புலிகள் பகுதிக்குள் ஊடுருவியிருந்த புலனாய்வுப் பிரிவினர் அல்ஃபா- 05 முகாமை இதுவரையிலும் கண்டு பிடிக்கவில்லை

498

விடுதலைப் புலிகள் வன்னிப் பெருநிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவேளை, அவர்கள் அறிவிக்கப்படாத அரசாங்கம் ஒன்றை அங்கே நடத்திவந்தார்கள் என்பது யாவரும் அறிந்த விடையம். அவர்களிடம் நீதிமன்றங்கள் தொடக்கம் வங்கிகள் வரை இயங்கிக்கொண்டு இருந்தது. இதேவேளை புலிகளால் மிகவும் இரகசியமாக பேணப்பட்டு வந்த சிறைச்சாலைகளும் உள்ளது. இதில் அல்ஃபா- 05 மற்றும் அல்ஃபா-02 மிக முக்கியமானவை. குறிப்பாக கொழும்பின் புறநகர்ப் பகுதியான கல்கிசையில் வைத்து ஒரு ஸ்ரீலங்கா புலனாய்வு அதிகாரியை புலிகள் கடத்தியிருந்தார்கள். அவரை அலேக்காக கிளிநொச்சிவரை கொண்டுசென்றார்கள் புலிகள். இவை எப்படி நடந்தது ? அவர் பின்னர் எந்தச் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது எல்லாம் மிகவும் சுவாரசியமான விடையம். சரி வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !

ltte-guards-1

2005 ஏப்பிரல் மாதம் இரவு 12.00 மணிக்கு, பயங்கரவாத தடுப்பு பிரிவில் சி.ஐ.டியாக வேலைபார்த்த ஜெயரட்ணம் என்பவரை புலிகள் கடத்திச் சென்றார்கள். இவர் பொட்டு அம்மானை தான் பிடிப்பேன் என்றும், பொட்டு அம்மான் அடிக்கடி இந்தியா சென்றுவருவதாகவும் அப்போது கூறிவந்தார். நன்றாகத் தமிழ் பேசக்கூடிய ஜெயரட்ணம் புலிகளுக்கு சில பின்னடைவுகள் ஏற்படும் விதத்தில் செயல்பட்டார்(அது என்ன பின்னடைவு என்பதனை பின்னர் பார்ப்போம்) இவர் மீது பொட்டு அம்மானின் பார்வை விழுந்தது. புலிகள் ஜெயரட்ணத்தை சிலாபம் கொண்டுசென்று, அங்கிருந்து மன்னார் பின்னர் விடத்தல்தீவு ஊடாக கிளிநொச்சி கொண்டுசென்றுவிட்டார்கள். இவரை அல்ஃபா 05 இரகசிய சிறையில் தான் புலிகள் அடைத்து வைத்திருந்தார்கள். அல்ஃபா 02 இரகசியச் சிறையும் அதற்கு அருகாமையில் தான் இருந்தது என்று கூறப்படுகிறது.

images images (1)

பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர், புலிகள் பகுதிக்குள் ஊடுருவியிருந்த புலனாய்வுப் பிரிவினர். புலிகளின் தலைவர்களை கிளைமோர் வைத்து கொலைசெய்ய சிங்களத்தால் ஏவப்பட்ட கைக்கூலிகள் எனப் பலர் இந்த முகாமில்தான் அடைத்துவைக்கப்பட்டார்கள். இருப்பினும் புலிகள் ஜெயரட்ணத்தை 2006ம் ஆண்டு, ஒட்டிசுட்டான் காட்டில் வைத்து சுட்டுக்கொன்றார்கள். ஏன் எனில் அவர் மிகவும் ஆபத்தான மனிதர். தமிழீழ தேசிய பாதுகாப்பிற்கு அவர் பின்னர் ஒரு காலத்தில் அச்சுறுத்தலாக அமையலாம் என்பது அவர்களின் கணிப்பாக இருந்தது. ஆனால் அது உண்மை என்பதனை நாம் சுமார், 8 வருடங்களின் பின்னர் தான் காண்கிறோம். ஏன் எனில், அல்ஃபா 05ல் ஜெயரட்ணத்தை அடைத்துவைத்திருந்தவேளை, அங்கே இருந்த மற்றுமொரு சிங்கள் நபருடன் அவர் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார். குறிப்பிட்ட அன் நபர், மற்றும் ஒரு தொகுதி சிங்கள சிறைக் கைதிகளை, புலிகள் 2009ம் ஆண்டு விடுதலைசெய்து விட்டார்கள். அங்கிருந்து சென்ற இச் சிங்கள நபர் இராணுவத்துக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், இலங்கைப் புலனாய்வு இந்த குறிப்பிட்ட முகாம் எங்கே இருந்தது என்று தற்போது தேடிவருகிறார்கள். அத்தோடு இன் நபர் ஜெயரட்ணம் கொல்லப்பட்டது தொடர்பாகவும் தமக்கு தெரிவித்துள்ளார் என இராணுவமே ஒத்துக்கொண்டுள்ளது. இது இவ்வாறு இருக்க.

கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சிலரை, சித்திரவதை செய்து அவர்களிடம் இருந்தும் அல்ஃபா 05 மற்றும் அல்ஃபா 02 முகாம் தொடர்பாக தகவல்களை திரட்டிவருகிறார்கள், இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர். இதற்கு வலுவான காரணம் ஒன்றும் உள்ளது. இந்த சிறைச்சாலையைக் கண்டுபிடித்தால், அதனை வெளியுலகிற்கு காட்டி, இது புலிகளின் சித்திரவதை கூடம் என்று சொல்லலாம் அல்லவா. அதனூடாக இலங்கை இராணுவம் மட்டுமல்ல புலிகளும் போர்குற்றங்கள் புரிந்தார்கள் என்று கூறலாம் அல்லவா. இதற்காகவே இச்சிறைச்சாலையக் கண்டுபிடிக்க இலங்கை இராணுவம் பெரும் பிரயத்தனம் காட்டி வருகிறது. கைதாகியுள்ள புலிகள் வழங்கியுள்ள தகவலின் அடிப்படையில், இச் சிறைச்சாலை வல்லிபூனம்(புதுக்குடியிருப்பு) பகுதியில் இருந்ததாகக் நம்பப்படுகிறது. ஆனால் இச் சிறைச்சாலையை இராணுவம் கண்டுபிடித்துவிட்டதா ? இல்லை புலிகள் அதனை அழித்துவிட்டு தான் முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்ந்தார்களா என்று தெரியாத நிலை காணப்படுகிறது. சிலவேளை புலிகளின் பங்கர் ஒன்றை இலங்கை இராணுவம் காட்டி, இதுதான் அல்ஃபா 05 என்று சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

TPN NEWS

SHARE