இந்த வருடம் அனைவரும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்று அஞ்சான்.

519

இந்த வருடம் அனைவரும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்று அஞ்சான். இப்படத்தில் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜம்வால் போன்றோர் நடிக்க திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்குகிறார்.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வருமென தயாரிப்புக்குழு அறிவித்திருந்தது, மேலும் சூர்யாவுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால் இதை பயன்படுத்தி ஒரு பெரிய தொகைக்கு விற்க முடிவு செய்துள்ளார்களாம்.

தமிழில் அஞ்சான் என்ற பெயரிலும், இதன் தெலுங்கு டப்பிங் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் படம் வெளிவருகிறதாம். மேலும் இது சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயராக கூட இருக்கலாம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

 

SHARE