ஆரோக்கியமான கொழுப்பு உள்ள பழம் எது? (வீடியோ இணைப்பு)

384
பல்வேறு சுவைகள் கொண்ட பழ வகைகளுக்குள் அவோகாடோ பழத்திற்கு ஒரு தனி இடமுண்டு.இப் பழத்தின் நன்மைகள் பற்றி அதிக தகவல்கள் கடந்த காலங்களில் வெளியாகியுள்ளன.

இந் நிலையில் தற்போது இப் பழம் மிக அற்புதமான பழமாகக் கருதப்படுதவற்கான காரணத்தை American Chemical Society அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

அதிகளவில் நார்ச் சத்தைக் கொண்டுள்ள இப் பழத்தில் நிரம்பாத கொழுப்பு அமிலங்கள், Antioxidant, விட்டமின் B6, விட்டமின் E என்பவற்றுடன் ஆரோக்கியமான கொழுப்புகள் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர வாழைப் பழங்களில் காணப்படுவதை விடவும் இரண்டு மடங்கு பொட்டாசியத்தையும் அவோகாடா கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப் பழத்தின் தோலில் 11 வகையான கரட்டீன் கொண்ட பதார்த்தங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE