ஜெயலலிதாவின் உண்மை நிலையை வெளியிட்டது அப்பல்லோ

253

 

முதல்வர் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக அப்பல்லோ மருத்துவம் உண்மையான தகவலை வெளியிட்டுள்ளது.

cm-taste-amma-mess-foodc

கடந்த 22 ஆம் திகதி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்கு பின்னரே அவருக்கு நுரையீரல் தொற்று நோய் இருப்பது தெரியவந்தது.

இதனால் லண்டன் மருத்துவர் ரிச்சர்டு தமிழகம் வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சைக்கான ஆலோசனைகளை அப்பல்லோ மருத்துவர்களுக்கு வழங்கினார்.

அதன் பேரில் தற்போது முதலமைச்சர் உடல்நிலையில் சீரான முன்னெற்றம் ஏற்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், தற்போது ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் குணமடைந்து வருகிறார்.

சில நேரங்களில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அதற்கு கொடுக்கப்படும் மாத்திரைகள் பலன் அளிக்காததால் வெண்டிலேட்டர் உதவிகொண்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா உடல்நிலை குறித்த வதந்திகளை மட்டும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

View image on Twitter
SHARE