம் ஐ.நா.வின் பொறியில் மாட்­டிக்­கொண்­டது.

images  மஹிந்த ராஜபக் ஷ"  ஐ    ஐ.நா.வின் பொறியில் மாட்­டிவிட்ட பான் கீ முன்!! : (முள்­ளி­வாய்க்கால் தொடக்கம்   ஜெனீவா வரை–02) images

போரின் போது இடம்­பெற்ற சர்­வ­தேச சட்­ட­மீ­றல்­க­ளுக்கு பொறுப்­புக்­கூ­றப்­பட வேண்டும் என்ற ஐ.நா. பொதுச்­செ­ய­லரின் கருத்தை, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஏற்றுக் கொள்­வ­தாக அதில் இணங்­கி­யி­ருந்தார்.

ஐ.நா. பொதுச்­செ­ய­லரின் மனக்­கு­றை­களை தீர்க்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும் என்ற அந்த வாக்­கு­றுதி தான், இலங்கை அர­சாங்­கத்தைப் பதில் சொல்ல வேண்­டிய நிலைக்குள் கொண்டு வந்து நிறுத்­தி­யது.

இந்தக் கூட்­ட­றிக்­கையை வெளி­யிட முன்னர், வெளி­வி­வ­கார அமைச்சுக் கண்ணை மூடிக் கொண்­டி­ருந்­ததா என்ற பர­வ­லான விமர்சனங்­களை எதிர்­கொள்ள நேரிட்­டது.

ஏனென்றால், பொறுப்­புக்­கூறல் சார்ந்து சர்­வ­தேச சமூ­கத்­துக்கு அளிக்­கப்­பட்ட ஒரு உறுதி ஆவ­ண­மா­கவே இது பார்க்­கப்­ப­டு­கி­றது.

makintha  மஹிந்த ராஜபக் ஷ"  ஐ    ஐ.நா.வின் பொறியில் மாட்­டிவிட்ட பான் கீ முன்!! : (முள்­ளி­வாய்க்கால் தொடக்கம்   ஜெனீவா வரை–02) makinthaஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூன், மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்­புக்­கூறல் தொடர்­பாக மேற்­கொண்ட அத்­தனை நடவடிக்கை­களும் மற்றும் ஜெனி­வாவில் இப்­போதும் ஐ.நாவினால் முன்­னெ­டுக்­கப்­படும் அனைத்து நட­வ­டிக்­கை­களும், இந்த ஆவணத்தை முன்­னி­றுத்தி நியா­யப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூன் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்த போது இருந்த அர­சியல் சூழல், அர­சாங்­கத்­தி­னதும், மூத்த இரா­ஜ­தந்­தி­ரி­களின் கண்­களை மறைத்து விட்­டது. வெற்றி கண்ணை மறைக்கும் என்­பது போலத் தான் இதுவும் நடந்­தது.

பான் கீ மூன் கொழும்­புக்கு வந்­தி­ருந்த கால­கட்­டத்தில் ஒரு பக்­கத்தில் போர் வெற்றிக் கொண்­டாட்­டங்கள் நடந்து கொண்­டி­ருந்­தன. வெற்­றியின் மம­தையின் உச்­சியில் அர­சாங்கம் நின்­று­கொண்­டி­ருந்­தது. தலைகால் புரி­யாத சந்­தோசம், தென்­னி­லங்­கையில் தாண்­ட­வ­மாடிக் கொண்­டி­ருந்­தது.

அதே­வேளை, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் சிறப்புக் கூட்­டத்­தொடர் ஒன்­றையும் இலங்கை அர­சாங்கம் எதிர்­கொள்ள வேண்டிய நிலையில் இருந்­தது.

அந்த நெருக்­க­டியை வெற்றி கொள்­வதில் கவனம் செலுத்­திய முக்­கிய இரா­ஜ­தந்­தி­ரிகள், ஐ.நா. பொதுச்­செ­ய­ல­ரு­ட­னான கூட்­ட­றிக்கை விட­யத்தில் கோட்டை விட்டு விட்­டனர்.

ஐ.நா. அதி­கா­ரி­களால் அவ­சர அவ­ச­ர­மாகத் தயா­ரிக்­கப்­பட்ட அந்தக் கூட்­ட­றிக்கை, பொறுப்­புக்­கூ­ற­லுக்கு அர­சாங்கம் இணங்­கு­வது போன்று சூட்­சு­ம­மாகத் தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­ததை இலங்­கையின் மூத்த இரா­ஜ­தந்­தி­ரிகள் சரி­யாக கண்­டு­கொள்­ள­வில்லை.

பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரத்தில் கடந்த ஆண்டு, ஐ.நாவுடன் இணங்கிச் செயற்­பட, தற்­போ­தைய மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம் முடிவு செய்த போது கடு­மை­யான விமர்­ச­னங்­களை எதிர்­கொள்ள நேரிட்­டது.

இந்த அர­சாங்கம் படை­யி­னரைக் காட்டிக் கொடுத்து விட்ட­தா­கவும், விசா­ர­ணை­களில் சர்­வ­தேச தலை­யீட்­டுக்கு வழி­கோலி விட்டதாகவும், மஹிந்த ராஜபக் ஷ தரப்பு கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தது.

