எந்தவகையிலாவது காத்தான்குடி கடற்கரை மெறைன் வீதியின் செப்பனிடும் பணியை இடைநிறுத்த பாரிய முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அல்லாஹ்வின் உதவியால் அப்பணி நிறைவடையும் இன்ஷா அல்லாஹ்……

241

 

எந்தவகையிலாவது காத்தான்குடி கடற்கரை மெறைன் வீதியின் செப்பனிடும் பணியை இடைநிறுத்த பாரிய முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அல்லாஹ்வின் உதவியால் அப்பணி நிறைவடையும் இன்ஷா அல்லாஹ்……

b63 hrs_5003

கிழக்கு மாகாணசபை மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கொங்ரீட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டுவரும் காத்தான்குடி மெரைன் ரைவ் வீதியின் அபிவிருத்தி பணிகளை எவ்வாறு என்றாலும் நிறுத்த வேண்டும் என்பதற்காக எவ்வித விஞ்ஞான அறிவும் அற்ற ஒருவர் பொய்யான ஆவணங்களை கௌரவ ஆளுனர் வரை அனுப்பி அவ்அபிவிருத்தியினை நிறுத்த முற்பட்டிருந்தார்.

அந்த விடயத்தினை நாங்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்தியிருக்கின்றோம். இவ்வாறான மோசமான எண்ணங்கள் இருக்கக் கூடாது என்பதனையும் அவருடைய அறியாமையினையும் அவருடைய கடிதத்தினை சுட்டிகாட்டி குறித்த அதிகாரிக்கு நாங்கள் தெளிவுபடுத்தியிருந்தோம்.

எனவே இத்தகைய அதிகாரிகள் தங்கள் திணைக்களத்தினுடைய அறிவுறுத்தல்கள், அதற்குரிய ஆய்வு அறிக்கைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அதற்குரிய சட்டங்களை உரிய முறையில் அறிந்து கொள்ளாமல் இவ்வாறு வெள்ளை காகிதங்களில் கடிதங்களை எழுதி அனுப்புகின்ற நிலைமை மாற வேண்டும் என்பதற்காக இன்று நாங்கள் அந்த குறித்த அதிகாரியை சபையிலே எழுப்பி அவரிடம் கேட்டபோது அவரால் உரிய பதில் எதுவும் அளிக்க முடியவில்லை.

எனவே எதிர்காலத்தில் இவ்வாறான மோசமான விடயங்களில் அவர்கள் ஈடுபடாமல் அவர்களினுடைய கடமைகளை உரிய விதத்தில் முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் இன்று கடுமையான உத்தரவினை பிறப்பித்திருந்தோம்.

SHARE