மு.காங்கிரசைச் சேர்ந்த 4 எம்.பி கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோடு சேர உள்ளதாகவும்,அவர்களுக்கு பிரதியமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளதாகவும் சிங்கள மொழி பத்திரிகை ஒன்றை ஆதாரம் காட்டி ஒரு வார காலத்திற்கும் மேலாக பல இணையங்கள் செய்தியை வெளியிட்டு வருகின்றன.
சில காலங்கள் முன்பு மு.கா ஆனது அரசை விட்டு வெளியேறப் போகிறோம் என அரசை ஏதாவது ஒரு விடயத்தில் எச்சரித்தால்,. “நீங்கள் விரும்பினால் வெளியேறலாம்,நீங்கள் வெளியேறினால் உங்களுடன் எத்தனை பேர் வருவார்கள்..? ” என அரச தரப்பு கேள்வி எழுப்பும்.
அந்த சர்ந்தர்ப்பத்தில் மு.கா அரசாங்கத்தை விட்டு விலகி இருந்தால் மிகப் பெரிய விளைவுகளை மு.கா அனுபவித்திருக்கலாம் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்க மேலுமொரு முக்கிய விடயமாகும்.
சில காலங்கள் முன்பு இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெளியாகிய தகவலை மீண்டும் பட்டை தீட்டி வெளியிட்ட ஒரு தகவலாகவே இத் தகவலைப் பார்க்க வேண்டி உள்ளது.
ஏனெனில்,இலங்கையின் தற்கால நிலைமைகளின் அடிப்படையில் இலங்கை முஸ்லிம் மக்கள் அரச தரப்பினரிடமிருந்து மிகைத்த அதிருப்தியில் உள்ளார்கள் என்பது வெளிப்படை உண்மை.
மு.கா உம் அதன் தலைமையும் முஸ்லிம்களுக்காக போராடிய போதும் இன்று முஸ்லிம் மக்களிடம் சற்று செல்வாக்கை மு.கா இழக்க மு.கா மறைமுக அரச பங்காளிக் கட்சியாக இருப்பது மிக முக்கிய காரணம் என்பது மறுத்துரைக்க முடியாத ஓர் வெளிப்படை உண்மை.
அரசாங்கம் எதிர்வரும் தேர்தலில் மிகப் பாரிய பின்னடைவை சந்திக்கும் என அரசியல் அவதானிகள் கூறி வரும் இச் சந்தர்ப்பத்தில் இன்னும் மிகக் சொற்ப காலமே பாராளுமன்ற தேர்தலுக்கு இருக்கின்ற போது தனது தொடர்ச்சியான அரசியற் பயணம் பாதையில் அக்கரைக் கொண்ட எந்த அரசியல் வாதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியோடு இணைவது உசிதமானது அல்ல.
இச் சந்தர்ப்பத்தில் மு.கா இலிருந்து யாராவது ஸ்ரீ.சு.க யோடு இணைவார்களாக இருந்தால் முஸ்லிம் மக்களிடமிருந்து செல்லாக்காசாய் தூக்கி வீசப்படுவார்கள்.
எனவே,இவர்கள் பிரதியமைச்சர் பதவியைப் பெற முதலில் பாராளுமன்றம் தெரிவாகுவார்களா..?
மாறும் 4 வருக்கும் பிரதியமைச்சர் பதவி வழங்கப்படும் போது முஸ்லிம்களிற்குள் அதிக அமைச்சும்,பிரதி அமைச்சும் புழங்க வாய்ப்புள்ளதால் மாற போவதாக கூறப்படும் நால்வருக்கும் பிரதியமைச்சர் பதவி வழங்கப்படும் என்பது சாத்தியமற்ற ஒன்று.
கட்சித் தாவலுக்கு தயாராகிறவர்கள் மக்களிடம் எடுபட வேண்டுமாக இருந்தால் நியாயமான,ஏற்கத்தக்க காரணத்தை முன் வைக்க வேண்டும்.
தற்கால சூழ்நிலையின் அடிப்படையில் இன வாத செயற்பாடுகளை தீர்க்கவே கட்சித் தாவலுக்கான முடிவுகளை எடுத்தோம் எனக் கூறுவதே பொருத்தம்.ஏனைய காரணங்கள் தற்காலத்தில் முஸ்லிம் மக்களிடம் எடுபட வாய்ப்பில்லை.