இதற்கு மறுப்பு வெளி­யிட்­டி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஜெனீவா தீர்­மா­னத்­துக்கு இணங்க வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தற்கு, 2009 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூனுடன் இணைந்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வெளி­யிட்ட கூட்டறிக்கை தான் காரணம் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

கடந்த மே மாதம் 15ஆம் திகதி மஹிந்த ராஜபக் ஷக்கு, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர எழு­தி­யி­ருந்த ஒரு நீண்ட கடி­தத்­திலும் கூட இந்த விடயம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது.

“2009ஆம் ஆண்டில், ஐ.நா. பொதுச்­செ­ய­ல­ருடன் இணைந்து நீங்கள் வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கையில், பொறுப்­புக்­கூறல் தொடர்­பாக இலங்கை அர­சாங்­கத்தின் சார்­பாக, அளித்­தி­ருந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் வகையில் தான், 2015ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்­துக்கு இணை அனு­ச­ரணை வழங்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது” என்று குறிப்­பிட்­டி­ருந்தார் மங்­கள சம­ர­வீர.

ஐ.நா. பொதுச்­செ­ய­ருடன் இணைந்து வெளி­யிட்ட கூட்­ட­றிக்கை ஒரு தொட­ரான அர­சியல் விளை­வு­க­ளுக்கு கார­ண­மாக அமையும் என்றோ, அதுவே தன்னைப் படு­கு­ழியில் தள்­ளி­விடும் என்றோ மஹிந்த ராஜபக் ஷ ஒரு­போதும், எண்­ணி­யி­ருக்­க­வில்லை.

இந்தக் கூட்­ட­றிக்­கையின் விளை­வினால் தான், ஐ.நாவின் தலை­யீடு இலங்­கையில் ஏற்­பட்­டது என்­பது தொடர்­பாக, 2010ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்தில் ஒரு சூடான விவாதம் நடந்­தி­ருந்­தது.

ranil  மஹிந்த ராஜபக் ஷ"  ஐ    ஐ.நா.வின் பொறியில் மாட்­டிவிட்ட பான் கீ முன்!! : (முள்­ளி­வாய்க்கால் தொடக்கம்   ஜெனீவா வரை–02) ranilஅப்­போ­தைய எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும், அப்­போ­தைய வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரி­சுக்கும் இடையில் நடந்த அந்த விவாதம் என்­ன­வென்று, இந்தத் தொடரின் மற்­றொரு சந்­தர்ப்­பத்தில் தரப்­படும்.

இந்த நிலையில், போரின் போது நடந்த மீறல்­க­ளுக்குப் பொறுப்­புக்­கூற வேண்டும் என்­ப­தற்குப் பிள்­ளையார் சுழி போட்ட இரண்­டா­வது நபர் யார் என்­பது பற்றி இப்­போது பார்க்­கலாம்.

இறு­திக்­கட்டப் போர் நடந்து கொண்­டி­ருந்த கால­கட்­டத்தில், இலங்­கையில் அமெ­ரிக்கத் தூது­வ­ராக இருந்­தவர் ரொபேர்ட் ஓ பிளேக். போரின் முடிவு எவ்­வா­றா­ன­தாக இருக்­கக்­கூடும் என்று, போர் முடி­வ­டை­வ­தற்கு கிட்­டத்­தட்ட மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே சரி­யாகக் கணித்­தவர் இவர்.

ad69f288-d56d-4fe9-84ec-8936621c477c1  மஹிந்த ராஜபக் ஷ"  ஐ    ஐ.நா.வின் பொறியில் மாட்­டிவிட்ட பான் கீ முன்!! : (முள்­ளி­வாய்க்கால் தொடக்கம்   ஜெனீவா வரை–02) ad69f288 d56d 4fe9 84ec 8936621c477c1ரொபேர்ட் ஓ பிளேக்.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான இறு­திக்­கட்டப் போர், தொடங்­கப்­பட்ட காலத்தில்- 2006ஆம் ஆண்டு இவர், வொஷிங்­டனில் உள்ள அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பி­யி­ருந்த ஒரு தகவல் குறிப்பில், மன்­னாரில் தொடங்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ நடவடிக்­கைகள், புலி­களை அழிவு நிலைக்குக் கொண்டு செல்வததற்கான வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்த இராஜதந்திர தகவல் குறிப்பு பின்னர் விக்கிலீக்சில் வெளியாகியிருந்தது.

போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் தான், இலங்கைக்கான தூதுவராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக்கின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. அவர் அதற்கடுத்து, தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் பதவிக்குப் பிரேரிக்கப்பட்டிருந்தார்.

புதிய உயர் பதவிக்குச் செல்லவிருந்த ரொபேர்ட் ஓ பிளேக், அலரி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷச் சந்தித்தார். போரில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக் கூறுவதற்கும், இலங்கையில் இருந்து செல்வதற்கு முன்னர் விடைபெறுவதற்குமான மரியாதை நிமித்தமான சந்திப்பு அது.

அந்தச் சந்திப்பில் நடந்தது என்ன? பிளேக் எவ்வாறு பொறுப்புக்கூறலுக்குப் பிள்ளையார் சுழி போட்டார்?

SHARE