அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.

423
அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா தொடரைக் கைப்பற்றியது. போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்து விளையாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 242 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி இந்திய அணி 44.1 ஓவர்களில் 245 ரன்கள் அடித்து இலங்கையின் இலக்கை தகர்த்தது. இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் விராட் கோலி உலக சாதனையை படைத்தார்.

போட்டியில் வீராட் கோலி 50 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் போட்டியில் அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்ந்தது. இதனால் அவர் குறைந்த இன்னிங்ஸ்களில் 6 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரர். இதுவரை 144 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோலி அதில் பேட் செய்ய களம் இறங்கிய இன்னிங்ஸ்களின் எண்ணிக்கை 136 ஆகும். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 141 இன்னிங்ஸ்களில் 6 ஆயிரம் ரன்களே கடந்ததே, இந்த இலக்கை கடந்ததில் அதிகவேகமாக இருந்தது. 1989-ம் ஆண்டு அவர் நிகழ்த்திய இந்த சாதனையை 25 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி முறியடித்திருக்கிறார்.

முன்னதாக அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த வகையில் விவியன் ரிச்சர்ட்சின் சாதனையை 26 வயதான கோலி சமன் செய்திருந்தார். இந்த இலக்கை இருவரும் தங்களது 114-வது இன்னிங்சில் எடுத்திருந்தனர். விராட் கோலியின் சாதனையை தென்ஆப்பிரிக்காவின் ஆம்லா தகர்க்க வாய்ப்புள்ளது. அம்லா ஒரு நாள் போட்டியில் 95 இன்னிங்ஸ்களில் விளையாடி 4,790 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்த டாப்- 5 வீரர்கள் விவரம்; விராட் கோலி இந்தியா – 136 இன்னிங்ஸ், ரிச்சர்ட்ஸ் வெஸ்ட் இண்டீஸ் 141 இன்னிங்ஸ், கங்குலி இந்தியா 147 இன்னிங்ஸ்,  டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்கா 147 இன்னிங்ஸ், ஹைடன் ஆஸ்திரேலியா 154 இன்னிங்ஸ்.

SHARE