அநாகரீமான முறையில் ஆபாசம் காட்டிய வெளிநாட்டு யுவதி! விலங்கு மாட்டி அடக்கிய பொலிசார்

310
காலி, உணவட்டுண கடற்கரையோர பகுதியில் அரைகுறை ஆடையுடன் ஆபாசம் காட்டித்திரிந்த வெளிநாட்டு யுவதியொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவட்டுண பிரதேசத்தில் உள்ள யத்தெஹிமுல்ல பகுதியில் நடுத்தர சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் முன்பாக வெளிநாட்டு யுவதி ஒருவர் போதையுடன் ஆபாசமாக நடந்து கொள்வதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

அதனையடுத்து குறித்த யுவதியை கைது செய்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் சுவிட்சர்லாந்து நாட்டவர் என்பதும், கல்கிஸ்ஸயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் குறித்த யுவதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

SHARE