திருமணமாகி சுமார் 46 ஆண்டுகள் பின்னர் 70 வயதில் முதல் குழந்தை பெற்ற பாட்டி-

315

 

child-birth-70-yearsமகிழ்ச்சி: 70 வயதில் முதல் குழந்தை பெற்ற பாட்டி

அம்ரிஸ்டர்: 70 வயதில் குழந்தை பெற்ற பஞ்சாப் மாநிலத்தை முதியவர் ஒருவர், எனக்கு ஒன்றும் அவ்வளவு வயதாகி விடவில்லை. தற்போது தான் எனது வாழ்க்கை முழுமையடைந்துள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மொஹிந்தர் சிங் கில் – தல்ஜிந்தர் கவுர் தம்பதியினருக்கு திருமணமாகி சுமார் 46 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், அவர்களுக்கு குழ்தை பேறு கிடைக்காததால் மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளனர்.

கிட்டத்தட்ட அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து விட்டதாக கூறிய அந்த தம்பதியினர், செயற்கை கருவுறுதல் சிகிச்சை மூலம் தற்போது குழந்தை பிறந்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு அர்மான் என்று பெயரிட்டுள்ளனர் அந்த தம்பதியினர்.

நமது நாட்டில் மலட்டுத்தன்மை மிகவும் சபிக்கப்பட்ட ஒன்று என வருந்திய தல்ஜிந்தர் கவுர், தங்களது பிரார்த்தனை கடவுளுக்கு எட்டியுள்ளது என்றார். மேலும், தற்போது தான் தனது வாழ்க்கை முழுமையடைந்துள்ளது என்றும், தான் சக்தியுடன் இருப்பதாக தெரிவித்தார். மேலும், தனது கணவர் தனக்கு மிகவும் உறுதுணையாகவும், உதவியாகவும் இருக்கிறார் என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தனது வயதை நினைத்து கவலை கொண்டிருந்தாலும், தங்களது குழந்தையை கடவுள் பார்த்துக் கொள்வார் என மொஹிந்தர் சிங் கில் கூறினார்.

செயற்கை கருவுறுதல் முறையில் அந்த குழந்தை பிறந்தாலும் ,அந்த தம்பதியின் சொந்த விந்தணு உள்ளிட்டவைகள் மூலம் கருவுற செய்துள்ளனர் மருத்துவர்கள்.

தல்ஜிந்தர் கவுர் மிகவும் நலிவடைந்திருந்ததால் முதலில் இந்த சிகிச்சை மேற்கொள்ளலாமா என்று யோசித்த மருத்துவர், அதனையடுத்து அவரை பரிசோதனை செய்த பின்னர் சிகிச்சை மேற்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.

இதுபோன்ற சம்பவம் இந்தியாவில் இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர், கடந்த 2008-ஆம் ஆண்டில் 72 வயது உத்தரப்பிரதேச மாநில பெண் ஒருவருக்கு இதே போன்ற சிகிச்சை முறை மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்த சம்பவம் நினைவிருக்கலாம்.

SHARE