அமெரிக்காவில் தண்ணீருக்குள் 21 அடி ஆழத்தில் பிரமாண்ட ஓட்டல்

514

அமெரிக்காவில் தண்ணீருக்குள் 21 அடி ஆழத்தில் பிரமாண்ட ஓட்டல் கட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் புளோரிடாவில் கீ லார்கோ என்ற இடத்தில் தண்ணீருக்கு அடியில் பிரமாண்டமான ஓட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. அது தண்ணீருக்குள் 21 அடி ஆழத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ‘காட்டேஜ்’கள் கட்டப்பட்டுள்ளன. அதில் 4 பேர் மட்டுமே தங்க முடியும். குளிக்க வென்னீர் ‘ஷீவர்கள்’ உள்ளன.

அங்கு அதி நவீன சமையலறையும் உள்ளது. பிரிட்ஜ் மைக்ரோ வேவ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அவை தவிர அங்கு தங்குபவர்கள் ‘ரிலாக்ஸ்’ ஆக பொழுதை கழிக்க இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சினிமா படங்கள் ஒளிபரப்பபடுகின்றன.

இவை தவிர தண்ணீருக்குள் நீந்தி திரியும் அழகிய வண்ண மீன்களையும் பார்த்து ரசிக்க முடியும். ஓட்டலுக்குள் படுக்கை அறைகள், சமையலறை, பாத்ரூம் மற்றும் நிலா வெளிச்சத்தை பார்த்து ரசிக்கும் வகையில் குளம் போன்ற வசதிகளும் உள்ளன.

இங்கு ஒரு நாள் இரவு தங்கி மகிழ குறைந்தது ரூ.30 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அதில் என்ன விசேஷம் என்றால் அங்கு தங்குபவர்கள் தங்கள் அறைக்கு தண்ணீரில் குதித்து மூழ்கி செல்ல வேண்டும். அதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

SHARE