தென்னிந்தியாவிலிருந்து சென்றவர்களே இலங்கை தமிழர்கள்- தவறாக புரிந்து கொண்ட தலாய்லாமா

265

 

dalailama-4112. 10. 2016 புதன்கிழமை திபேத்திய ஆன்மீகத்தலைவரும், இந்தியாவில் புகலிடம்பெற்று வாழ்ந்து வரும்திபேத்திய இனத்தலைவருமான திரு. 14வது தலைலாமா அவர்கள் சுவிஸ் பேர்ன் மாநில மற்றும் சுவிஸ் நடுவன்அரசின் சிறப்பு அழைப்பினை ஏற்று சுவிற்சர்லாந்திற்கு வருகைதந்திருந்தார்.

இவருக்கான அரசவரவேற்பு பல்சமய இல்லத்தில் மிகு சிறப்பாக நடைபெற்றது. காலை 07.00 மணிமுதல்புலம்பெயர்ந்து வாழும் பலநூறு திபேத்தியர்கள் இவரின் வருகைக்காக பல்சமய இல்லத்தின் முன்றலில்சிறுகுழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

பல இளவயதினரும், சிறியோர்களும் தமது திபேத்பாரம்பரிய உடையுடன் வருகைதந்திருந்தனர். பல்பண்பாட்டுநிகழ்வுகளையும் முன்றலில் ஆற்றினர். 12.30 தலைலாமா வருகைதந்தார். சுவிஸ் அரசின்சிறப்புக்காவற்துறையினரும், தனியார் பாதுகாப்பு நிறுவனமும் பாதுகாப்பு அளிக்க உள்நுழைந்தார். சீனப்பேரரசின்அறிவிக்கப்படாத முதல் எதிராய தலைலாமா விளங்குகிறார். ஆகவே இவருக்கான சிறப்புப் பாதுகாப்பு இவர் செல்லும்இடங்களெல்லாம் வழங்கப்படுகிறது.

உள்நுழைந்த தலைலாமா அவர்களை எட்டு சமயத்தலைவர்களும், பேர்ன் மாநில அரசதலைவரும், நடுவன் அரசின்பிரதிநிதிகளும் வரவேற்றனர். சைவநெறிக்கூடம் – அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்அருட்சுனையர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

தலைலாமா அவர்களுக்கான விருந்தளிப்பினை சைவநெறிக்கூடம் பொறுப்பேற்றிருந்தது. ஈழத்தமிழ்ச் சைவ உணவுசைவநெறிக்கூடத்தால் சமைக்கபட்டடிருந்தது இவ்விருந்தோம்பலின் சிறப்பாகவும், யாவரையும் கவர்ந்தவிடயமாகவும் அமைந்தது. உணவினை வழங்கிய யாவரும் ஈழத்தமிழ்ப் பெண்களா இருந்தனர், இவர்கள் தமிழ்ப்பாரம்பரிய உடையணிந்து உணவு வழங்கினர். சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட 150 விருந்தினர்கள்இவ்விருந்தோம்பலில் பங்கெடுத்திருந்தனர். குறிப்பாக சுவிஸ் அரசியல் பிரமுகர்களும் சுவிஸ் அதிகாரிகளும்,பல்சமயத்தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்த விருந்தாளிகளில் அடங்குவர். விருந்தோம்பலிற்கு அடுத்து பேராளர்உரையரங்கு நடைபெற்றது. அதற்கு மேலும் 150 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

விருந்தோம்பலை அடுத்து வரவேற்பு உரையினை பேர்ன் அரசதலைவர் திரு. சப்பேர் அவர்கள் ஆற்றினார்கள்.பல்சமய இல்லத்தின் அறக்கட்டளைத்தலைவியாக விளங்கும் திருமதி கேர்டா கௌவுக் அவர்கள் பல்சமயத்தின்பெயரில் வரவேற்புரை ஆற்றினார்.

அடுத்த நிகழ்வாக தலைலாமா அவர்கள் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்குள் நுழைந்தார்.செந்தமிழ்த் திருமறை வழிபாடு கருவறையில் நடைபெறும் திருக்கோவில் இதுவாகும்.

கோவிலுக்குள் வருகையளித்த தலைலாமா அவர்களை செந்தமிழருட்சுனையர்கள் திருநிறை. சிவருசி. தர்மலிங்கம்சசிக்குமார், திருநிறை. திருச்செல்வம் முரளிதரன், திருநிறை. சிவலிங்கம் சுரேஸ்குமார், திருநிறை. குழந்தைவிக்னேஸ்வரன், திருநிறை. இராஜேந்திரன் கிரிதரன், திருநிறை. நடராஜா தர்மசீலன், திருநிறை. காராளசிங்கம்விஜயசுரேஸ், திருநிறை. நாகராச ஜெயக்குமார், திருநிறை. தர்மசீலன் கலாமதி, திருநிறை. வசந்தமால ஜெயக்குமார்,திருநிறை. தர்னன் செல்லையா மற்றும் சைவநெறிக்கூடுத்தின் மதியுரைஞர்கள் திருநிறை. சிவயோகநாதன் ஐயா(நடராஜா யோகேந்திரன்), திருநிறை. வினாசித்தம்பி தில்லையம்பலம் மற்றும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்அடியார்கள், குழந்தைகள் முன்வந்து வரவேற்றனர்.

