இராவணன் யார்? மகாவம்சத்தில் சிங்களவர்களின் தோற்றம் பற்றிய கதையின் பிரகாரம் சிங்களவர்களின் பூர்வீகம் சிங்கம்

517

 

மகாவம்சத்தில் சிங்களவர்களின் தோற்றம் பற்றிய கதையின் பிரகாரம் சிங்களவர்களின் பூர்வீகம் சிங்கம் என்கிறது. ஆக மிருகத்தின் வம்சாவளி என்று ஒத்துக்கொள்ள வேண்டிவரும். ஏற்காவிட்டால் மகாவம்சத்தை நிராகரித்ததாக ஆகும்.

 

இராவணன் யார்? இது தொடர்பாக உங்கள் கருத்துகளையும் இதில் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த தேடல் பல வினாக்களுக்கு விடை தருவதுடன் இது குறித்து பலரின் தேடலுக்கும் வித்திடவேண்டும் என்பதே நோக்கம்.

தமிழர்களின் வரலாற்றினை சிதைப்பதற்கு வட இந்தியர்களின் தலமையில் பல வகைப்ட்ட வரலாற்று அழிப்பு ஆரம்ப காலங்களிலிருந்தே வந்திருக்கிறது. எல்லாவழிகளிலும் உலகை ஆண்ட மிகப்பெரிய சக்தியாக தமிழினம் இருந்ததனால் அதை அழிப்பதற்கான முயற்சிகள் ஆரம்பங்களில் இருந்து நடந்திருக்கின்றன என்பதை வரலாற்று சிதைப்புகளில் இருந்து நாங்கள் அறிந்து கொள்ளலாம்.

ஈழத்தை பலமாக வைத்திருந்ததோடு நல்லாட்சியும் புரிந்துவந்தவன்தான் ராவணன். இராவணன் பற்றிய ஆய்வுக் குறிப்புகள் தமிழில் இருப்பதைவிட சிங்களத்தில்தான் அதிகம் காணப்படுகின்றன.

இராவணனைப் பற்றி தமிழில் இணையத்தில் தேடினால் வருவது எல்லாம் சினிமா சம்மந்தப்பட்ட தகவல்களும் தேவையற்ற பல தகவல்களும்தான். இதனில் இருந்து இராவணனை பற்றி எந்த அளவு தமிழில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் இராவணனைப்பற்றி எத்தனை பேர் தேடியிருக்கிறார்கள் என்பதையும் ஊகித்துக் கொள்ளலாம்.

இராவணனின் அடுத்த பிறப்புதான் “புத்தர்” என சொல்லும் சிங்கள சமூகம் சிங்களவர்களை காக்கத் தான் இராவணன் புத்தராக பிறப்பெடுத்ததாக சொல்கிறது. இராவணனை சிங்கள மன்னன் என்று சிங்கள எழுத்தாளர்கள் பலர் இன்னமும் சொல்லிவருவதோடு அந்த தகவல் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டுவருகிறது. இராவணனை கொன்றதை (சிங்கள மன்னனை) தமிழ் மக்கள் கொண்டாடுவதாகவும் அதைதான் தீபாவளி என்கிறார்கள் என்றும் சிங்கள தலைமுறைகளுக்கு வரலாறு திரிபுபடுத்தப்படுகிறது.

இராவணன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் என்பதோடு அவனது காலத்தில் “ஈழம்” மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது.

சிங்களத்தில் பதிவு செய்யப்ட்டுள்ள கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் குறித்து சில நண்பர்களுடன் உரையாடிய அடிப்படையில் நான் அறிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று இருக்கும் “சிகிரியா” இராவணனின் காலத்தில் ராவணனின் “புட்பக விமானம்” இறங்கும் தளமாக பாவிக்கப்ட்ட இடமாக இருக்கலாம் என்று சில சிங்கள ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள் என்று நண்பர்கள் மூலம் அறிந்திருக்கிறேன்.

இராவணன் பாவித்த புட்பக விமானத்தின் சில எச்சங்களும் இராவணன் காலத்து சில எச்சங்களும் சிகிரியா குன்றின் நடுவில் இருக்கிறது என்று நம்பப்படும் சுரங்கத்திற்குள் இருந்ததாகவும் மேற்கத்தேய ஆட்சியாளர்களின் காலத்தில்தான் அவை திருடப்பட்டிருக்கலாம் எனவும் அந்த சிங்கள ஆய்வாளர்கள் நம்புவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

சிகிரியா குன்றின் உச்சியில் இருந்து தரைக்கு குன்றின் நடுவில் சுரங்கம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். விமானம் வைத்திருந்த ராவணனால் சுரங்கம் அமைத்திருக்கமுடியும் என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான்.

தவிர எகிப்தில் இருக்க கூடிய பிரமிட்டுக்களின் கட்டுமானத்திற்கும் “பபிலோனா பூந்தோட்டம்” அமைப்பதற்கான கட்டுமானத்திற்கும் இராவணனின் காலத்தில் விமானம் மூலமாக ஆட்கள் அனுப்பபட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

இது எகிப்து பிரமிட்டுகளில் காணப்படுவதாகவும் இதில் “லங்காபுர” என்று எழுதியிப்பதாகவும் சொல்கிறார்கள். ஆக எகிப்து பிரமிட்டு கட்டுமானங்களில் “ஈழத்தில்” இருந்து ஆட்கள் கொண்டு செல்லப்பட்டது அதுவும் விமானம் மூலம் கொண்டு செல்லபட்டார்கள் என்பது ஆய்வு. இது குறித்து யாரிடனமாவது தரவுகள் இருப்பின் மறக்காமல் இங்கு பதிவு செய்யவும்.

முழு ஈழத்தையும் இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை பாதிப்புகள் இருக்கின்றன. இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடையங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அது போக இராவணன் இராமனால் கொல்லப்படவில்லை என்றும் கோமா நிலையில் இருக்க கூடிய இராவணனின் உடல் சிவனொளிபாதமலையை அண்டிய அடந்த காட்டுப்பகுதியில் இருக்கலாம் என்பது சிங்களவர்களின் நம்பிக்கை.

இலக்கியங்களுடன் தொடர்புபடுத்தி இராவண் பற்றி சில தமிழ் ஆய்வுகள் இருப்பதனால் இன்று பல ஆதாரங்கள் தொலைக்கப்பட்டுள்ள நிலையில் நான் புதிதாக ஒன்றையும் எழுத முற்படவில்லை.

இருப்பதில் இருந்து ஆராய்வது அல்லது இருப்பதை வைத்துக் கொண்டு எமது அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கடத்துவது மிக முக்கியமானது என்று கருதுகிறேன்.

இராவணன்

இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல – “வானோடும் களம் இறங்குமிடம்” போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.

இராமாயணத்தில் இராவணன்

இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்திச் சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்காரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.

இராமாயணத்தில் இராவணன்

இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன – நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது இராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை…. யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது.

அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும்.

இராவணன் ஆட்சி எப்படி நடந்தது?

அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஓங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் ஏன், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்?

இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும், தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்பட வேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின.

கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா.

அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்.

குடும்பம்

இராவணனது தந்தை வைச்ரவ மகரிஷி ஆவார். வீடணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை ஆகியோர் உடன் பிறப்புகளாவர்.

வேத வித்தகன்

இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.

கைலாயத்தைத் தூக்கும் இராவணன் (இராவணன், பத்துத் தலை கொண்ட இலங்கை அரசன். இராமனுக்கு எதிரியான இவன் மிகச் சிறந்த சிவபக்தன். புராணங்களில் இராட்சசனாகச் சித்தரிக்கப் படுபவன்.)

கைலாயத்தை தன் நாட்டில் வைக்க விரும்பிய இராவணன் வடக்கே சென்று, எந்த வித கடினமும் இல்லாமல் இமயத்தைத் தூக்கி தன் நாடு நோக்கி நடந்தான். மலையில் திடீரென ஏற்பட்ட ஆட்டத்தை உணர்ந்த பார்வதி தேவி பாதுகாப்பு வேண்டி சிவனிடம் ஓட, நடந்ததை அறிந்த சிவன், இராவணனுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பி தன் இடது கட்டைவிரலால் மலையை சற்று அழுத்த, தப்பிக்க வழியின்றி கீழே மாட்டிக் கொண்டான் இராவணன்.

ஆனால் சிவபக்தர்களுக்குத் தெரியும் சிவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று. தன் தொடை நரம்பினால் வீணை போன்ற ஏற்பாடு செய்து, சாம வேதப் பாடல்களைப் பாட, மனம் இரங்கினார் சிவ பெருமான், இராவணனைச் செல்ல அனுமதித்தார். மற்ற தெய்வங்களுக்கு சொல்லப்படாத சிறப்பு இதுவே. சிவபெருமானுக்கும் அவர்தம் அடியார்களுக்கும் மிகச் சிறந்த உறவு உண்டு. ஒருத்தரை யொருத்தர் மதிக்கும் பண்பு வந்துவிட்டால் ஏது இங்கே பிரச்சினைகள்?

இராவணன் நீர்வீழ்ச்சி

இராவணன் நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது எல்லை – வெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனை பார்வையிடமுடியும். இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டுநிலக் காடாகும். நீர்வீழ்ச்சி மூன்று படிநிலைகளில் பாய்கிறது. முக்கிய பாய்ச்சல் 9 மீட்டர் (30 அடி) மட்டுமேயாகும். நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பறையில் அமைந்துள்ளது எனவே பாறை அறிப்பு துரிதமாக நடைபெறுகின்றது.

மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது. இராவணன் நீர் வீழ்ச்சி இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்மையான நம்பிக்கையாகும்.

இராவணன் காலத்து ஆலயங்கள்

இந்தப்பதிவில் இராவணன் காலத்து ஆலயங்கள், இராவணனின் வேறு சில வரலாற்று எச்சங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். இராவணன் காலத்து ஆலயங்கள் என்று குறிப்பிடுவதனால் அவை இராவணனால் கட்டப்பட்டன என்று பொருள் இல்லை. விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த சைவாலயங்கள் என்று இவற்றைக் கூறலாம். விஜயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த இயக்கர் நாகரின் ஆட்சியில் அக்காலத்து மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. அக்கால மன்னர்களில் இராவணன் குறிப்பிடக்கூடிய ஒருவனாகையால் இவ்வாறு இராவணன் காலத்து சைவாலயங்கள் என்று குறிப்பிட்டேன்.

“வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான். ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீஸ்வரம், முனீசுவரம்,

நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை சுகேசன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும், நிலங்களையும் கொடுத்தான். ” இவ்வாறு கணபதிப்பிள்ளையின் இலங்கையில் புராதன சரித்திரம் என்ற நூலில் கூறப்படுகின்றது. சுகேசன் என்பவன் இராவணனுக்கு முன்னைய காலத்தில் இலங்கையில் ஆண்ட ஒரு மன்னன் என்பது பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம்.

இதைவிட… இலங்கையில் விஜயமன்னன் குடிகளை வசப்படுத்தும் நோக்குடன் சமய வழிமுறைகளை சரியாக கடைப்பிடித்தான். இலங்கையில் ஆட்சியை அமைக்கு முன்னரே நாலு திசைகளிலும் சிவாலயங்களை எழுப்பினான். கீழ்திசையில் கோணெசர் கோவிலையும், மேல்திசையில் கேதீச்சர கோவிலையும் பழுதுபார்த்து, அக்கோவில்களில் பூசை நடாத்தும் பொருட்டு காசிப் பிராமணர்களை அழைத்துவந்தான் எனக் யாழ்ப்பாண வைபமாலையில் கூறப்படுகின்றது.

இதிலிருந்து விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த ஈழத்தின் பழமைவாய்ந்த சைவாலயங்கள் இவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாலயங்க்ள் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.

திருக்கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள மன்னார் மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன்கோவில். ஈழத்தின் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. இச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றது.

திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். இதுவும் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. சிவபக்தனாகிய இராவணனால் இங்குள்ள சிவலிங்கம் தாபிக்கப்ப்ட்டதாக ஐதீகம்.

இதுதவிர புத்தள மாவட்டத்தில் சிலாபம் என்ற இடத்தில் காணப்படுகின்ற முன்னேஸ்வரம், வடபதியில் கீரிமலைப்பகுதியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம், தென்பகுதியில் காணப்படுகின்ற தொண்டீஸ்வரம் ( சரியாக தெரியவில்லை ) என்பன இலங்கையில் ஆதிக்குடிகளான இயக்கர் நாகர் என்ற இனத்தவர்கள் காலத்து ஆலயங்களாகும். இவ்வாலயங்கள் யாரால் கட்டப்பட்டன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்றே கருதுகிறேன். இவ்வாலயங்கள் பற்றிய பழைய புராணக் கதைகளை பற்றி அறிய முற்பட்ட போதிலும்.. அவை பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. வாசகர்கள் யாராவது தெரிந்திருப்பின் குறிப்பிடலாம். அல்லது அவைகள் பற்றி அறியும்போது அவற்றை இங்கு நான் இணைத்துவிடுகிறேன்.

