அமெரிக்காவில் இன்று நிலநடுக்கம்

507

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் தென் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 2.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மாகாண தலைநகர் ஜுனேயூ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்து குலுங்கின.

அப்போது பொதுமக்கள் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். நிலநடுக்கம் என்பதை உணர்ந்த அவர்கள் அலறியடித்தபடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய விடிய ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டத்தை தொடர்ந்து ஜுனேயூ பகுதியில் தகவல், தொடர்பு துண்டானது. அப்பகுதியில் செல்போன்கள், இன்டர்நெட், டெலிபோன்கள் வேலை செய்யவில்லை.

இதற்கிடையே, அங்கு 5.9 ரிக்டர் ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அப்பகுதியில் கடந்த 5 மணிநேரத்தில் 12 தடவை நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் உயிர்சேதம் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை. ஏனெனில் நிலநடுக்கம் ஏற்பட்ட அலாஸ்காவில் பெரும்பாலான இடங்களில் வயர்லஸ் தொடர்பு கூட துண்டிக்கப்பட்டுள்ளது.

SHARE