அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்யுமாறு களுத்துறை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

460

அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்யுமாறு களுத்துறை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த இருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு நீதவான் ஆயேஸா ஆப்தீன் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளார்.

அளுத்கம தர்கா நகரைச் சேர்ந்த மொஹமட் சஹிப் மற்றும் மொஹமட் சிஹான் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

10446022_10152568311104750_4828270160583695121_n 10352768_850755814938229_5467123281005227482_n 69-300x300Dharga-town-rebuild-6

SHARE