ஆட்டம் முடியப் போகின்றது, அடங்கி இருங்கள்! ஜனாதிபதிக்கு சரத் பொன்சேகா எச்சரிக்கை

480
13IN_SRI_LANKA_GENE_161983e-318x264அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்டம் முடியும் தறுவாயில் இருப்பதால் அடக்கிவாசிக்குமாறு சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் குறிப்பிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க மக்கள் தயாராக இல்லை.

எதிர்வரும் தேர்தலில் அதற்கான சரியான தண்டனையை வாக்காளர்கள் வழங்கக் காத்திருக்கின்றார்கள்.  அந்த வகையில் அரசாங்கத்தின் ஆட்டம் முடியும் தறுவாயை நெருங்கி விட்டுள்ளது.

ஜனாதிபதி கதிரை கைமாறப் போகின்றது. எனவே இனியாவது அரசாங்கம் அடக்கி வாசிப்பது நல்லது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இது பொருந்தும் என்றவாறு சரத் பொன்சேகா குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கடும் சீற்றத்துடன் எச்சரித்துள்ளார்.

 

SHARE