அஜீத்துக்காக இரவு தூக்கம் தொலைத்த திரிஷா 

484



அஜீத்துக்காக இரவு தூங்காமல் விழித்திருக்கிறார் திரிஷா. அஜீத் நடிக்கும் படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடிக்கின்றனர். பெப்பர் சால்ட் தலைமுடியுடன் அஜீத் நடித்த காட்சி அனுஷ்காவுடன் படமாக்கப்பட்டது. ஏற்கனவே வீரம், மங்காத்தா படங்களில் பெப்பர் சால்ட் நிற முடியுடன் நடித்த அஜீத் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தின் பிளாஷ்பேக்கில் மட்டும் கறுப்பு நிற முடியுடன் நடிக்கிறார்.

இதற்காக உடல் குறைத்து கறுப்பு நிற தலை முடிக்கு மாறி இருக்கிறார் அஜீத். திரிஷாவுடன் அவர் நடித்த காட்சிகள் இரவில் படமாக்கப்படுகின்றன.இது பற்றி திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, இரவு ஷூட்டிங். ஆனால் எந்த புகாரும் இல்லை. கவுதம், அஜீத் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை என் தூக்கத்தை மறக்கடித்துவிட்டது. மேலும் யூனிட்டில்  உள்ளவர்களுக்கு அஜீத்தும், அருண் விஜய்யும் இணைந்து உணவு சமைத்து பரிமாறியதை மறக்க முடியாது என குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த டான் மகார்துர் ஒளிப்பதிவு செய்கிறார். அவர் கூறும்போது, அஜீத்தை ஸ்லிம்மாக பார்க்கும் போது சந்தோஷமான உணர்வு ஏற்படுகிறது. நல்ல படத்தை உருவாக்க குழுவாக கடுமையாக உழைத்து வருகிறோம் என்றார்.

 

SHARE