இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய.வடபகுதிக்கு செல்வதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காலவரையறையற்றவை எனத் தெரிவித்துள்ளார்.
MOSSAD, KGB , CIA போன்று உலகம் முழுவதும் பரிச்சயமான பெயர்கள் சில தான். ஆனால் 450 க்கும் மேற்பட்ட பரிச்சயமில்லாத உளவு நிறுவனங்கள் பல்வேறு அரசுகளுக்காக உலகம் முழுவதும் இன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு அரசின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான அங்கமாக உளவு அமைப்புகள் இன்று கருதப்படுகிறது. இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்தான் ஒரு தமிழன். போர் செய்வதற்கு முன்பு எதிரிகளின் படை பலத்தை அறிந்து வருவதற்காக மட்டும் ஒற்றர்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில், உளவு திரட்டலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஒரு உளவு அமைப்பு எப்படி இருக்க வேண்டும், இயங்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்து கொடுத்தான் அந்த ஆதி தமிழன்.
வடபகுதிக்கு செல்வதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காலவரையறையற்றவை எனத் தெரிவித்துள்ளார். இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய. இது அவசரஅவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல, வட பகுதி; நிலவரம் குறித்த குறிப்பிட்ட காலத்திற்க்கொரு முறை ஆராய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறவேண்டுமென்ற நடைமுறை வடபகுதியின் தற்போதைய நிலையை கவனமாக ஆராய்ந்த பின்னரே எடுக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின்றி செல்லும் வெளிநாட்டவர்கள் (வெளிநாட்டு கடவுச்சீட்டையுடையவர்கள்) ஒமந்தையில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்ககூடிய தற்போதைய விடயங்களை கருத்தில்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியாது, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் தொடர்ந்தும் வடபகுதியில்
பிரச்சனைகள் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் செயலாகவே இவருடைய கருத்து அமையப்
பெறுகிறது