எழுக தமிழுக்கு ஆதரவு வழங்கிய தீவிரவாதிகளை ஓரங்கட்டுவோம்; பேரணியில் பொதுபலசேனா

285

 

 

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உட்பட தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை இனவாத விச ஜந்துக்கள் என விழித்துள்ள  பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர், தொடர்ந்தும் அவர்கள் இனவாதத்தை தூண்டினால் அழித்துவிடுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

image-0-02-06-b544a1613c1b20d3d82eaf13ee49a4536d71762dd143aa2a4a5d3a8c4a5af6c3-v 14502946_1793604014255852_8466753006627461319_n 625-0-560-320-160-600-053-800-668-160-90-1

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 ஆம் திகதி பேரெழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் வட மாகாண முதலமைச்சர், வடக்கில் தொடரும் சிங்கள, பௌத்த மயமாக்கலுக்கு எதிராக முன்வைத்த கருத்துகளுக்கு  கண்டனம் எதிர்ப்பு  தெரிவித்து  இன்று வவுனியாவில் நடத்திய கண்டனப் பேரணியின் போதே ஞானாசார தேரர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் இன்று காலை 9.30 அளவில் ஒன்று திரண்ட பொது பல சேனா அமைப்பினர் அங்கிருந்து வவுனியா நகரை நோக்கி கண்டனப் பேரணியொன்றை நடத்தினர்.

இதற்கு பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர் தலைமை தாங்கிகார்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட தமிழ் அரசியல் தலைவர்களை இனவாதிகளாக அடையாளப்படுத்தி கோசங்களை எழுப்பியதுடன், முதலமைச்சர் உட்பட எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டோர் அனைவரும் தீவிரவாதிகள் என்றும் அவர்களை முற்றாக ஓரம்கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்திய  பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

சிங்கள பௌத்த கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் கண்டிய நடனக் கலைஞர்களையும் இந்த பேரணியில் இணைத்துக்கொண்டிருந்த பொதுபல சேனா அமைப்பு, ஸ்ரீலங்கா ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும், அதனால் தமக்கு எந்தவொரு இடத்திலும் சிங்கள, பௌத்த மதத்தை பரப்பவும், புத்தர் சிலைகளையும், விகாரைகளையும் அமைப்பதற்கும் அதிகாரமும், உரிமையும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்த நிலையில், சுமார் 40 நிமிட நேரம் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், இறுதியில்  மாவட்ட அரசாங்க அதிபர், வட மாகாண ஆளுநரின் செயலளார் ஆகியோரிடம் கலபொட அத்தே ஞானசாரதேரர்  மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் எமது இந்த போராட்டம் இந்தநாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. சாதாரண தமிழ் மக்களுடன் எமக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. சாதாரண தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினைகளே சிங்கள மக்களுக்கும் காணப்படுகின்றன.

எனினும் வங்குரோத்து அரசியலில் ஈடுபட்டுள்ள விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தங்களது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக தமது மக்களை இனவாதத்திற்குள் இட்டுச் செல்கின்றனர்.

1981ஆம் ஆண்டு கொழும்பில் 51 வீதமாக இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை, 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீட்டின்போது 28 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளமை தெரியவந்தது.

இதற்கு பிரதான காரணம் யுத்தம் காரணமாக யாழ்ப்பாணம் உட்பட வடக்கிலிருந்து வந்து கொழும்பில் குடியேறிய தமிழ் மக்கள் காரணமாகவே சிங்கள மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது. ஆனால் சிங்கள மக்கள் ஒருபோதும் போரினால் பாதிக்கப்பட்டு கொழும்பு வந்து குடியேறிய தமிழ் மக்களை வெளியேறி போகுமாறோ, ஆலயங்களை அகற்றிக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கவும் இல்லை.

அச்சுறுத்தல் விடுக்கவும் இல்லை. ஆனால் அரசியல் யாப்பிலேயே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ள பௌத்த மதத்தின் அடையாளங்களாக புத்தர் சிலைகளை வைப்பதற்கும், விகாரைகளை அமைப்பதற்கும் வட மாகாண சபையும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் சிறப்புரிமையைப் பெற்றா இவ்வாறு நடந்து கொள்கின்றார். அவருக்கு இவ்வாறு செயற்பட யார் அதிகாரம் வழங்கியது.

விக்னேஸ்வரன் உட்பட இனவாதிகளுக்கு எதிரான ஆரம்பமே் மாத்திரமே இந்த போராட்டம் தொடர்ந்தும் இவ்வாறான இனவாதிகளுக்கு எதிராக போராட்டங்கள் தொடரும்.  சிங்கள மக்களை இணைத்து இனவாத விச ஜந்துக்களை  நசுக்கி அழித்துவிடுவோம் என்பதை மிகத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும், அதிகரித்த இராணுவப் பிரசன்னத்தை குறைக்குமாறும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கடந்த 24 ஆம் திகதி பேரெழுச்சியுடன் எழுக தமிழ் பேரணி இடம்பெற்றிருந்தது.

இதற்குத் தலைமை தாங்கியிருந்த வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்பட்டுவரும் சிங்கள பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ பிரசன்னம் காரணமாக தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளை பட்டியலிட்டிருந்தார்.

நான்காம் இணைப்பு

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உட்பட தமிழ் மக்கள் பேரவையினரை தீவிரவாதிகள் என அடையாளப்படுத்தியுள்ள சிங்கள பேரினவாத அமைப்பான    பொதுபல சேனா, அவர்களை முற்றாக ஓரம்கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

 

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 ஆம் திகதி பேரெழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும், வட மாகாண முதலமைச்சருக்கும்  எதிர்ப்பு  தெரிவித்து  இன்று வவுனியாவில் நடத்திய கண்டனப் பேரணியின் போதே பொது பல சேனா இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றது.

வவுனியா – இறம்பைக்குளம் பகுதியில் இன்று காலை 9.30 அளவில் ஒன்று திரண்ட சுமார் 150 பேர் அடங்கிய பொது பல சேனா அமைப்பினர் அங்கிருந்து வவுனியா நகரை நோக்கி கண்டனப் பேரணியை ஆரம்பித்தனர்.

 

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியின் ஆரம்பத்தில் வெளி இடங்களிலிருந்து பேரூந்துகளில் அழைத்துவரப்பட்ட சுமார் 150 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

 

எனினும் பேரணி வவுனியா நகரை அண்மித்த போது மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் இணைந்துகொண்டு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட தமிழ் அரசியல் தலைவர்களை இனவாதிகளாக அடையாளப்படுத்தி கோசங்களை எழுப்பினர்.

 

அது மாத்திரமன்றி வட மாகாண முதலமைச்சர் உட்பட எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டோர் அனைவரும் தீவிரவாதிகள் என்றும் அவர்களை முற்றாக ஓரம்கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி  பதாதைகளையும் தாங்கிய வண்ணம் கோசம் எழுப்பினர்.

 

அதேவேளை சிங்கள பௌத்த கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் கண்டிய நடனக் கலைஞர்களையும் இந்த பேரணியில் இணைத்துக்கொண்டிருந்த பொதுபல சேனா அமைப்பு,ஸ்ரீலங்கா ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும், அதனால் தமக்கு எந்தவொரு இடத்திலும் சிங்கள,பௌத்த மதத்தை பரப்பவும், புத்தர் சிலைகளையும், விகாரைகளையும் அமைப்பதற்கும் அதிகாரமும், உரிமையும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

வவுனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்த நிலையில், கண்டனப் பேரணியின் இறுதியில்  மாவட்ட அரசாங்க அதிபர், வட மாகாண ஆளுநரின் செயலளார் ஆகியோரிடம் கலபொட அத்தே ஞானசாரதேரர்  மகஜர் ஒன்றையும்கையளித்துள்ளார்.

 

வவுனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்த பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தலைமையிலான பேரணியில் கலந்துகொண்டவர்கள் அங்கு சுமார் 40நிமிடங்கள் வீதியை வழிமறித்து ஆர்ப்பட்டத்திலும் ஈடுபட்டனர்.

 

வடக்கில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும், அதிகரித்த இராணுவப் பிரசன்னத்தை குறைக்குமாறும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கடந்த 24 ஆம் திகதி பேரெழுச்சியுடன் எழுக தமிழ் பேரணி இடம்பெற்றிருந்தது.

 

இதற்குத் தலைமை தாங்கியிருந்த வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்பட்டுவரும் சிங்கள பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ பிரசன்னம் காரணமாக தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளை பட்டியலிட்டிருந்தார்.

 

நாட்டை அராஜகத்திற்கு உள்ளாக்கி பிரிவினைக்கு வலுவூட்டும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட எழுக தமிழ் பேரணியை நடாத்திய அனைவரும் தீவிரவாதிகள் என தெரிவித்துள்ள பொதுபலசேனா, இவர்கள் அனைவரையும் ஓரங்கட்டுவோம் என வவுனியாவில் இன்று முன்னெடுத்துள்ள கண்டனப் பேரணியில் தெரிவித்துள்ளது.

வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு எதிராக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பாதாதைகளை கண்டனப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியவாறு, கோஷங்களையும் எழுப்பியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிங்கள கலாசாரத்தை  எடுத்துக்காட்டும் முகமாக கண்டிய நடனம் மற்றும் இசை வாத்தியங்களும் இந்த பேரணியில்  இசைக்கப்பட்டன.

கண்டனப் பேரணி ஆரம்பிக்கப்பட்டபோது  சுமார் 150 பேர் மாத்திரம்  கலந்துகொண்ட நிலையில், தற்போது 500 க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

SHARE