இங்கு மிகவும் வேதனைப்படக்கூடிய விடயம் என்னவெண்றால்…. தமிழர்களின் தொன்மையைக்கூறும் இவ்வாலயங்கள் சில இன்று சிங்கள மயப்படுத்தப்பட்ட சிங்களவர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளன. உதாரணமாக கதிர்காம முருகன் ஆலையத்தையும், மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீஸ்வரர் ஆலையத்தையும் குறிப்பிடலாம். போத்துக்கீசரால் அழிக்கப்பட்ட இத்தொண்டீஸ்வரர் ஆலயம் சிங்கள மக்களால் விஸ்ணு ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர திருமலை கோணேச்சரர் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வர ஆலயம், மாந்தோட்ட கேதீச்சர ஆலயம், சிலாபத்து முன்னீஸ்வரர் ஆலயம் என்பன நினைத்தவுடன் சென்றவர முடியாத, மக்களே இல்லாத சூனியப் பிரதேசங்களில் அமைந்துள்ள ஆலயங்களாகும். இவற்றுக்கு சென்றுவர பல கட்டுப்பாடுகள் இராணுவத்தினரால் விதிக்கப் பட்டுள்ளமையால் இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இந்த ஆலயங்கள் தவிர இராவணனுடன் தொடர்புடைய வேறு சில வரலாற்று எச்சங்களைப்பார்க்கலாம்.

இராவணன் வெட்டு

இது திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு அண்மையில் அமைந்திருக்கிறது. இதுபற்றிய புராணக்கதைகள் எனக்கு தெரியவில்லை. தெரியக் கிடைத்தால் இங்கு இணைத்து விடுகிறேன். இதுமட்டுமல்ல திருக்கோணேச்சரம் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிவ பக்தனாகிய இராவணனால் தான் ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகமும் உள்ளது.

சிகிரியாக் குன்றம்

சிகிரியாக்குன்றமானது 6ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த காசியப்பனால் அமைக்கப்பட்டது என்றுதான் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றது. இருப்பினும்…. இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா, இராவணனின் மறைவுக்கு பின்னர் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்ட விபீஸணன் தனது தலைநகரத்தை சிகிரியாவில் இருந்து களனிக்கு மாற்றினான். இன்றும் களனியில் உள்ள ஒரு விகாரையில் விபீஸணனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் இராவணனின் ஒலைச்சுவடியில் காணப்படுகின்றன என்று தினக்குரலில் அண்மையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் படித்தேன். இது பற்றிய மேலதிக விபரங்கள் தெரியவில்லை.

இராவணன் சிறியகோட்டை பெரிய கோட்டை

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் கதிர்காமத்திலுள்ள கதிரைமலைமீது (ஏழுமலை) நின்று தென் கடலை நோக்கினால் குடா வடிவிலான கற்சிகரமும், கற்கொடியும் ஒன்று கடற்தளத்தின் மீது தெரிவதனை இன்றும் அவதானிக்கலாம். இந்த இரண்டு பாறைகளும் இராவணனின் சிறிய கோட்டை பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகின்றன.

இராவணன் ஆட்சி

மகாவம்சதின்படி இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடுதான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் பல உள்ளன. இவற்றுக்கு மேலாக இலங்கையானது முதலில் இந்தியத் துணை கண்டத்துடன் முதலில் இணைந்தே இருந்தது பின்னர் ஏற்பட்ட ஒரு கடற்கோள் அழிவின்போது நிலத்தின் பலபகுதிகள் நீரில் தாழ்ந்துபோக இந்திய துணைக் கண்டத்திலிருந்து இலங்கையானது தனிமையாக்கப்பட்டது என்ற ஒரு ஐதீகம் பலரால் கூறப்படுகின்றது. அதற்கு இன்னும் ஒரு படி மேலாக பைபிளில் கூறப்படுகின்ற நோவா காலத்தில் பூமியில் ஏற்பட்ட பேரழிவும் இந்நிகழ்வுடன் சேர்த்து கூறப்படுகின்றன. இவைகள் எல்லாம் வெறும் ஐதீகங்களே தவிர இதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.

இப்போது இலங்கைத் தீவு உருவான கதைபற்றியும்… அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றியும் சில ஐதீகங்களை பார்ப்போம்.

புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை ஆண்டு வந்தனர். தென்பகுதியை சமனும், வடபகுதியை ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரியும் ஆண்டு வந்தனர். குமரி ஆட்சிசெய்த பகுதிகளை குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரி கண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி ஆட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்துவிட்டன. இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.

குமரிக்கண்டம் பற்றிய சில ஆதாரங்கள்:-

குமரிக்கண்டம்

சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக் கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்தாக கூறப்படுகின்றது.
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலேமுரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றியிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள்பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லை எனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப் பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவு படுத்துகின்றனர். இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள்.

அழிவுற்றது எனக்கருதப்பவும் குமரிக்கண்டம்பின்னர் குமரியின் சந்ததிகளில் தோன்றிய அரசர்களில் பரதன் என்பவனும் ஒருவன். இவன் நாற்பது வருடங்களாக குமரிக்கண்டத்தை ஆண்டுவந்தான். இவனின் ஆட்சியில் இக்கண்டம் செழிப்பாக சிறப்புற்று விளங்கியமையால் பின்னாளில் இக்கண்டத்துக்கு பரதகண்டம் என்ற வழங்கப்பட்டது. அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்களை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் எனும் வீரர்கள் மேற்கூறப்பட்ட வானர வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வேந்தனாக கூறப்படும் இராவணனும் அவனை சேர்ந்தவர்களையும் இயக்கர், நாகர் அல்லது ராட்சதர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்நாட்களில் நாகரீகம் அடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள்.

சமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள். எனினும் இராமயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாக கொண்டு காணப்படுவதால் தென்பகுதியை சேர்ந்த இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாக சித்தரித்துள்ளார்கள் என்பது சிலருடைய கருத்து. இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வாறில்லை என்று கூறுகிறார்கள்.

இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்… திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம்.

இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள்- சயம்பன்
– சயம்பனின் மருமகன் யாளிமுகன்
– ஏதி
– ஏதியின் மகன் வித்துகேசன்
– வித்துகேசனின் மகன் சுகேசன்
– சுகேசனின் மகன் மாலியவான்
– மாலியவான் தம்பி சுமாலி
– குபேரன்

இராவணன் ஆட்சிஅக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும்.

ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர்.

இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள்.

குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள்.

இல.தமிழரின் வரலாறு கூறும் நூல்களின் பட்டியல்:-
பழையநூல்கள் இராசமுறை
பரராசசேகரன் உலா
வையாபாடல் – 15ஆம் நூற்றாண்டு – வையாபுரி
கைலாயமாலை – 16ஆம் நூற்றாண்டு – முத்துராசக்கவிராசர்
வைபவமாலை – 18ஆம் நூற்றாண்டு – மயில்வாகனப்புலவர்
பிரித்தானியர் கால நூல்கள்
History of Jaffna – 1884 – S.Kasishetty
Jaffna Today and Yesterday – 1907 – Duraiyappa Pillai
History of Jaffna – 1912 – Muththuthampy Pillai
யாழ்ப்பாண வைபவ கௌமுதி – 1918 – வேலுப்பிள்ளை
Ancient Jaffna – 1926 – Rajanagam
Critiques of Jaffna – 1928 – Njanappiragasar
Tha Jaffna Kingdom
The Ancient People of Sri Lanka are Tamils
யாழ்ப்பாண பூர்வீக வைபவம்
யாழ்ப்பாண குடியேற்றம்
புதிய நூல்கள்
இலங்கைவாழ் தமிழரின் வரலாறு – கே.கணபதிப்பிள்ளை
Tamils and Ceylon – நவரட்ணம்
Kingdom of Jaffna – 1978 – Pathmanathan
Early Settlements in Jaffna – Ragupathy
யாழ்ப்பாண இராட்சியம் – சிற்றம்பலம்
பூனகரி தொல்பொருள் – புஸ்பரத்தினம்

02) Was Maya Dannawa the architect of Sigiriya? Source:http://lakrawana.tripod.com/id6.html

Was Sigiriya the abode of King Rawana?

by Dr. Mirando Obeysekere

This was the question of Dr Lal Sirinivas of Bangalore who accompanied me to observe the historical and geographical facts as well as the background of world-famous Sigiriya the rock fortress of Sri Lanka. Sigiriya is one of the unique monuments of antiquity as well as the pre-historic culture in our country. According to the Ramayana, this giant fortress had been the Alakamanda Palace of King Kuvera about 50 centuries ago.

Grandson

King Kuvera was the grandson of Maharishi Pulasthi who was in Polonnaruwa. Kuvera’s father Visravasmuni was the elder son of Maharishi Pulasthi. Kuvera was the elder son of Visravasmuni’s first marriage with Princes Illavila, the beautiful daughter of a Brahmin – hermit called Bharadwaja Magina. Later King Visravasmuni married Kesini, the beautiful daughter of Sumalin King of Asura so, king Visravasmuni had a group of children by his second marriage with Kesini. They were Rawana, Vibhishana, Kumbakarana Hema and Suparikha.

Kuvera, the first son of King Visravasmuni ascended the throne of Sri Lanka after the death of his father and ruled the country in a just and righteous manner. So, with the passage of time, Ravana the stepbrother of Kuvera, advanced in power and got interested in the reign of Sri Lanka. Then he asked for the transfer of Alakamanda which was the abode of Kuvera, along with the throne and aeroplane called “Pushpika”. Kuvera was furious because of the unjust request of Ravana and chased, him away. But Ravana was not a coward to be easily bullied by anyone and he gathered his Yakkha relatives to wage war against Kuvera. Within a very short time Rawana the warrior came to power and got all of Kuwera’s wealth, including the palace, throne and aeroplane.

Four tribes

Some original historical records relate that the Sinhala race was formed by the combination of four Sri Lankan tribes such as Naga, Yakkha, Dewa and Gandhabba all related to Maharishi Pulasti’s family. So, the Sivhelas (four tribes) who worshipped the sun god were united under the flag of king Ravana and developed this resplendent island to be the treasure house of the Orient. The Ravana flag depicting the Sun and Moon with Ravana’s portrait is the oldest flag of Sri Lanka. The present lion flag was brought here by King Vijaya about 25 centuries ago.

As soon as Ravana came to power he built a temple for his beloved parents. King Visravasmuni and Kesini it is said that worshipping dead leaders was an ancient ritual of Yakkha nobles in Sri Lanka.

“Visravasmuni Temple” at Anuradhapura had been changed into a Buddhist shrine after the days of King Pandukabaya, who had a special regard for Yakshas. This identical temple is now called “Isurumuniya” The world-famous stone carving of the lovers – at Isurumuniya Vihara – depict none other than the parents of Ravana.

Chithrakuta According to the ancient ola manuscript – “Ravana Katha” the foremost designer of Sigiriya was the talented architect called Maya Dannawa. He had built Sigiriya for the order of king Vista was the father of King Ravana. Sigiriya was known as Alakamanda during the days of Kuvera and later it was known as Chitrakuta.

“Ravana Katha,” an ancient ola book says that after Ravana’s death Vibhishana came to power and transferred the royal Palace – fortress and the capital from the hill country to Kelaniya. Then, Chitrakuta the Palace fortress of Ravana became the residence of a Yakkha noble called Chithraraja, a relative of Vibhisana, Chitraraja, the hero who helped King Pandukabhaya (437-367 BC) and his parent was a descendant of Chitraraja senior.

Since the days of King Pandukabhaya, Chitraraja Palace had been a Yakkha temple and later king Dhatusena’s son Kassapa (459-447 AD) arranged a coup d’etat against the father and chose Chitrakuta temple for his palace fortress as he had a belief that his mother too was a descendant of Yakkha dynasty. King Kassapa is the only King who had renovated Chitrakuta (Sigiriya) and maintained it as Ravana did.

“Ravana Katha” the ancient ola book relates that world-famous frescoes of Sigiriya depict the beautiful damsels of Ravana’s harem and later those murals had been re-drawn by those who maintained the treasure house. Most of the blue figures depict the Yakkha damsels and others depict Naga, Deva and Gandabbha, damsels. The beautiful flowers in their hands show national unity.

Chitrakuta is the only Sri Lankan fortress that had a wooden lift operated from top to bottom. If anyone enters this great fortress through the lion’s head, he will be able to see a huge hole on the rock. Stone structures and stands both on the top and bottom of this “route-hole” are believed to be places on which the wooden lift had been fixed. King Ravana’s period was famous for woodcraft and they used a “lift” too, for the day to day work in the fort.

History relates that Ravana’s air-plane was also made of light wood which was brought from Himalayan forests. Archaeologists, historians and some legends say that there were more than 500 paintings on the walls of Chitrakuta and most of them had been dilapidated due to natural causes. King Ravana was talented in all the fine arts as well as physician and pundit.

So, we Sri Lankans should be proud enough to have Chitrakuta or Sigiriya, the world’s oldest palace-fortress.

