ஆர்யாவுக்காக குரல் கொடுத்த நடிகர்

326

டோலிவுட் இயக்குனர் கே.எஸ். பிரகாஷ் இயக்கத்தில் நேரடி தெலுங்கு திரைப்படமாக வெளியாக இருக்கும் படம் சைஸ் ஜீரோ. இப்படம் தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

சைஸ் ஜீரோ படத்தில் நடிகர் ஆர்யாவுக்காக டோலிவுட்டின் இளம் நாயகன் நந்து பின்னணி பேசவுள்ளார். இத்தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்த நந்து, ஆர்யாவிற்கு பின்னணி பேசுவது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.

நாகர்ஜுனா சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்க, பிவிபி நிறுவனம் தயாரிக்கிறது.

SHARE