ஈழத்தில் இருந்து வருகை தந்திருந்த திருநிறை. மதுசூதனன் குழுவினர் மங்கள இசைவழங்க, தலைலாமா அவர்கள்தமிழ்ச் செல்வங்கள் சூழ்ந்து பூங்கொத்து அளிக்க, திருக்கோவிலை வலம் வந்து ஞானலிங்கேச்சுரத்தில் ஈழத்தின்வடிவத்தி அமையப்பெற்றிருக்கும் ஈகைலிங்கத்திற்கு சிறப்பு வழிபாட்டினை செந்தமிழ்முறையில் ஆற்றினார்.சூழந்திருந்த குழந்தைகளும், அருட்சுனையர்களும் செந்தமிழ்த் திருமறை ஓதினர்.

இதற்கடுத்து கருவறையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஞானலிங்கேச்சுரருக்கு சிறப்பு வழிபாட்டினை ஆற்றினார்.மலர்களை அர்ச்சித்தும், நிறைவில் தீபவழிபாடு ஆற்றியும் தலைலாமா எம்பெருமானை வலம்வந்தார். வழிபாட்டின்நிறைவில் சைவநெறிக்கூடத்தின் சார்பில் தலைலாமா அவர்களுக்கும், பேர்ன்மாநில அரசதலைவருக்கும் சிறப்புமதிப்பளிப்பு பூமாலை அணிவித்தும், சைவநெறிக்கூடத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட பொன்னாடைபோர்த்தியும்மதிப்பளித்தனர்.

சுவிற்சர்லாந்து தேசியத் தொலைக்காட்சி எஸ்.ஆர்.எப் அனைத்து நிகழ்வுகளையும் பதிவுசெய்து உடன் வெளியிட்டதுஇங்கு குறிப்பிடத்தக்கது.

திபேத்திய ஆன்மீகத் தலைவர் தலைலாமா அவர்களுடன் பல்சமய இல்லத்தில் நடைபெற்றபேராளர்கள்கலந்துரையாடலில் சைவநெறிக்கூடம்

திருமதி கலாநிதி. பிறிகிற்றா அவர்களின் நெறியாள்கையில் தலைலாமா தலைமையில் பேராளர்கள்கலந்துரையாடல் நடைபெற்றது. பல்சமயத்தலைவர்களும் பங்கெடுத்த இக்கலந்துரையாடலில் சிவருசி. தர்மலிங்கம்சசிக்குமார் அவர்கள் சைவநெறிக்கூடத்தின் சார்பில் கலந்துகொண்டார்.

சமயங்களின் சடங்குகள், பணிகள், ஆன்மீகம், மனிதனின் மேன்மை என இக்கலந்துரையால் பல விடயங்களைத்தொட்டுச் சென்றது. 81 வயதினை அடைந்திருக்கும் தலைலாமா அவர்கள் உரையாற்றுகையில் தான் ஒருபௌத்தனாக தன் சமயத்தை வாழ்வதாகவும், ஆன்மீக அனுபவத்தை மனிதர்களுடன் பகிர்வது தன் பணி எனவும்விளக்கினார். மேலும் இந்தியாவில் தான் வாழ்வதாகவும், அங்கு சமயத்தலைவர்களிடம் ஒரு வேண்டுகோளைமுன்வைத்ததாகவும் உரைத்தார். இந்து சமயத்தில் சாதியை ஒழியுங்கள். சாதி இன்றைய உலகிற்கு பொருந்தாதுஎன்றார்.

சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் உடன் ஒரு பதிலை அளித்தார். இங்கு அமைந்திருக்கும் ஞானலிங்கேச்சுரர்திருக்கோவில் சாதிமறுப்புத் திருக்கோவில் ஆகும். நாங்கள் இங்கு சீர்திருத்த அன்புவழிச் சைவநெறியினைஒழுகிறோம் என்றார். பதில் கேட்டு மகிழ்ச்சி தெரிவித்த தலைலாமா அவர்களிடம் ஒருகேள்வியை பொதுவரங்கில் சசிஐயா அவர்கள் வினாவினார்:

‘ஒரு தேசிய இனமான ஈழத்தமிழர்களாகிய நாங்கள் உலகில் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகிறோம்.எங்களுக்கு ஒரு நாடு இல்லை. எங்களுக்கு இறையாண்மை உள்ள அரசு இல்லை. இங்கு எம்முடன் அருகில்அமர்ந்திருக்கும் குர்திஸ் இனத்தவர்கள் நிலையும் இதுவே. பல நாட்டில் நாங்கள் பலவாறு வேறுபட்டு வாழ்ந்தாலும்,நாங்கள் ஏதிலிகளே. திபேத் இனத்தவர்களாகிய நீங்கள் கடந்து வந்த பாதையில் நாங்களும் காலத்தைக் கடந்துபயணிக்கின்றோம். ஆன்மீகத்தலைவராக உங்கள் ஆன்மீக அனுபவத்தில், எமது நிலைக்கும் உங்கள் நிலைக்கும்நிலவும் சூழலை எவ்வாறு எதிர்நோக்குகின்றீர்கள், உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது?”

இதற்கு பதில் அளித்த தலைலாமா அவர்கள் தன் உரையினைத் தொடங்கும்போது தென்னிந்தியத் தமிழர்கள் என்றசொற்பதத்தைப் பயன்படுத்தினார், இந்தியாவில் இருந்து குடியேறிய தமிழர்கள் எனவும் தன் உரையினைத் தொடரமுற்பட்டபோது அதனை உடன் மறுத்த சிவருசி. சசிக்குமார் ஐயா அவர்கள் நாங்கள் தென்னிந்தியர்கள் அல்லர்.ஈழத்தின் பூர்வீகத் தமிழர்கள் எனத் திருத்தி விளக்கினார்.

விளக்கத்தை ஏற்றுக்கொண்ட தலைலாமா, தன் சொல்லைத் திருத்தி, ஈழத்தமிழர்கள் தொடர்பில் அரசியல்ரீதியில்பதில்களிக்க எனக்கு அதிகாரம் இல்லை. அதுபோல் குர்திஸ் இனத்திற்கும் அரசியல் ரீத்தியல் பதில் அளிக்க முடியாது.நான் ஒரு சமயத்தலைவர். அதன்படி சொல்வது, உங்கள் உரிமைக்கா வன்றுமுறை அற்று தொடர்ந்து உறுதியாகபோராடுங்கள். எனது அனுபவத்தில் திபேத்தியர் எங்கள் அறவழிப்போராட்டத்தினை ஏற்றுக்கொண்ட சீனமக்களும்உள்ளார்கள். ஏன் அவர்கள் திபேத்தின் உரிமையினை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், நாங்கள் அவர்களுக்குவன்முறையில் எமது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. ஆகவே அவர்கள் எங்கள் அறப்போரை ஆதரிக்கின்றனர்.அதுபோல் நீங்கள் உங்கள் உரிமைக்காக அறவழியில் உரத்துக்குரல் கொடுங்கள் என்றார்.

முந்நூறுக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள்   இக்கல்ந்துரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.சைவநெறிக்கூடத்திற்கு 30 சிறப்பு இருக்கைக்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. சுவிசின் பல ஊடகங்களும் செய்திகளைப்பதிவுசெய்தன. சுவிஸ் அரசவானொலி நேரடி நிகழ்ச்சி நடாத்தியது.

14.00 மணிமுதல் 15.45 மணிவரை இப்பேராளர் கலந்துரையாடல் நடைபெற்றது. 8 சமயத்தவர்களும் தங்கள்உணர்வுகளைக் கலந்துரையாடலில் பங்கெடுத்து பகிர்ந்திருந்தனர்.

இந்நிகழ்வினை சீர்தூக்கிப் பார்த்தால் தலைலாவரையும் ஈழத்தமிழர்கள் வரலாறு எவ்வாறு தவறாக பரப்புரைசெய்யப்பட்டுள்ளது என்பதை ஈழத்தமிழர்கள் உணரக்கூடியதாக இருந்தது.

புலத்தில் தமிழர்கள் நாங்கள் எங்கு வாழந்தாலும், எங்கள் சரியான வராலற்றினையும், ஈழத்தமிழர்களின்புலப்பெயர்வின் உண்மையான காரணியையும் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இன்று ஒரு தலைலாமாவிற்கு தமிழர்கள் தரப்பில் பதில் அளிக்க வாய்ப்பு அமைந்தது. உலகில் இன்னும் எத்தனையோதலைலாமாக்களும், தலைவர்களும் தவறாகப் பரப்பப்படும் பரபு;பரைக்கு ஆளாகி உள்ளார்கள். தொடர்ந்து யாவரும்முயல்வோம் தமிழர் உண்மைகளை உலகிற்குப் புலப்படுத்த!

dalailama-7 dalailama-29 daliama-1

SHARE