03) Ravana. Source : http://www.saibabaofindia.com/ravana.htm

——————————————————————————————————————-

In the Age of the Ramayana Epic, Ravana was the most powerful Tamil King of Lankapuri (Ceylon or Sri Lanka). He was a renowned devotee of Siva, who was pleased with his severe penances and austerities, granted him the boons of earthly fame and worldly might. Ravana was a very talented Veena (Indian music instrument) player. Ravana used Veena picture on the country flag. Ravana is not a Hindu God but rather a demon given great powers by the Gods because of his worship. The Gods granted him immunity from Death by a God and conferred superpowers upon him. Ravana set himself up as Tamil King of Lankapuri (Ceylon or Sri Lanka).

In the height of his sovereignty, imbued with the desire to have the Lord of Kailas, his tutelary Deity installed in Lanka, he exceeded the limits of disciplined discrimination and attempted by his invincible strength to transfix Mount Kailas, the traditional abode of Siva from the Himalayan region to that of Lanka. He was foiled in this feat by the Lord crushing him under His Feet, and finally, it was his astounding act of penance that saved him from the wrath of Siva. Ravana ripped into his left thigh, removed the nerve fibres and turned it into a lyre, and sang the praise of Siva.

Then it was that Siva released him, pleased with his mortification. This episode of Ravana was constantly alluded to by the Saiva psalmists to signify that piety and devotion alone without purity and humility, could not redeem man or give him peace. Ravana was a great Hindu Bhakta, yet his code of life violated the Hindu Dharma and he had to pay for it dearly.

Again in the life of Ravana, his insatiable pride and lust made him carry off Sita, the chaste wife of Rama of the powerful dynasty of Raghu at Ayodhya when they were living in the forest in exile. Rama and his union with the monkey God Hanuman to eventually attack Lankapuri ( Ceylon or Sri Lanka) and kill Ravana. Ravana was able by magic art to take his soul out of his body and leave it in a box at home, while he went to the wars.

Thus he was invulnerable in battle. When he was about to give battle to Rama, he deposited his soul with a hermit called Fire-eye, who was to keep it safe for him. So in the fight, Rama was astounded to see that his arrows struck the king without wounding him. But one of Rama’s allies, knowing the secret of the king’s invulnerability, transformed himself by magic into the likeness of the king, and going to the hermit asked back his soul. On receiving it he soared up into the air and flew to Rama, brandishing the box and squeezing it so hard that all the breath left the King of Lankapuri’s ( Ceylon or Sri Lanka) body, and he died. You will get much pleasure from reading the Ramayana and tracking the whole adventure.

There is a lot of evidence proving that the powerful Tamil King of Lankapuri (Ceylon or Sri Lanka) Ravana has been lived in Trincomalee. Because the Tamil tradition has it that the wife of the mythical king of Lankapuri, Ravana who was a devotee of Siva, worshipped at the Koneswaram shrine in Trincomalee. Another proof is the Discovery of Ravana’s swayambhu lingam.

It was originally found on a Tibetan mountain and later brought to Sri Lanka reportedly by the Tamil King Ravana. Moreover, in the Ramayana Epic period, Ravana has used Veena as Ceylon Flag and according to the “Veena” Pictures on the Trincomalee Fort proofs that Ravana has dominated in Trincomalee. Also, the seven Hot Wells ( Hot springs ) in Kanniya was made by the Tamil king Ravana.

நன்றி – மா.குருபரன்

Website – www.universaltamil.com

——————————————————————————————————————–

இராவணன் பற்றிய சில உண்மைகள்

இராவணன் பாதி பிராமண குலத்தையும், பாதி அசுர குலத்தையும் சேர்ந்தவன். இவர் தந்தையின் பெயர் விஷ்ராவா ரிஷி முனிவர். இவரின் தாட் கைகாசி அசுர குலத்தை சேர்ந்தவர். இராவணனின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் வாரவர்னினி இவர்களின் ஒரே மகன் தான் செல்வத்துக்கு கடவுளான குபேரன். விஷ்ராவாவின் இரண்டாவது மனைவியான கைகாசிக்கு இராவணன், கும்பகர்ணா, விபீஷனா, சூர்பனகை என நான்கு பிள்ளைகள் உண்டு.ராவணனின் இயற்பெயர்கள் தசகிரிவா மற்றும் தசாநனா என்பதாகும். பின்னர் இராவணன் என எல்லோராலும் அழைக்கப்பட்டார். இராவணன் மிக பெரிய சிவ பக்தன் ஆவார். அவரின் நெற்றியில் திருநீர் எப்போதும் இருக்கும்.

இலங்கை என்றும் அழியாமல் இருக்க சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் இராவணன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமாள் ஆத்மலிங்கத்தை ராவணனுக்கு தந்தார். அதை இலங்கை செல்லும் வரை கீழே வைக்க கூடாது என்றார், ஆனால் தேவர்களின் சூழ்ச்சியால் இராவணனால் அதை இலங்கைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.அனரன்யா மன்னரை இராவணன் வதம் செய்தார். அந்த மன்னர் இறக்கும் போது தசரதன் மகனால் தான் எனக்கு இறப்பு என கூறினார், அதன்படியே ராமனால் வதம் செய்யப்பட்டார் இராவணன்.குரங்கு குல தலைவனான வாலியை இராவணன் கொல்ல முயற்சித்தார். ஆனால் மிக சக்தி வாய்ந்த வாலி இராவணனைத் தன் கையால் தூக்கி கொண்டு கிஸ்கிந்தைக்கு சென்றது. அங்கு உனக்கென்ன வரம் வேண்டும் என கேட்க இருவரும் நண்பர்களாக இருப்போம் என இராவணன் கூறினார், பின்னர் இருவரும் நண்பர்களானார்கள்.

போர் குணம் கொண்ட இராவணனுக்கு ஜோதிடம் பார்க்கும் அபார திறமையும், வேத மந்திரங்களை கற்று தேறிய ஆற்றலும் இருந்தது. ஆட்சிக் கலையில் சிறந்து விளங்கியவர் இராவணன். இராமன் அவரை வதம் செய்த போது இராவணன் இறக்கும் தருவாயில் இருந்தான். அப்போது தன் தம்பி லட்சுமணை ராவணனிடம் அனுப்பிய ராமன், அவனிடம் ஆட்சிக் கலையை கற்று கொள்ளும்படி சொன்னார்.ராவணனின் தம்பி விபீஷனா இராமனின் தீவிர பக்தனாவார். பத்தாவது நாள் போரின் போது இராமனிடன் தன் அண்ணனின் வயிற்றுப் பகுதியில் அம்பை விட சொன்னது இந்த விபீஷனன் தான். இராவணன் கடும் தவம் செய்து பிரம்மனிடம் தன் உயிருக்கு எந்த கடவுளாலும், முனிவராலும், அரக்கர்களாலும் ஆபத்து வர கூடாது என வரம் கேட்டான். அது கிடைக்கவும் செய்தது. ஆனால் மனித உருவெடுத்த இராமன் பின்னாளில் இராவணனை வதம் செய்தார்.

——————————————————————————————————————–

இராவண காவியம்

இராவண காவியம் “Ravana Kaviyam” ஒரு தமிழ் கவிதை நூல். இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. இதை இயற்றியவர் புலவர் குழந்தை. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் எழுதப்பட்ட இக்காவியம் 1946 இல் வெளிவந்தது. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம். பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களையும் 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராமாயணக் காவிய கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாக கொண்டு இக்காவியம் படைக்கப்பட்டது.இராவணன், பிரித்தானிய அருங்காட்சியகம்

இராவணன், பிரித்தானிய அருங்காட்சியகம்

எந்த ஒரு சம்பவத்திற்கும் இரண்டு பக்கம் இருக்கும். நம்மில் பெரும்பாலனவர்கள் ராமாயணம் படித்து / தொலைக்காட்சிகளில் பார்த்து இருப்போம்.

இதைப் பார்ப்பவர்கள் ராமன் கடவுள், மிக நல்லவன், எந்தத் தவறும் செய்யாதவன், ஒழுக்கமானவன், தேவர்கள் என்றால் நல்லவர்கள், அசுரர்கள் மோசமானவர்கள் என்ற எண்ணம் தான் இருக்கும். இதற்கு நம் எண்ணங்களும் பழக்கப்பட்டு இருக்கிறது.

இராவணன் சீதையைக் கடத்தினான் அதனால் பிரச்சனை ஆனது என்று தானே தெரியும், அவனைப் பற்றி வேறு எதுவும் தெரியாதல்லவா! அது பற்றிக் கூறுவதே இந்த இந்த நூல்.

இராவண காவியம் படிப்போர் இராவணனையும் அவனைச் சார்ந்தோரையும் போற்றும் படியும், இராம, இலக்குவர்களையும் மற்றவர்களையும் வெறுக்கும் படியும் புலவர் குழந்தை திறம்பட பாடியுள்ளார். இக்காவியத்தை வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணனைத் தமிழ்க் கதாநாயகனாக சித்தரிக்கிறது.

இந்த நூல் சென்னை மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் 1948 – ஆம் ஆண்டு ஜூன் 2 – ஆம் தேதி தடைசெய்யப்பட்டது. 1971ம் ஆண்டு அரசின் தடை நீக்கப்பட்டது.

இராவண காவியம்

இராவண காவியம் “Ravana Kaviyam” ஒரு தமிழ் கவிதை நூல். இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. இதை இயற்றியவர் புலவர் குழந்தை. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் எழுதப்பட்ட இக்காவியம் 1946 இல் வெளிவந்தது.

இக்காப்பியம்:

  1. தமிழ்க் காண்டம்,
  2. இலங்கைக் காண்டம்,
  3. விந்தக் காண்டம்,
  4. பழிபுரி காண்டம்,
  5. போர்க் காண்டம்

என ஐந்து காண்டங்களையும் 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராமாயணக் காவிய கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாக கொண்டு இக்காவியம் படைக்கப்பட்டது.

இராவணன், பிரித்தானிய அருங்காட்சியகம்

இராவணன், பிரித்தானிய அருங்காட்சியகம்

எந்த ஒரு சம்பவத்திற்கும் இரண்டு பக்கம் இருக்கும். நம்மில் பெரும்பாலனவர்கள் ராமாயணம் படித்து / தொலைக்காட்சிகளில் பார்த்து இருப்போம்.

இதைப் பார்ப்பவர்கள் இராமன் கடவுள், மிக நல்லவன், எந்தத் தவறும் செய்யாதவன், ஒழுக்கமானவன், தேவர்கள் என்றால் நல்லவர்கள், அசுரர்கள் மோசமானவர்கள் என்ற எண்ணம் தான் இருக்கும். இதற்கு நம் எண்ணங்களும் பழக்கப்பட்டு இருக்கிறது.

இராவணன் சீதையைக் கடத்தினான் அதன் காரணமாக தேவ அசுர போர் ஏற்பட்டது  என்று தானே தெரியும், அவனைப் பற்றி வேறு எதுவும் தெரியாதல்லவா! அது பற்றிக் கூறுவதே இந்த இந்த இராவண காவியம்.

இக்காவியத்தை வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணனைத் தமிழ்க் கதாநாயகனாக சித்தரிக்கிறது.

இராவண காவியம்

இராவண காவியம் கதை சுருக்கம் மற்றும் விவரங்கள்  

இராவண காவியமும் ஆரிய திராவிட அரசியலும்

காமவல்லியை கண்ட இராமன் அவளிடம் காமமுற்று, அவளை வற்புருத்தினார். இராமரின் விருப்பத்திற்கு இணங்காததால், இலக்குவன் காமவல்லியின் உறுப்புகளை அறுத்து கொன்றார்…
தமிழர் அடையாளங்கள்… இப்படி தான் மறைக்கப்படுகின்றது.

—————————————————————————————————————————————–
இராவணனை சிங்களத் தலைவனாக ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல்! | என்.சரவணன்

மகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

1. சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் என்பது.

2. வங்கத்தில் இருந்து வந்த விஜயனில் தொடங்குகிறது சிங்களவர்களின் வரலாறு என்பது சிங்கள பௌத்தர்களின் புனித வரலாற்று நூலாக கருதப்படும்

மகாவம்சத்தில் சிங்களவர்களின் தோற்றம் பற்றிய கதையின் பிரகாரம் சிங்களவர்களின் பூர்வீகம் சிங்கம் என்கிறது. ஆக மிருகத்தின் வம்சாவளி என்று ஒத்துக்கொள்ள வேண்டிவரும். ஏற்காவிட்டால் மகாவம்சத்தை நிராகரித்ததாக ஆகும். மகாவம்சத்தை நிராகரிப்பது என்பது அவர்களின் இனவரலாற்றுப் பெறுமதியை இழப்பதாகும்.

எனவே விஜயன் சிங்கத்தின் பேரன் அல்ல என்றும், சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் அல்லர் என்றும் அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. ஆகவே தாம் சிங்கத்தின் வம்சம் அல்ல, அதற்கும் முந்திய இராவண வம்சம் என்கிற இன்னொரு கதையை கட்டியெழுப்ப நேரிடுகிறது.

ஐயாயிரம் வருடங்களுக்கு முந்திய பூர்வீகக் குடிகள் சிங்களவர் என்கிற புனைவை நிலைநாட்ட இராவணன் இப்போது அவசியப்படுகிறார்.

