மட்டக்களப்பில் புகையிரத்துடன் எஞ்சின் மோதி விபரத்து போக்குவரத்து பாதிப்பு

281

 

மட்டக்களப்பில் புகையிரத்துடன் எஞ்சின் மோதி விபரத்து போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட புகையிரத விபத்துகாரணமாக மட்டக்களப்பிலிருந்து ஒருபுகையிரதப் பெட்டி சேதமடைந்துள்ளதுடன், புகையிரதப் பாதையும் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்புபுகையிரத நிலைய பிரதம நிலைய அதிபர் எம்.பி.கபூர் தெரிவித்தார்.

unnamed-6 unnamed-7 unnamed-8

இன்று வியாழக்கிழமை காலை கொழும்புக்குப் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த புகையிரதத்தில்மற்றைய புகையிரதத்தின் எஞ்சின் மோதியதில் புகையிரதப் பெட்டி ஒன்று சேதமடைந்துள்ளதுடன், எஞ்சின்ஒன்றும் புகையிரதப் பாதையிலிருந்து தடம் புரண்டு புகையிரதப் பாதையும் சேதமடைந்துள்ளது.

 

காலை 5 மணி 05 நிமிடமளவில் நடைபெற்ற இந்த விபத்து காரணமாக புகையிரதம் தடம்புரண்ட போதிலும்பயணிகள் எவருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் பிரதம நிலைய அதிபர் எம்.பி.கபூர்தெரிவித்தார்.

 

இதன் காரணமாக காலை 6.15க்குப் புறப்படும் புகையிரதம் ஒரு பெட்டி குறைக்கப்பட்டு பயணத்தினைமேற்கொண்டுள்ளது. இருந்தாலும் பகல் 10.25க்கு பொலநறுவை நோக்கிச் செல்லும் புகையிரதத் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.

 

அதே நேரம், புகையிரதப் பாதைத்திருத்த வேலைகளுக்காக தற்போது மாகோவில் இருந்து திருத்தச்செயலணியும், பாதையிலிருந்து கீழே விழுந்துள்ள புகையிரதப் பெட்டியைத் தூக்கி பாதையில் தூக்கிநிறுத்துவதற்கான இயங்திரங்களும் ஏனைய இயந்திரங்களும் மட்டக்களப்புக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்தஇயந்திரங்கள் மட்டக்களப்பு புகையிரத நிலையத்துக்கு வந்தவுடன் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 

புகையிரதத்தின் ஒரு புகையிரதப்பெட்டி சேதமடைந்தமையினாலும், பாதையிலிருந்து விலகியதனாலும்தற்போதைய நிலையில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு மாலை5.20 மணிக்கு புறப்படும் புகையிரதத்தின் பயணத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் பிரதம நிலையஅதிபர் எம்.பி.கபூர் தெரிவித்தார்.

 

எப்படியிருந்தாலும் இரவு 8.15க்கு கொழும்புக்குப் புறப்படும் நேரத்துக்கு முன்பாக திருத்த வேலைகளை நிறைவுசெய்து கொள்ள முடியும் என்றும் பிரதம நிலைய அதிபர் எம்.பி.கபூர் மேலும் தெரிவித்தார்

SHARE