ஜோதிகாவுடன் சேர்ந்து நடிப்பது குறித்து பதில் அளித்தார் சூர்யா.சூர்யாவை மணந்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார் ஜோதிகா. இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆனார். அவ்வப்போது விளம்பர படங்களில் மட்டும் தலைகாட்டுகிறார். இதற்கிடையில் ஜோதிகாவுக்கு படங்களில் நடிக்க அழைப்பு வருகிறது. ஆனால் ஏற்காமல் விலகினார். சமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ் தான் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஜோதிகாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு இன்னும் அவர் பதில் சொல்லவில்லை.
இந்நிலையில், ‘ஜோதிகா மீண்டும் நடிக்க வருவாரா? என்று கேட்டதற்கு சூர்யா பதில் அளித்தார். அவர் கூறியதாவது: பச்சைக்கிளி முத்துச்சரம், மொழி போன்ற படங்களில் ஜோதிகா பிரமாதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அவர் மீண்டும் நடிக்க வருவதாக இருந்தால் அது சவாலான வேடமாகவும், அர்த்தமுள்ள வேடமாகவும் இருக்க வேண்டும். சில ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறார். அவருக்கு ஏதாவது பிடித்தால் நிச்சயம் நடிப்பார். என் படத்தில்தான் அவர் நடிக்க வேண்டும் என்ற எந்த குறிப்பிட்ட எண்ணமும் எனக்கு இல்லை என்றார்