வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா வெகு விமர்சையாக இன்று பாடசாலை அதிபர் திரு த. அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலை பழைய மாணவர் சங்கம் , அபிவிருத்தி குழு இணைந்து இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இருந்தனர். ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு சகல ஆசிரியர்களிர்கும் ஒரே மாதிரியான உடைகள் பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கப்பட்டு ஆசிரியர்களுக்கான விஷேட போட்டி நிகழ்ச்சிகளும் நடாத்த பெற்று அவர்களிற்கான பரிசில்களும் வழங்கப்பட்டு ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். மதிய போசன நிகழ்வுடன் விழா இனிதே நிறைவடைந்தது.