அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒத்துழைக்கின்றார் இல்லை- கோட்டாபய ராஜபக்‌ஷ

459

“அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒத்துழைக்கின்றார் இல்லை.

wigneswaran

 

இதனால் வடக்கில் உள்ள சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.” – இப்படிக் குற்றம் சுமத்துக்கின்றார் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்‌ஷ. கொழும்பில் ஐ.நா. நிகழ்வு ஒன்றில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இந்தக் குற்றச்சாட்டை அவர் முன் வைத்தார். மத்திய அரசுக்கும் மாநகர சபைகளுக்கும் இடையிலான சில முரண்பாடுகள் காரணமாக சில மேயர்கள் உட்பட சில நிர்வாகிகள் அரசுடன் செயற்பட பின்னடிப்புக் காட்டுகின்றார்கள்.

cv.vigi

கொழும்பு மாநகர சபை எதிர்க்கட்சியான ஐ.தே.கவிடம் இருக்கும் போதும், அது நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து செயற்படுகின்றது. அதுபோல வடக்கு மாகாண சபையும் வடக்கு மக்களின் நிலையை மேம்படுத்துவதற்காக அரசுடன் சேர்ந்து செயற்பட முன்வரவேண்டும் – என்றும் அவர் கூறினார்

TPN NEWS

SHARE