பாலியல் தொழிலுக்காக சென்னைக்கு வரும் வட கிழக்கு மாநிலப் பெண்கள்…

678

சென்னை: பாலியல் தொழில் புரிவதற்காக பல வெளிமாநில அழகிகள் சென்னைக்கு அழைத்து வரப் படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

sambhawna-seth-sex-pics-926_650

இது தொடர்பாக போலீசார் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபச்சார சுற்றுலாவைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் போலீஸார் இறங்கியுள்ளனர்.

சென்னை கே.கே.நகர் 69-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண்களை வைத்து ஒரு கும்பல் பாலியல் தொழில் செய்வதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதியானது. அந்த வீட்டில் இருந்த வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அசாம், நாகலாந்தை சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டு மயிலாப்பூர் காப்பத்தில் சேர்க்கப் பட்டனர்.

மேலும், அப்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபத்தியதாக நாகலாந்தை சேர்ந்த புரோக்கர் குரோம், ஆல்வின் எபினேசர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், பாலியல் தொழிலுக்காக வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அனுப்பி இருப்பது தெரியவந்துள்ளது.

அதேபோல், அடையார் பரமேசுவரிநகர் முதல் தெருவில் சொகுசு பங்களாவில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூன்று இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். பெண் புரோக்கர் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.

TPN NEWS

 

SHARE