இதுவரை தாம் ஆரியர் பரம்பரை என்றும்  கூறி வந்தவர்கள் இப்போது திராவிட பூர்வீகத்தைக் கொண்டவர்கள் என்றும் கூறியாகவேண்டும். ஆனால் அதில் அரசியல் சங்கடங்களும் சர்ச்சைகளும் நிறைந்துள்ளன. தமிழர்களை சிங்கள மொழியில் “திரவிட” (திராவிடர்) என்று தான் பொதுவில் அழைத்து வருவதை நாம் அறிவோம்.

அதைவிட அடுத்த சிக்கல் இக்கதைகளின் பிரகாரம் விஜயன் ஒரு அந்நியனாக இருக்கிறான். அவன் வட இந்தியாவிலிருந்து இன்னும் சொல்லப்போனால் வங்க தேசத்திலிருந்து வந்ததாக ஒத்துக் கொள்ளவேண்டும். தாம் அந்நியர் என்று ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். அது மண்ணின் மைந்தன் கருத்துருவாக்கத்துக்கும் பெருந்தடையாக ஆகிவிடுகிறது.

எனவே தான், தாம் வங்கத்திலிருந்து வந்த ஆரியர் என்கிற கதைகளையும் புறந்தள்ளி, கைவிட்டுவிட்டு இராவணக் கதைகளுக்கு உயிர்கொடுத்து இராவணனை தமது தலைவனாக ஏற்பதன் மூலம் முழு இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்கிற இடத்துக்கு வந்து சேருகிறார்கள். இராவணனை ஹைஜாக் (Hijack) செய்வதன் பின்புலம் இதுதான்.

ஒரு கற்பிதக் காவியத்துக்கு வரலாற்றுப் பெறுமதியையும், அரசியல் பெறுமதியையும், இனப்பெருமதியையும், மதப் பெருமையையும் கொடுத்து வெகுஜன அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் காவியமாக இன்று ஆக்கப்பட்டிருக்கிறது இராமாயணக் கதை. அந்தக் கதைக்கு தொல்பொருள் சான்றில்லாததால், காணக்கிடைக்கிற தொல்பொருள்களையெல்லாம் வலிந்து அவற்றுடன் தொடர்புபடுத்திப் புனைகிற செயற்பாடுகள் இலங்கையில் வெகுவாக வளர்ந்திருக்கிறது.

ஆய்வணுகுமுறையில் இரு வகையுண்டு. முதலாவது கிடைக்கப்பெறும் சான்றுகளைக் கொண்டு முடிவுக்கு வருதல். அடுத்தது எடுத்த முடிவை நிறுவுவதற்கு ஆதாரம் சேர்ப்பது.

முற்கற்பித முடிவுகளை நிறுவுவதற்கு வலிந்து ஆதாரம் கோர்க்கும் பணிகளே இலங்கையில் தற்போது நிறைந்துள்ளது. இதில் உள்ள சோகம் என்னவென்றால் நிபுணத்துவம் பெற்ற தொல்பொருள் ஆய்வாளர்கள் இதில் இறங்கியிருப்பது தான். அவர்களின் இனவாத பின்புலம் அவர்களை இப்பணிகளை நோக்கி உந்துகிறது.
2012 ஆம் ஆண்டு ஜனவரி 11 அன்று திவயின பத்திரிகைக்கு வீரசேன அல்கெவத்த என்பவர் எழுதிய “இராவணன் வரலாற்றுப் பாத்திரமா? என்கிற கட்டுரையில் இப்படித் தெரிவிக்கிறார்.

“மகாநாம தேரர் மகாவம்சத்தில் பல தகவல்களை திட்டமிட்டே மறைத்துவிட்டார். விஜயன் வந்திறங்கிய தினத்தில் தான் புத்தரின் இறப்பு நிகழ்ந்திருக்கிறது. அதே வேளை புத்தர் இறப்பதற்கு முன்னர் இலங்கைக்கு வந்திருக்கிறார். அப்போது இயக்கர்களும் நாகர்களும் இருந்திருக்கிறார்கள். அரசர்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்திருக்கிறார். அப்படியென்றால் அவர் வரும்போது இந்தத் தீவு வெற்றுத் தீவாக இருக்கவில்லை. அப்படி இருக்கும் போது அதன் பின் பல ஆண்டுகள் கழித்து வந்த விஜயனில் இருந்து தான் சிங்கள இனத்தின் பூர்வீகம் தொடங்கியது என்றது எதற்காக? தனது இந்தியப் பூர்வீக உரிமையை எழுத்தில் நிலைநாட்டவா மாநாம தேரர் முயற்சித்திருக்கிறார்.
இலங்கையில் அதற்கு முன்னர் இருந்தே பண்டைய காலத்தில் வாழ்ந்த ராவண ராஜ்ஜியம் பற்றி இந்தியாவில் இருந்து கூறும்போது நமது வரலாற்றாசிரியர்கள் ஏன் அதைக் கண்டுகொள்ளவில்லை. விஜயன் வரும்போது எந்தக் குடிகளும் வாழவில்லை என்பது ஏன்? மகாவம்சம் இராவணனை இருட்டடிப்பு செய்துவிட்டது”

என்கிறார்.

இராவண உயிர்ப்பு எங்கிருந்து தொடங்கியது?

இராமாயணம் பற்றிய தேடல்கள் இலங்கையில் உயிர்த்த காலம் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தான். ஆங்கிலேய அறிஞர்கள்களின் இலக்கிய-வரலாற்றுத் தேடல்களின் மூலம் அது நிகழ்ந்தது எனலாம். ராஜரீக ஆசியக் கழகத்தின் இலங்கைக் கிளையின் சஞ்சிகையில் இது பற்றிய பல விவாதங்கள், ஆய்வுக் கட்டுரைகளின் சமர்ப்பிப்புகளைக் காண முடிகிறது.

இதேவேளை இலங்கையின் பாட நூல்களில் இராமாயணம் பற்றி இந்தியாவில் நிலவுகிற அதே இராமாயணக் கதையின் சுருக்கத்தைத் தான் கற்பித்து வந்தார்கள். ராமனை நாயகனாகவும், சீதையை நாயகியாகவும், சீதையைக் கவர்ந்து கடத்தி வந்து சிறைவைத்து சண்டையிட்ட இராவணனை வில்லனாகவும் சித்திரிக்கிற கதை தான் நெடுங்காலமாக சிங்களப் பாடநூல்களில் இருந்தன. இராவணன் இலங்கையில் வாழ்ந்தான் என்றும் இலங்கைத் தவிர வேறெங்கும் வாழவில்லை என்கிற கருத்தே உறுதிபட அக்கதைகளின் மூலம் மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது. சிங்கள அரசர்களான விஜயன், துட்டகைமுனு போன்ற வரலாற்றுப் பாத்திரங்களுக்கு முன் இராவணன் ஒரு சிங்கள வீரன் அல்லன். இராவணனுக்கு எந்த மரியாதைப் பெறுமதியும் கொடுக்கப்படவில்லை. ஒரு வகையில், மாற்றான் மனைவியைத் திருடிய திருடனாகவே இராவணன் உருவகப்படுத்தப்பட்டிருந்தான்.

இராவணின் வீரதீரச் செயல்கள் பற்றியோ, இராவணின் இராஜ்ஜியம் பற்றியோ, இராவணின் போர் முறைகள் பற்றியோ, இராவணின் பறக்கும் வானூர்தி பற்றிய கதைகளோ கூட முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. கணக்கில்கொள்ளப்படவில்லை.

வீரம் செறிந்தவர்களாக இராமனும் அனுமானும் முக்கியப் படுத்தப்பட்டிருந்தனர்.  கதஹ்யின் படி இவர்கள் இராவணனைத் தோற்கடித்துச் சீதையை மீட்டுக்கொண்டனர். சுப்பர்மேன் (Superman) பற்மன் (Batman) ஆகிய இருவரும் செய்கிற தீரச் செயல்களைத் தொலைக்காட்சியில் பார்க்க முடியாத ஒரு காலத்தில் இராவணனின் இராவணனின் பறக்கும் வானூர்தி பற்றிய உருவகம் நிச்சயமாக பலரைக் கவர்ந்திருந்தது. அப்படியான உருவகங்கள் வழியாகத்தான் இராவணன் முற்றுமுழுதாக நீங்காமல் பலரது நினைவில் இருந்தான் என்று நான் நினைக்கின்றேன். சிங்கள இனத்தின் மாவீரனாக இராவணன் உணரப்பட்டதில்லை.
“ஹெல ஹவுல” இயக்கம்இலங்கையின் மிகப் பிரசித்திபெற்ற சிங்கள மொழிப் பண்டிதராகவும், இலக்கியவாதியாகவும் கருதப்படுபவர் குமாரதுங்க முனிதாச. 1941 ஆம் ஆண்டு ஜனவரி 11 அவரின் தலைமையில் அவரின் வீட்டில் வைத்து உருவாக்கப்பட்ட இயக்கம் தான் “ஹெல ஹவுல” (Hela Havula) என்கிற இயக்கம். ஒரு வகையில் இதை மொழித் தீவிரவாத இயக்கம் என்றும் அழைப்பார்கள். (1)

“ஹெல” என்பதே சிங்கள மொழியின் மூல மொழி என்றும் அதை பலப்படுத்தும் வகையில் தான் “ஹெல ஹவுல” என்று பெயர் வைத்துக்கொண்டார்கள்.

சிங்கள இனத்தை தூயமைப்படுத்தவேண்டும் என்றால் சிங்கள மொழியும் அந்நிய கலப்பில்லாத தூய்மையான சிங்கள மொழியாக இருத்தல் வேண்டும் என்று அந்த இயக்கத்தவர்கள் கூறினார்கள். சிங்களத்தில் கலந்துள்ள பாலி, சமஸ்கிருதம் என்பவற்றின் செல்வாக்கை நீக்க வேண்டும் என்று இயங்கினார்கள். அது மட்டுமன்றி காலனித்துவ போத்துக்கேய, ஒல்லாந்து, ஆங்கிலேயக் கலப்புகள் கூட இல்லாத சிங்களத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற இயக்கத்தை முன்னெடுத்தார்கள். ஹெலியோ (The Helio) என்கிற ஒரு சஞ்சிகையும் 1941 இல் தொடக்கி நாடளாவிய ரீதியில் நடத்தினார்கள்.(2) குமாரதுங்க முனிதாச எழுதிய சிங்கள இலக்கணம் குறித்த நூல் ஒரு தலையாய நூலாக திகழ்கிறது.(3)

இந்திய ஆரியவாத செல்வாக்கிலிருந்து சிங்கள மொழியையும், இலக்கியங்களையும் மீட்கவேண்டும் என்று இயங்கியது இவ்வியக்கம். அதுபோல ஒரு இனம் பூரணப்படாமல் மொழி மட்டும் தனித்து எப்படி வாழும் என்றார்கள்.

இலங்கையின் பிரபல நாடகாசிரியர் ஜோன் த சில்வா 1886 இல் முதற் தடவையாக இராமாயணத்தை இலங்கையில் மேடையேற்றினார். அந்த இராமாயண நாடகத்தின் பிரதி பல ஆண்டுகளாக மேடையேற்றப்பட்டு வந்தது. அந்த பிரபலமான இராமாயணக் கதை இலங்கையின் சுயத்துக்கு இழுக்கு என்று “ஹெல ஹவுல” தீர்மானித்தது. இராமாயணத்துக்கு மாற்றாக அவர்கள் “சக்வித்தி ராவண” என்கிற ஒரு நாடகத்தை இயக்கினார்கள். அது 1946முதன் முதலில் மேடையேற்றப்பட்டது. சிங்கள சமூகத்தில் பிரசித்திபெற்ற இந்த நாடகம் இன்றும் ஆயிரக்கணக்கான தடவைகள் மேடையேற்றப்பட்டு வருகிறது.

அந்த நாடகத்தில் வரும் “பொம்புளே மேக் பொம்புளே” என்கிற பாடல் தமிழர்கள் பலரும் அறிந்த பிரசித்தமான பாடல்.

ஹெல ஹவுல இயக்க திட்டத்தின் ஓர் அங்கமாக, இதிகாச வாயிலாகக் கூறப்பட்ட சிங்களவர்களின் மூதாதையரான விஜயனின் வருகைக்கும் முற்பட்ட காலத்தைப் பற்றிய கண்ணியமான வரலாறொன்றினை கட்டியெழுப்ப்புவதன் முக்கியத்தை உணர்ந்தார்கள். விஜயனின் வருகைக்கு முன்னரும், அதன் பின்னர் இந்தியச் செல்வாக்குகள் ஊடுருவுவதற்கு முன்னரும், இலங்கையில் தூய்மையான வரலாற்றைக் கொண்ட பாரம்பரியமும் நாகரிகமும் இருந்தன என்பதை வலியுத்தினார்கள்.
இராவணனின் கற்பனைக் கதைக்குப் புத்துயிர்ப்பு அளிக்கும் போது இராவணனை இயக்கன் என்றும் இராட்சத அரசன் என்றும் குறிப்பிடுவது வழக்கம். ஆரம்பத்தில் இயக்கர்களும் (Yakshas), இராட்சதர்களும் (Rakshas) இலங்கையில் வாழ்ந்தனர் என்றும் அவர்கள் மனிதர்கள் அல்லர் என்றுமே சிங்களப் புராணக் கதைகளில் காணப்படுகின்றது. “இயக்கர்’, இராட்சதர்” என்ற பதங்களின் வர்ணனைகளின் மூலம் அவர்கள் மனிதர்களை விழுங்கி தீங்கு விளைவிக்கிற பேய்களைப் போலத்தான் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படியான இராவணனின் பேய்த்தோற்றத்தையும், இயக்கர்களின் பேய்த் தோற்றத்தையும் மாற்றி, மானிட உருவம் கொடுத்தது இந்த இயக்கம்.
2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து இராணி எலிசபத் இராணியாக பதவியேற்று 50 வருட நிறைவைக் கொண்டாடும் முகமாக பக்கின்ஹோம் மாளிகையில் நடத்தப்பட்ட கலை நிகழ்சிகளில் கலந்துகொள்வதற்காக இந்த நாடகமும் தெரிவானது. அந்நாடகத்தை இராணி மிகவும் இரசித்தார் என்கிற பதிவுகளையும் காண முடிகிறது. (4)

இந்த நாடகத்தில் தான் இராவணன் முதற் தடவையாக ஒரு கதாநாயகனாக மாற்றப்படுகிறான். இந்த நாடகம் இராவணனை பற்றி புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது. அதுவே இராவணனைப் பற்றிய தேடலையும் தூண்டியது. இராவணன் இலங்கையின் தலைவன் தானே, நமது தலைவன் அல்லவா? சிங்களத் தலைவன் அல்லவா என்கிற முடிவுக்கும் வந்தார்கள்.

இராவணப் புனைவின் முன்னோடி நூல்

இராவணன் பற்றிய புனைவுகளை வரலாற்று உண்மை போல சித்திரிக்கும் வகையில் வெளியான முன்னோடி நூல் ஆரியதாச செனவிரத்ன என்பவர் 1991இல் எழுதிய (ශ්‍රී ලංකා – රාවණ රාජධානිය – ஸ்ரீ லங்கா : இராவண ராஜ்ஜியம்) என்கிற நூல்.

இன்று இராவணனைப் பற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள நூல்கள் வெளிவந்திருந்தாலும் இராவணனை சிங்களவர்கள் மத்தியில் மீளுயிர்த்ததில் இந்நூலுக்கு முக்கிய பங்குண்டு. அந்த நூல் பின்னர் பல (திருத்திய) பதிப்புகளைக் கண்டது. அந்நூலில் இராவணனின் உயில். (இறுதி ஆசை) என்றெல்லாம் கட்டுக்கதைகள் நிறைந்த அத்தியாயங்கள் உள்ளன. இந்நூல் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவை கௌரவிக்குமுகமாக வெளியிடப்பட்டது. அப்போது இந்தியாவை கடுமையாக எதிர்த்தபடி இருந்தார் பிரேமதாச.

இராவணன் இந்தியாவிற்கு எதிராகக் கொண்டிருந்த உணர்வலைக்கும், பிரேமதாச கொண்டிருந்த உணர்வலைக்கும் இடையிற் காணப்பட்ட நேரடி ஒருமைப்பாட்டினை இந்நூலில் அவர் விளக்குகின்றார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராவணன் காட்டிய துணிச்சலும், தியாக உணர்வும், உண்மையில் பிரேமதாசவின் வீரத்தை ஒத்திருந்தன என்கிறார்.

“இராவணன் காட்டிய துணிச்சலும், தியாக உணர்வும், பிரேமதாசவின் வீரத்தை ஒத்திருந்ததாக அந்நூலின் முகவுரையில் அவர் குறிப்பிடுகிறார். அப்போது பிரேமதாச துணிச்சலுடன் இந்தியாவை பகைத்துக்கொண்டார். IPKF ஐ வெளியேறச் சொன்னார்.
சமாதானத்தை நிலைநாட்டுவது என்ற பொய்யான போர்வையில், இந்தியாவின் புதிய அவதாரமான இராமரினால் அனுப்பப்பட்ட அந்நியப் படைகளை (IPKF) பிரேமதாச தனது சொற்போரினால் விரட்டியடித்தார்” என்கிறார்.

1995 இல் சசங்க பெரேரா எழுதிய கட்டுயொன்றில்; விஜயன் பற்றி புனைந்து சிங்கள மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் மகாவம்சக் கதைகளை இல்லாமல் செய்வதோ இராவண கதைக்கு புத்தியிரப்பளிப்பதோ வெற்றியடையமாட்டாது என்றும் அவர்களின் கற்பனையில் கூட இராவணனின் கதை பதியவில்லை என்றும், அது சாத்தியமில்லை என்றும் குறிப்பிடுகிறார்.(5) ஆனால் சரியாக இப்போது 25 வருடங்கள் ஆகும் போது அந்த கணிப்பு தகர்ந்திருக்கிறது பேரினவாத நிகழ்ச்சிநிரல் என்று தான் கூறவேண்டும். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பின் மூலம் நில ஆக்கிரமிப்பையும் அதன் வழியாக ஒட்டுமொத்த தமிழர் அபிலாஷைகளை நிறைவுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சிநிரலின் அங்கமே இந்த இராவணக் கடத்தல் எனலாம்.

வெகுஜனமயப்படுத்தப்படும் இராவணன்

இராவணன் பற்றிய கதைகளும் அல்லது இராவணப் புனைவுகளும் இராமாயணக் காவியம் உருவாக்கப்பட்ட இந்தியாவிலும், இலங்கை வாழ் சிங்கள – தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி இந்திய உபகண்ட நாடுகளிலும் தாய்லாந்து, மியான்மார், பாலித்தீவு போன்ற தென் கிழக்காசிய நாடுகளிலும் பாரம்பரிய நாட்டார் கதைகள் மூலமும், இலக்கியங்களின் மூலமும், நம்பிக்கைகளின் மூலமும் செல்வாக்கு செலுத்தி வருகிறது.  மேற்கு நாட்டு நாட்டு அறிஞர்களையும் கலைஞர்களையும் கூட ஈர்க்கிறது, ஏனெனில் இதற்கு ஒரு இலக்கியக் காவியப் பெறுமதி உண்டு என்பது உண்மை. இது மாய, மந்திர, போர், காதல், பழிவாங்குதல் மற்றும் கதாநாயக வழிபாடு என ஈர்க்கிறது.

அந்த வகையில் காவியப் பெறுமதிக்கப்பால் அதற்கென்று ஒரு நம்பகப் பெறுமதி கிடையாது. ஆனால் அக்காவியம் மக்களின் செவி வழிக்கதைகளினூடாகவும், நாடகம், கூத்து என இன்னும் பல கலை இலக்கிய வடிவங்களின் ஊடாகவும் வழிவழியாக வெகுஜன செல்வாக்கை நிறுவியிருக்கிறது.

இராமாயணத்தையும், இராவணனையும் வரலாற்று, தொல்லியல் வழிமூலம் எவரும் நிறுவியது கிடையாது. ஆனால் இன்று வரை இந்தியாவில் இந்துத்துவ பாசிச சக்திகளால் புனிதப்படுத்தப்பட்டு இராமனை தெய்வமாக கோவில் கட்டி வழிபடுவதோடு நிற்காமல் இராமனை இன்றையை இந்துத்துவ போரின் தலைமை வடிவமாகவும் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றனர். அதே இந்தியாவில் இராவணனின் உருவப்பொம்மையை தீயிட்டு கொளுத்தி இராவணனைக் கொன்ற நாளாகக் கொண்டாடுவதை இந்திய வட மாநிலங்களில் இராமலீலா என்கிற பேரில் பண்டிகையாக நெடுங்காலமாக கொண்டாடப்படுகிறது.

வெகுஜனத் தளத்தில் இராமாயணமும், இராமனும், எப்படி வட இந்தியாவில் நம்பகமான கதையாக நிறுவப்பட்டுள்ளதோ அதுபோலவே இலங்கையில் இராவணன் சிங்களவர்கள் மத்தியில் சீமீபகாலமாக நம்பகமானதாக நிறுவப்பட்டுவருகிறது. ஆனால் இலங்கையில் சிங்களவர்கள் இராவணனைக் கொண்டாடிய அளவுக்கு இராமாயணத்தை கொண்டாட முற்பட்டதில்லை. ஏனென்றால் இராமாயணத்தில் வில்லன் “சிங்களத் தலைவன் இராவணன்”. ஆனாலும் இராமாயணத்தை தவிர்த்து இராவணக் கதைகளை நிறுவமுடியாததால் இராமாயணத்தை சில சிங்கள தொலைகாட்சி சேனல்கள் வெளியிட்டன. இந்தியாவில் இந்தி மொழியில் வெளியான இராமாயணத் தொடரை சிங்கள டப்பிங்குடன் வெளியிட்டு வந்தார்கள் அவர்கள். அதை மீண்டும் மீண்டும் வெளியிட்டார்கள்.

அதன் பின்னர் 2018இல் இராவணன் பற்றிய மெகா தொலைகாட்சி “உரையாடல்” தொடரொன்றை சிங்கள மொழியில் “ராவண” (රාවණ) என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் இனவாத தொலைக்காட்சிச் சேனலாக இயங்கிவரும் “தெரண” என்கிற சேனலில் இந்தத் தொடர் 100 தொடர்களையும் கடந்தது. இராவணன் பற்றிய ஊகங்களையும், புனைவுகளையும், கட்டுக்கதைகளையும் பேச பல சிங்கள வரலாற்றாசிரியர்கள், இலங்கையின் அதி பிரசித்திபெற்ற தொல்பொருள் நிபுணர்கள், பாரம்பரிய கலைஞர்கள் பலர் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இந்தக் கற்பிதங்களை தொழில்சார் நிபுணர்களாக (Professionals) எப்படி இது முடிகிறது என்றே நமக்குத் தோன்றும்.

பின்னர் கடந்த நவம்பரிலிருந்து தொலைகாட்சி நாடகத் தொடராக இன்னொரு “ராவண” என்கிற பேரில் தெரண தொலைக்காட்சிச் சேவையில் ஞாயிறு நாட்களில் 8.30 மணியளவில் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரம் Hi peak என்று சொல்லக்கூடிய அதிக பேர் பார்க்கக் கூடிய நேரம் என்பதால் ஒளிபரப்பு செலவும், விளம்பரக் கட்டணமும் உயர்ந்த நேரம் என்பதும் கவனிக்கத்தக்கது. இம்மாதம் (2020 யூன் மாதம்) அது 21 வாரங்களையும் கடந்து போய்க்கொண்டிருகிறது. துஷார தென்னகோன் என்பவர் இதனை இயக்கிவருகிறார். 100 வாரங்கள் வரை எட்டுவதே தனது இலக்கு என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் இது பற்றிய ஆய்வுகள் பல நிகழ்த்தியவர் என்கிற செய்தியுடன் தான் அதன் விளம்பரங்களும் வெளியிடப்பட்டன.

இது வெளிவர முக்கிய பாத்திரம் வகித்த “தெரண” தொலைக்காட்சியின் உபதலைவரான லக்சிறி விக்கிரமகே கதையின் மூலத்தைப் பற்றி இப்படி தெரிவிக்கிறார்.

“இராவணன் ஒரு அதிசயிக்கத்தக்க அரசன். அப்பேர்பட்ட ஒரு ஒரு தலைவனைப பற்றிப் பேச வான்மீகியின் இராமாயணத்தை ஒரு “மூலமாக” நாங்கள் பயன்படுத்தவில்லை. வால்மீகியின் இராமாயணத்தில் இராவணன் ஒரு துஷ்டனாக காண்பிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் நிகழ்ந்தது பாரதத் தரப்பை அவர் தோற்கடித்தார். அதனால் தான் அவர்கள் இராவணனை துஷ்டனாக காண்பிக்கிறார்கள்.” (6)

இராவணன் என்கிற திரைப்படமாகத் தயாரிப்பதே ஆரம்பத்தில் இருந்த திட்டம் என்கிறார் மேலும் அவர்.

இதைத் தவிர அரச தொலைக்காட்சி சேவையான ITNஇல் (சுயாதீன தொலைக்காட்சிச் சேவை) “இராவண புராணம்” (ராவண புராணய රාවණ පුරාණය) என்கிற ஆவணப்படத் தொடர் சென்ற ஆண்டு தொடங்கப்பட்டு 21 வாரங்கள் காண்பிக்கப்பட்டன. இத்தொடரில் இராவணன் புலங்கியதாக சொல்லப்படும் இலங்கையின் பல பகுதிகளுக்கு பயணித்து அங்குள்ள குகைகள், மலைகள், காடுகள், நதிகள் என்பவற்றைகே காட்டி பல கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள். இங்கு உறங்கினார், குளித்தார், சீதையை மறைத்துவைத்திருந்தார், ஐந்து வானூர்திகளை வைத்திருந்தார். இங்கு தான் இறக்கினார், என்றெல்லாம் கதை விடுகிறார்கள். இது ஒரு அரச தொலைக்காட்சியின் சொந்த நிகழ்ச்சி என்பதை கவனிக்க.
இந்த புனைவுகளின் உச்சம் என்னவென்றால் ஒரு இடத்தில் இப்படி குறிப்பிடுகிறார்,

“இராவணனின் உடல் இன்னும் பக்குவமாக இருக்கிறது. ஆனால் தயவு செய்து எங்கே இருக்கிறது என்று தேடப்போகாதீர்கள். அது ஆபத்தானது. அப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்கியவர்களுக்கு என்ன ஆனது என்பதை நாங்கள் அறிவோம் அதனால் தான் கூறுகிறோம்” என்கிறார் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான கயான் சந்தகெலும். இவரின் இன்னொரு காணொளியும் காணக்கிடைத்தது அதன் தலைப்பு “இராவணன் பௌத்தனா? இந்துவா?” அதில் அவர் “புத்தருக்கு முற்பட்ட காலத்து இராவணனை” பௌத்தன் என்று நிறுவ அதிக சிரத்தை எடுக்கிறார். புத்தர் பௌத்தத்தைத் தந்தவர்களில் இடைப்பட்டவர் தான் என்றும் அதற்கு முன்னரே அத்தத்துவத்தை தந்துவிட்டு சென்றவர்கள் இருக்கிறார்கள் என்றும், ஆகவே இராவணன் ஒரு பௌத்தன் தான் என்றும் நிறுவ முற்படுகிறார்.

இந்திரஜித்தின் கிரியோடிஷ்ய (ඉන්ද්‍රජිත්ගේ  ක්‍රියොඩ්ඩිශය) என்கிற தலைப்பிலான சிங்கள நூலொன்றின் விமர்சனத்தை யூடியூப் சேனலில் சமீபத்தில் கண்டேன். இந்த விமர்சனத்தைச் செய்தவர் பேராசிரியர் லீலானந்த விக்கிரமாராச்சி. இராவணனின் மகன் இந்திரஜித் கையாண்ட போர் நுட்பங்கள் பற்றியதாம் இந்த நூல். இது தேவநாக எழுத்து வடிவத்தில் கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடியை சிங்களத்துக்கு மொழிபெயர்த்து அச்சுக்கு கொணரப்பட்ட நூல் என்று அறிமுகம் செய்கிறார். பேராசிரியர் லீலானந்த விக்கிரமாராச்சி பாரம்பரிய சிங்கள தற்காப்புக்கலைகளை கற்றுக் கொடுப்பதில் பிரசித்தி பெற்றவர். இலங்கை இராணுவத்துக்கு சிறப்புப் பயிற்சிகளை அவர் செய்பவர் என்பதை அவரின் இணையத்தள விபரங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

மேற்படி கூறிய அனைத்து நாடகங்களும், ஆவணப்படங்களும், உரையாடல்களும். நூல் விமர்சனமும் youtube இல் காணக்கிடைக்கிறது. இக்கட்டுரைக்காக அங்கிருந்துதான் அவற்றை ஆதாரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டேன். இராவணனைப் பற்றி ஒருதொகை வீடியோக்கள் சிங்களத்தில் அங்கு உள்ளன.

மேலும் சிங்களச் சூழலில் இராவணன் பற்றிய அலை மேலெழுந்திருக்கிற இந்தக் காலத்தில்; சிங்களச் சந்தையில் இராவணன் ஒரு பெரும் விற்பனைப் பண்டமாக ஆக்கப்பட்டிருப்பதைத் தான் அவதானிக்க முடிகிறது.

இராணவன் பற்றி சிங்களச் சூழலில் இதுவரையான எனது அவதானிப்பில் கண்டு கொண்ட சில புள்ளிகள்:

இராவணின்  வழித்தோன்றல் தாங்கள் தான் என்று உரிமைகோரி சிங்களக் கிராமங்களே உள்ளன. அதன் தொடர்ச்சியாக இராவணின் உறவுகாரர் தாங்கள் தான் என்று அறிவித்துக்கொண்டு வாழ்வோர் இலங்கையில் உள்ளனர்.

இராவணன் மீண்டும் எழுவார் என்றும் இன்னும் சிலர் இராவணன் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார் என்றும் நம்மைச் சுற்றி இருக்கிறார் என்கிற ஐதீகங்களும் உள்ளன.

இலங்கையின் அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும் சீகிரிய மலைக் கோட்டையை செய்தது இராவணன் என்கிற நம்பிக்கை உண்டு. அந்த மலையின் மேல் இராவணின் விமானம் இறங்கும் இறங்குதளத்தின் தடங்கல் இருப்பதாக நம்பப்படுகிறது.

சீகிரிய ஓவியத்தில் காணப்படுகிற ஓவியத்தில் இருப்பது இராவணின் மனைவி மண்டோதரியும், மண்டோதரியின் பரிவாரப் பெண்ணும் தான் என்கின்றனர். இதைப்பற்றிய செவிவழிக் கதைகள் இப்போதும் அந்த ஊர்களில் நிலவுகின்றன.

சிகிரியவைச் சுற்றி உள்ள ஊர்களில் கிராமிய மரபுவழிப் பாடல்களாக இன்னும் இப்படி ஒரு பாடல் பாடப்படுவதுண்டு.

සීගිරි ගලේ විල සැදුවේ      කවුරුන්දෝ
සීගිරි ගලේ රූ ඇන්දේ       කවුරුන්දෝ
සීගිරි රුවෙන් දිස් වන්නේ  කවුරුන්දෝ
මෙතුන් පදේ විසඳන්නේ   කවුරුන්දෝ
පිළිතුර:
සීගිරි ගලේ රාවණ දෙවි විල   සැදුවා
සීගිරි ගලේ විස්කම් සිත්තම් කෙරුවා
සීගිරි රුවෙන් මන්දෝදරී  දිස්වෙනවා
මෙතුන් පදේ නිසි ලෙස මම විසඳනවා

சிகிரியா பாறையின் ஏரியை கட்டியவர் யார்
சிகிரிய ஓவியத்தை வரைந்தவர் யார்
சிகிரிய தோற்றத்தில் இருப்பவர் யார்
இம்முக்கேள்விக்கு விடை தருவார் யார்
பதில்:
இராவணன் கடவுள் சிகிரிய பாறையில் ஏரியைக் கட்டினார்
அவர் சிகிரியா பாறையில் ஓவியம் வரைந்தார்
சிகிரிய உருவத்தில் மண்டோதரி வியப்பூட்டுகிறார்
இம்முக்கேள்விக்கும் விடை தீர்த்தேன் நான். (7)

(இப்பாடல் எக்காலத்தில் இருந்து தொடரப்பட்டது, யாரால் இயற்றப்பட்டது போன்ற விபரங்களை அறிய முடியவில்லை. ஆனால் இப்பாடலை பல சிங்கள கட்டுரைகளிலும் மேற்கோள் காட்டுகிறார்கள்.)

இராமனையும், இராமாயணத்தையும், அதன் வழியாக வைணவத்தையும் கொண்டாடுவதும், வழிபடுவதும், நீட்சியாக இராவணனைக் கொண்டாடும் வெகுசிலராக தமிழர்கள் குறுகிவிட்ட நிலையில் இராவணன் தமது தலைவனே என்று சிங்களவர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். இராவணன் அரக்கர் இனத்தில் இருந்து வந்த“ஹெல” இனத்துத் தலைவன் என்றும், அந்த இராவணின் வழித்தோன்றல் குவேனி என்றும் குவேனியை கரம்பிடித்தவர் விஜயன் என்றும் அவர்களின் வழித்தோன்றலே சிங்களவர்கள் என்றும் நிறுவுகிற நூல்களை இப்போதெல்லாம் நிறையவே காணக் கிடைக்கின்றன. குறிப்பாக இராவணனைக் கொண்டாடுகின்ற சிங்கள நூல்கள் கடந்த பத்தாண்டுக்குள் மாத்திரம் 500 க்கும் அதிகமான நூல்கள் வெளிவந்திருப்பதாகக் கணிக்க முடிகிறது.

ஒரு அரை மணி நேர இணையத் தேடலில் இராவணன் பற்றிய 50க்கும் மேற்பட்ட சிங்கள நூல்களின் அட்டைப் படங்களை தேடியெடுக்க முடிந்தது. உதாரணத்திற்கு 15 நூல்களின் தலைப்புகளை இங்கு தருகிறேன்.  இவை அனைத்தும் 2012க்குப் பின் வெளிவந்தவை தான்.

  • இராவணன் மீள எழுகிறான்
  • இலங்கையில் ராவண அரசனின் பின்னர் தோன்றிய நமது அரச பரம்பரையினர்
  • சிங்களவர்களின் தலைவன் இராவணன்
  • இராவண சக்கரவர்த்தியின் திதுலன பம்பர கோட்டை
  • இராவண நடவடிக்கை (Ravana operation)
  • சிங்களவர்களின் முன்னோடி இராவணன்
  • மகாராஜா இராவணன் கட்டியெழுப்பிய பண்பாடு
  • புனைவற்ற இராவண புராணம்
  • இராவணனின் தளம்
  • இராவணக் கோட்டை
  • இலங்கையில் இராவண இராஜதானியும் சீகிரிய புராணமும்
  • இலங்கையின் இராவண சக்கரவர்த்தியின் கலாசார மரபு
  • இராமாயணம் என்கிற மூவுலகையும் வென்ற நமது தலைவன் இராவணன்
  • சிங்கள வம்சத்தின் இராவணவாதம்
  • ஸ்ரீ லங்கேஷ்வர மகா இராவணன்

இராவணன் பற்றிய விசித்திரமான – வியப்பான சமீப கால சிங்களக் கட்டுரைகளின் தலைப்புகளைப் பாருங்கள்

  • இராவணனின் வரலாற்றை மூடி மறைக்க முடியாது
  • இராவணனின் விமானத் தொழினுட்பமும் பண்டைய விமானமும்
  • வெள்ளையருக்கு முன்னரே இராவணன் மேலே பறந்த இரகசியம்
  • இராவண அரசனின் போர் முறை
  • இராவணனின் இரத்தச் சொந்தங்களைக் காண ஒரு கிராமத்துக்குச் சென்றோம்.
  • இராவண வரலாற்றைப் புதைத்துவிட முடியாது

“வரிக பூர்ணிகா”

இயக்கர்களைப் பற்றிய பல விபரங்களை உள்ளடக்கியதே “வரிக பூர்ணிகா” (වරිග පූර්ණිකාව – Vargapurnikawa அல்லது Wargapurnikawa) என்கிற ஓலைச்சுவடிகள். இது இராவணன் காலத்திலிருந்து வாய்மொழியாகவும், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் வழியாகவும் இராவணப் பரம்பரை காத்து வந்த தகவல்களை ஒன்றிணைத்து எழுதப்பட்ட ஒன்று நம்பப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் மகாவம்சத்துக்கும் முந்தியது இது. கண்டி ராஜ்ஜியத்தில் ராஜாதிராஜசிங்கன் ஆட்சியின் போது “மனாபவி அருணவெசி நீலகிரிக போதி வங்க்ஷாபய” என்கிற ஒரு பௌத்த துறவியால் ஓலைச்சுவடிகளாக தொகுக்கப்பட்டது.

இயக்கர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், சட்டதிட்டங்கள் மட்டுமன்றி பல கதைகளையும் குறிப்பாக இராவணன் பற்றிய கதைகளையும் கொண்டது அது என்கின்றனர். “வரிக பூர்ணிகா” பற்றி எழுதியிருப்பவர்கள்  கௌரான மண்டக்க (කෞරාණ මන්ඨක) என்று அதில் குறிப்பிடப்படுவது இராவணனைத் தான் என்று அடித்துச் சொல்கின்றனர். கௌரான என்பதன் சிங்கள அர்த்தம் “பூரணமானவர்”. “மண்டக்க” என்பதன் அர்த்தம் “அரக்கர்” என்பதாகும். இதன்படி இராவணனை “பூரணத்துவமுடைய அரக்கன்” என்றே அழைத்திருக்கிறார்கள் என்று கொள்ளலாம்.

“வரிக பூர்ணிகா” ஓலைச்சுவடிகள் தற்போது மெனேவே விமலரதன தேரர் வசம் உள்ளது. பரம்பரை பரம்பரையாக இறுகல் பண்டார ரவிஷைலாஷ ராஜகருணா என்கிற வம்சத்தவர்கள் தான் பேணி வந்திருக்கிறார்கள். அந்த வம்சத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு தான் மெனேவே விமலரதன தேரர் (මානැවේ විමලරතන හිමි) இவர் வசம் ஏராளமான ஓலைச்சுவடிகள் உள்ளன. அவரால் ஆராயப்பட்ட சில ஓலைச்சுவடிகளை அவர் நூல்களாகவும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

அப்படி அவர் வெளியிட்ட நூல்களில் ஒன்று தான் “இயக்கர்களின் மொழியும் ரவிஷைலாஷ வம்சத்தின் கதையும்” (යක්ෂ ගෝත්‍රික භාෂාව හා රවිශෛලාශ වංශ කථාව) என்கிற நூல். 2012 இல் முதன் முதலில் வெளியிடப்பட்ட இந்த நூலில் தான் அவர் “வரிக பூர்ணிகா” பற்றிய விபரங்களையும் வெளியிட்டிருந்தார். அதற்கு முன்னர் இந்த விபரங்கள் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
இந்த நூல் வெளிவந்ததன் பின்னர் தான் இராவணனை சிங்களத் தலைவராக முன்னிருந்தும் பல முனைப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன. அதுவரை இராவணன் பற்றிய கதைகள் மிக மெல்லியதாகவே இருந்தன. இன்னும் சொல்லப்போனால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், தமிழர்களின் மீதான நில ஆக்கிரமிப்பை செய்வதற்கும், நிலத் துண்டாடலைப் புரிவதற்குமான பேரினவாத முஸ்தீபுக்கு “சிங்கள இராவண” பிம்பத்தை உயிர்ப்பிப்பது வாய்ப்பாக ஆனது. சிங்களவர்கள் மத்தியில் இராவணப் புனைவை கருத்தேற்றுவதும், தமிழர்கள் மத்தியில் இராவண வழிபாட்டை பறித்தெடுப்பதுமான ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பு அவர்களுக்கு அவசியமாக உள்ளது என்றே கருது வேண்டியிருக்கிறது.

அது மட்டுமன்றி இராவணனின் பெயரில் அமைப்புகள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் அத்தனையும் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான முன்னெடுப்புகள் நகர்ந்தன. இலங்கையில் இப்போது இயங்கிவரும் சிங்கள பௌத்த பாசிச இயக்கமான “பொதுபல சேனா” இயக்கத்துக்கு நிகராக “ராவண பலய” என்கிற பேரினவாத அமைப்பும் இந்த நூலைத் தொடர்ந்து தான் உருவாக்கப்பட்டது.

இப்போதும் இராவணன் பற்றிய பல முகநூல் பக்கங்களையும், இணையத்தளங்களையும், youtube சேனல்களையும், பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளையும், ஆய்வுகளையும், விவாதங்களையும், கலைப் பண்பாட்டு படைப்புகளையும் காண முடிகிறது.

“வரிக பூர்ணிகா” 20 பக்கங்களைக் கொண்ட நூல் என்கிறார். அதேவேளை அதன் உப நூல்களாக “ரங்தெலம்பு பெந்தி அனபத்த”  கிரிதெலம்பு பெந்தி அனபத்த (රංතෙලඹු බැදි අණපත, කිරි තෙළඹු බැදි අණපත) என்கிற இரண்டு உள்ளதாகவும் அவை முறையே 500, 300 ஓலைப் பக்கங்களைக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.

இவற்றில் “ரங்தெலம்பு பெந்தி அனபத்த”  என்பதானது “ரவிஷைலாஷ இயக்கர் மொழி”க்கான வழிகாட்டுவதற்கான அகராதியாக இருப்பது அதன் விசேடத்துவம். கடைசி அத்தியாயத்தில் இலங்கையின் வடக்கு பகுதியில் வாழ்ந்த “கேவேசஷ்ட இயக்கர்” பற்றிய விபரங்கள் உள்ளடங்கியிருகிறது. ஆனால் இவை எதுவும் தமிழ் ஆய்வுகளுக்கு கிட்டாதவை என்பதை இங்கு கூறியாகவேண்டும்.

ஆனால் இராவணனைப் பற்றியும், இயக்கர்களைப் பற்றியும், குவேனியைப் பற்றியும் ஏராளமான விபரங்கள் உள்ளதாக கூறப்படுவதில் எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை.

“வரிக பூர்ணிகா” வை எழுதியவர் நீலகிரிக போதி வங்க்ஷாபய என்கிற ஸ்ரீ போதி வங்ச விதான என்கிற ஒரு பௌத்த துறவியாவார். கண்டி மன்னன் ராஜாதிராஜசிங்க ஆட்சியின் போது வாழ்ந்த பௌத்த துறவி அவர். ராவணன் காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளாக பரம்பரையாக பாதுகாக்கப்பட்ட நூல்களைத் தொகுத்தே இந்த நூல் உருவாக்கப்பட்டதென்கிறார் மெனேவே விமலரதன தேரர்.

மெனேவே விமலரதன தேரர் ஒரு “திபிடக பண்டிதராக” உயர் நிலையில் வைத்து போற்றப்படுபவர் என்பது இன்னொரு தகவல்.

இராவணன் உருவாக்கிய சிங்கள ஆயுள்வேத மருத்துவ முறைகள் என்றே பல மருத்துவ முறைகளை அழைத்து வருகிறார்கள். ஆயுள்வேத வைத்தியர்கள் இராவணனை வணங்கிவிட்டு மருத்துவம் செய்யும் மரபும் இருக்கிறது. ஆனால் அது எப்போதிலிருந்து கடைபிடிக்கத் தொடங்கினார்கள் என்பதை அறிதல் வேண்டும்.

சமீபத்தில் மெனேவே விமலரதன தேரர் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தன்னிடமுள்ள பல ஓலைச்சுவடிகள் குறித்து விபரித்திருந்தார். பல ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயிரகணக்கான குறியீடுகளை தான் இன்னமும் உறுதியாக கண்டுபிடிக்கவில்லை என்கிறார். அந்த நேர்காளில் 26 வது நிமிடத்தில் ஒரு ஓலைச்சுவடியை எடுத்து உதாரணத்துக்கு விளக்குகிறார்.

“இது இயக்கர்கள் பற்றிய ஓலைச்சுவடி இல்லை. ஆனால் இது தமிழில் எழுதப்பட்டிப்பது தெரிகிறது. நாம் அதையிட்டு குழப்பமடையத் தேவையில்லை. எனது தகப்பனார் இவற்றை வாசிக்கக் கூடியவர். என்னால் கூட புரிந்துகொள்ள முடியவில்லை. இதை வாசித்தறியும் அறிவு இன்று இல்லாமல் போய் விட்டது. சில வல்லுனர்களின் உதவியுடன் அவற்றில் சில ஆராயப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்டுக்கொண்டிருகின்றன.”

என்கிறார் அவர்.
மகாவம்சமும் சொல்லாத “வரிக பூர்ணிகா” சொல்லியுள்ள “சிங்களவர் கதை” என்ன என்பதைத் தேடி இன்று வரலாற்று ஆய்வாளர்களும், தொல் பொருள் ஆய்வாளர்களும் கிளம்பிக்கொண்டிருக்கின்றனர். சில மதங்களுக்கு முன்னர் எழுத்தாளர் பிரபாத் அத்தநாயக்க என்பவர் அப்படி ரிட்டிகல என்கிற இடத்தில் இராவணனின் அடிச்சுவட்டைச் தேடிச் சென்றதாக கூறி ஒரு கட்டுரையை எழுதினார். 29.02.2020 அன்று வெளியான அந்தக் கட்டுரையின் தலைப்பு கூட “மகாவம்சத்தில் இல்லாத “வரிக பூர்ணிகா”வில் இருக்கிற இராவணனின் வரலாற்றைத் தேடி ரிட்டிகல பயணம்” என்று இருந்தது.

“வரிக பூர்ணிகா”  புனைவுகளைக் கொண்ட பெரும் திரிபு என்று வாதிடும் ஆய்வாளர்களும் உள்ளார்கள். ஆனால் இதுவரை இராவணன் பற்றி எழுதிய தமிழ் ஆய்வாளர்களின் பார்வைக்கு இந்த விபரங்கள் எட்டியதாகத் தெரியவில்லை.

இராவணனின் தற்காப்புக்கலை !?அதேவேளை சிங்களவர்களின் தற்காப்புக் கலையாக இன்று போற்றப்படும் “அங்கம்பொற” கலையை கற்பவர்களும், கற்பிப்பவர்களும் இராவணனை வணங்கிவிட்டு தொடருகின்றனர். அது இராவணனின் கலை என்கின்றனர். ஆனால் சமீப காலம் வரை அக்கலை கேரளாவிலிருந்து இலங்கைக்கு வந்த களரி இலங்கைக்கான வடிவமெடுத்தே “அங்கம்பொற” ஆனது என்றே கூறி வந்தனர். 2019 மார்ச் மாதம் இலங்கையின் அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் “அங்கம்பொற” கலையை மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முடிவை எடுத்தார்கள். அதைத் தொடர்ந்து பெரிய விழாவெடுத்து இலங்கையின் “மரபுரிமையாக” அதை பிரகடனப்படுத்தியதும் நினைவிருக்கலாம்.

இராவணனைப் பற்றி அதிகம் எழுதி அக்கருத்துக்களை வெகுஜனமயப்படுத்தியதில் பேராசிரியர் மிராண்டோ ஒபேசேகரவின் ஆராய்ச்சிகளைப் பற்றி லங்காதீப பத்திரிகையில் “இராவண அரசனின் போர்முறை” என்கிற தலைப்பிலான கட்டுரையில் “அங்கம்பொற” கலையானது இராவணன் நமக்கு விட்டுச் சென்ற தற்காப்புக்கலை என்று நிறுவ முயல்கிறார். இராவணனுக்குப் பின்னர் விபீஷணன் போன்றோர் அக்கலையை முன்னெடுக்காததன் விளைவு அது “அங்கம்பொற” கலையைக் கற்றிருந்த குலமொன்று இந்தியாவுக்குச் சென்று விட்டதென்றும் அவர்கள் தென்னிந்தியாவில் “அகம்படியார்” என்கிற சாதியாக மாறிவிட்டனர் என்றும், இந்த அகம்படியார் சாதியானது இராவணனின் வழித்தோன்றலே என்றும், முதலாவது விஜயபாகு அரசர் அவர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்து அவர்களுக்கு கிராமங்களை பரிசளித்து குடியேற்றினார் என்றும், அவர்கள் குடியேற்றப்பட்ட வெளிதொட்ட என்கிற பகுதி தான் இப்போது தெற்கில் பலபிட்டிய என்கிற பிரதேசம் என்கிறார்.

இராவணனின் மருத்துவ முறைகளை இவர்கள் “அங்கம்” கலையோடு சேர்த்து பேணி வந்ததாகவும் குறிப்பிடுகிறார். இதைவிட அடுத்த புரட்டு என்னவென்றால்

“இராவணனின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் இராவணனைக் காண நான்கு சில்லு பொருத்திய வாகனத்தில் தான் வந்து போனார். இந்த வாகனத்துக்கு என்று அதிசயிக்கத்தக்க எஞ்சின் பொருத்தப்பட்டிருந்ததுடன், அது சூரிய ஒளியில் இயங்கியது. இவை ஓலைச்சுவடிகளிலும், செய்திகளிலும் காணக்கிடைக்கின்றன. இதன்படி சக்கர வண்டிகளின் தோற்றம் இராவண காலத்தில் இருந்தா? இந்த நாற்சக்கர வண்டியை உலகுக்கு அறிமுகப்படுத்தியது இலங்கையா என்கிற கேள்வி புதிய தேடலுக்கு வழிவகுக்கும்”
என்கிறார். (8)

இலங்கையில் இராவணனின் அடையாளங்கள் இருப்பதாக நம்பப்படும் பல இடங்களை குறிப்பிட்டு வருகின்றனர். அவ்வாறான பல இடங்களுக்கு உல்லாசப் பயணங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குருநாகல் மாவட்டத்தில் வாரியபொல என்கிற ஒரு ஊர் உண்டு. அங்குள்ள ஒரு புறநகர்ப் பகுதியில் ஒரு பலகையின்  அடையாளக்குறிப்பில் “நீங்கள் வாரியபொல நகரினுள் பிரவேசிக்கிறீர்கள். இராவணனின் ஆட்சிக்காலப் பகுதியில் இந்நகரம் காற்றிலும் பார்க்க அதிவேகம் கூடிய வாகனங்கள் தரையிறங்கும் பகுதியாக விளங்கியது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்பலகை வாரியபொல பிரதேச சபையினால் பல சில தசாப்தங்களாக அங்கு வைக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

அந்த நகருக்கு அந்தப் பெயர் வரக் காரணமாக இப்படிச்  சொல்லப்படுகிறது. ‘வா’ என்பது காற்றையும், ரிய’ என்பது வாகனத்தையும், ‘பொல’ என்பது இடப்பரப்பையும் குறிக்கின்றன. இவ்வாறு இம்மூன்று கருத்துக்களையும் ஒன்று சேர்க்கையில், இந்த ஊகம் காற்றினால் இயங்கும் அல்லது காற்றின் வேகத்தில் பறக்கும் வாகனங்கள் தறையிரங்கிய இடத்தைக் குறிக்கின்றது எனலாம்.

இராவண கற்பனைக்கதையை வரலாற்றுண்மைகளாக மாற்றியமைப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று.

“வன்னி ராஜாவலிய”வும் “மகாசம்மத” மன்னனும்இராவணன் பற்றிய ஆய்வுக்கட்டுரையொன்றுக்கான தேடல்களின் போது “வன்னி ராஜாவலிய” (වන්නි රාජාවලිය) என்கிற ஓலைச்சுவடி குறித்து பல இடங்களில் அறிய முடிகிறது. தமிழில் தேடினால் அப்படி ஒன்றைப் பற்றிய விபரங்கள் எங்கும் பதிவுசெய்யப்பட்டதாக அறிய முடியவில்லை. சிங்கள ராஜாவலிய என்பது சிங்களவர்களின் அரச வழிமுறை பற்றிய விபரங்களை அடக்கியது என்பதை அறிவீர்கள். பல நூல்களில் உள்ள அடிக்குறிப்புகளின் படி இந்த “வன்னி ராஜாவலிய” ஓலைச்சுவடியை கொழும்பு நூதனசாலையின் நூலகத்தில் இருந்து பயன்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். சிங்களத்தில் பேராசிரியர் கணநாத ஒபேசேகர நூலாகவும் வெளியிட்டிருக்கிறார். அவர் இது பற்றி வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார்.

“வன்னி ராஜாவலிய” நூலில் குறிப்பிடப்படுகின்ற “மகாசம்மத்த” என்கிற அரசன் இராவணனைத் தான் குறிப்பிடுகின்றனர் என்றும், அதன்படி விஜயனுக்கு முன்னர் இருந்தே தமது சிங்கள அரச வம்சாவழி தொடங்கிவிட்டதாகவும் உறுதியாகவும் கூறுகிறார்கள்.

வன்னி பற்றிய விபரங்களை சிங்களத்தில் பேசுபவர்கள் இதைத் தவிர “வன்னி உபத்த” (වන්නි උපත,), “வன்னி வித்திய” (වන්නි විත්ති), “வன்னி கடைய்ம் பொத்” (වන්නි කඩයිම්) போன்ற ஓலைச்சுவடிகளையும் குறிப்பிட்டு வந்துள்ளனர். இந்த ஓலைச்சுவடிகள் பிரிட்டிஷ் நூலகத்தில் இருப்பதாக கூறுகின்றனர். வன்னி உள்ளிட்ட பகுதிகள் சிங்களப் பிரதேசமாக உரிமைகொண்டாடுவதற்கும் இவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழருக்கா சிங்களவருக்கா இராவணன் சொந்தம்இப்போது உள்ள வாதம் இதுதான்; இராவணனை தமிழர்கள் தான் கொண்டாடி வந்தார்கள். தமிழர்களின் தலைவனாகத் தான் பெருமிதமடைந்து வந்தார்கள். கோவில் கட்டினார்கள். சிலைகள் எழுப்பினார்கள். தொல்பொருள் ஆதாரங்களை தமதேன்றே கூறிவந்தார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில் இராவணன் தமது புராண தமிழ் – இந்துத்துவ தலைவனாகவே கொண்டாடி வந்திருக்கிறார்கள்.
இப்போது சிங்களவர்கள் தமது தலைவர்கள் என்று வாதிடத் தொடங்கியிருப்பதுடன், தமது பெரும்பான்மை பலத்துடனும், அரச அதிகாரத்தின் அனுசரணையுடனும் அதை பலமாக நிறுவி வருகிறார்கள்.

வெகுஜனப் புனைவுப் பரப்புரை தொடக்கம், தொல்பொருள் புனைவுகள் வரை அது நீண்டுவிட்டிருக்கிறது. வடக்கு கிழக்குப் பகுதியில் நில அக்கிரமிப்புக்காகவும், பண்பாட்டு ஆக்கிரமிப்புக்காகவும் தற்போது மேற்கொள்ளப்பட்டு தொல்பொருள் ஆக்கிரமிப்பின் இன்னொரு வடிவமாகவும் இராவணனின் இடங்கள் தான் இவை எனவே இது சிங்களவர்கள் நிலமே என்கிற தர்க்கத்தை முன் வைக்கத் தான் போகிறார்கள். வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஏற்கெனவே கண்டெடுக்கப்படுகின்ற பௌத்த தொல்பொருள் எச்சங்களை காண்பித்து “பௌத்த எச்சங்கள் ஆகவே இது சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது” என்று உரிமை கோரத் தொடங்கிவிட்டார்கள். தமிழர்கள் ஒரு காலத்தில் அங்கு பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதையோ, பௌத்தம் தமிழர்களிடம் தலைத்தோங்கியிருந்தது என்பதையோ கொண்டாடாததன் விளைவு அந்த இடைவெளியை அவர்கள் நிரப்ப தலைப்பட்டிருக்கிறார்கள். அதே கதி தான் இன்று இராவணனுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையில் வரலாறும், தொன்மம் பற்றிய மரபும், அதன் முதுசமும் இருவேறு மொழிகளில், இரு வேறு வழிகளில், இருவேறு அர்த்தங்களில், இருவேறு வியாக்கியானங்களில் நெடுங்காலமாக பயணித்தபடி இருப்பதை அவதானித்தாக வேண்டும். இப்போதும் தமிழில் பேசப்படுகிற வரலாற்றுத் தொன்மை பற்றி சிங்களவர் அறியார். சிங்களவர் மத்தியில் ஊன்றியிருக்கும் வரலாற்று மரபு குறித்து தமிழர் அறியார். இந்த இரண்டும் தற்செயலாக ஆங்காங்கு சந்தித்துக்கொள்ளும்போது திடுக்கிட்டு வியக்கின்றன. மோதிக்கொள்கின்றன. ஈற்றில் பெருமிதத் தொன்மை பேசி இருப்பைத் தக்கவைக்கும் அவசர நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இந்த நிலை மிகவும் அபாயகரமானது. குறிப்பாக இனத்துவ முறுகலின் உச்சத்தில்  இருக்கிற இந்த நாட்டில் இந்த துருவமயப் போக்கு ஆபத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஆபத்தை தூண்டிக் கொண்டிருக்கிறது. வெடித்து வெடித்துத் தணிகிறது.

இப்போது இராவணனை தங்கள் பாரம்பரிய புராதன பண்பாட்டின் நாயகன் என்று பரஸ்பர பகைமையுணர்வு கொண்ட சிங்களவர்களும், தமிழர்களும் கொண்டாடுகின்றனர். புராணக் கதைகளுயும் இதிகாசங்களும் இப்போது அரசியல்வாதிகள், தேசியவாதிகள், இனவாதிகள் அனைவருக்குமே தமது கைகளில் சூழ்நிலைக்கிசைந்த கருவியாக மாறியுள்ளது. இவற்றை இன-மத தேசியவாதத்துடனும் இணைத்து அவற்றின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்காக பயன்படுத்திகொள்கின்றனர். புனித மேன்மைக்கு அவற்றைக் கொண்டு வைப்பதன் மூலம் அதற்கு ஒரு ஆன்மீக அந்தஸ்தையும் கொடுத்துவிடுகின்றனர்.

இராவணனை சொந்தம் கொண்டாடுவதில் இன்னமும் இரு இனங்களுக்கும் மத்தியில் இதுவரை சண்டைகள் வெடிக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட நெருக்கடிகளுக்குள் தற்போது இந்த உரிமைகோரல் நெருங்கிக்கொண்டிருப்பதாக அச்சம் கொள்ள முடிகிறது.

இராவணனை விட்டுக்கொடுப்பதை விட, அல்லது போனால் இராவணனை உரிமை கூறுவதைவிட செய்யவேண்டியது என்னவென்றால் இராவணன் நம் தலைவன் இலங்கையின் தலைவன். நீயும் நானும் வேறல்ல. நாம் இரு சாராருமே மண்ணின் மைந்தர்கள் தான், நாம் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அல்ல என ஒப்புக்கொள்வதே இனப்பிரச்சினைக்கு முடிவைக் கட்டும். இனங்களுக்கிடையிலான புரிதலையும் எட்டச் செய்யும். ஈற்றில் இனப்பிரச்சினையும் தீர்க்க உதவும்.

இராவணனை ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல் சூட்சுமத்தை இப்படித்தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அடிக்குறிப்புகள்

  1. இராவணனை ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல் சூட்சுமத்தை இப்படித்தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
  2. A. Jeyaratnam Wilson – Politics in Sri Lanka, the Republic of Ceylon: A Study in the Making of a New Nation – Macmillan; 1st ed 1st printing edition (9 May 1974)
  3. K. E. O. Dharmadasa, – Language, Religion, and Ethnic Assertiveness: The Growth of Sinhalese Nationalism in Sri Lanka – University of Michigan Press, 1992
  4. Professor of Linguistics James W Gair, – Studies in South Asian Linguistics: Sinhala and Other South Asian Languages – Oxford University Press, 1998
  5. ஜினதாச நிவித்திகல – இங்கிலாந்து மகாராணியை மகிழ்வூட்டிய ஹனுமான் – திவயின – 21.04.2019
  6. சசங்க பெரேரா – இராவணன் புத்துயிர் பெறுகின்றான் – தேர்ந்த கட்டுரைகள் தொகுதி – 33 – விடுதலைப் புலிகளின் அரசியல் பிவி வெளியீடு – யூலை 1995
  7. “இலங்கையின் தொலைகாட்சி நாடகத்துறையை உயர் தரத்துக்கு கொணர்வதே எமது இலக்கு” என்கிற தலைப்பில் வெளியான நேர்காணல் http://www.saaravita.lk/ 4 දෙසැම්බර් 2018 (நேர்கண்டவர் – நிதுன் மதுஷிக)
  8. ஹன்சி சந்தமாலி “රාවණාගේ අපරිමිත ප්‍රේමයේ හිමිකාරී, මන්දෝදරී” (இராவணனின் எல்லையில்லாக் காதலுக்கு உரிமைக்காரி மண்டோதரி) – https://roar.media
  9. அசங்க ஆட்டிகல – “இராவண அரசனின் போர்முறை” – லங்காதீப – 09.09.2014

நன்றி : காக்கைச் சிறகினிலே யூலை – 2020

——————————————————————————————————————–

https://www.namathumalayagam.com/2020/07/SinhalaRAvana.html

—————————————————————————————————————

Ravana cult energises Sri Lankan nationalism

06 Aug 2020  – 1016

When the media reported that the Sri Lankan Ministry of Tourism and Civil Aviation has issued a newspaper advertisement in Sinhala urging people to share documents, books, and research material on Ravana, the legendary king of Lanka, it was not a surprise for students of Sri Lankan nationalism. Far from being a villain (as portrayed in Valmiki’s Ramayana), Ravana has been celebrated by the majority Sinhalese in   Sri Lanka as a cultured and creative icon and a defender of the island against a foreign invader.

The advertisement said that the Ministry is conducting in-depth research on “King Ravana and the ancient domination of the aerial routes that are now lost”. Ravana is believed to have manufactured an aircraft called “Dandu Monara” (known as Pushpaka Vimana in India).  He had used the aircraft to fly to India and several other places overseas.


Although the research is being given a scientific goal – to find out Ravana’s air routes, it is essentially meant to produce a corpus of literature on how Sri Lanka had a glorious scientific and technological past for which due credit has not been given. This nationalistic project is relevant, especially now, when the island nation needs to be self- confident in the face of internal and external challenges. The vestiges of separatism are still there and there is foreign pressure to sign agreements which dilute national sovereignty. Though the threat on the political and human rights front is less now because of the weakening of the UN and the Western bloc by COVID-19, it could be revived to intimidate it into toeing the West’s line vis-a-vis China. The Ravana cult is meant to tell foreign hegemons that attempts to enforce their will would be met with resistance.


In her paper “Remaking and Trans-creating Ravana in Contemporary Sri Lanka,” Dr. Kanchuka Dharmasiri of the University of Peradeniya and Massachusetts, mentions popular songs, films, plays, television series, social media, and “historical” narratives on  Ravana, which according to her, have gained “unprecedented popularity” in 21st. Century Sri Lanka. Tracing the trajectories of the various manifestations of Ravana she reveals the ways in which the Hela/Sinhala/Tamil hero has been reimagined and trans-created during significant socio-political transformations in Sri Lanka since the 1950s.

In an entry on the paper in the Cornell University website, Dr. Dharmasiri says that her intention was to examine the socio-political and economic workings of these retellings and to probe the way in which they render Ravana a hero in both Sinhala and Tamil literary, theatrical and cinematic texts and cultural contexts and examine how ancient and modern myths and performances of Ravana are intertwined with ideologies of nationalism, neoliberalism and power and how the image of Ravana is in a process of continual transformation.

Deborah De Koning of Tilburg University in The Netherlands, in her paper entitled: The Ritualising of the Martial and Benevolent Side of Ravana in Two Annual Rituals at the Sri Devram Maha Viharaya in Pannipitiya, Sri Lanka says: “At the Sri Devram Maha Viharaya, a recently constructed Buddhist complex in Colombo, Ravana has become the object of devotion. In addition to erecting a Ravana statue in a shrine of his own, two annual rituals for Ravana are organised by this temple. In these rituals we can clearly discern the two previously mentioned conceptualizations: the Ravana Perahera (procession) mainly concentrates on Ravana’s martial side by exalting Ravana as warrior king, and in the Maha Ravana Nnanumura Mangalyaya, a ritual which focusses on healing, his benevolent side as a healer is stressed. “

De Koning says that conceptualizations from the broader Ravana discourse are ritualized in iconography, attributes, and sacred substances. The glorification of an ancient civilization are part of increased nationalistic sentiments and an increased assertiveness among the Sinhalese Buddhist majority in post-war Sri Lanka, she observes.

According to Ahubudu, Ravana’s step brother Vibhishana, had invited Rama to invade Lanka because he was wanting to oust Ravana from the kingship of the island and take it over

Originator of the Sinhala nation

In his paper in the Journal of South Asian Studies entitled: “Ravana’s Sri Lanka: Redefining the Sinhala Nation?” Dileepa Witharana of Open University suggests that the Sinhala nation is on the verge of being redefined. He observes that “in comparison to the origin story of the Sinhalese that remained seriously unchallenged till the end of the twentieth century, in which the Sinhalese were considered the descendants of the Aryan prince Vijaya who arrived on the island around 2,500 years ago, this new narrative identifies the Yakkha king Ravana as the originator of the Sinhala nation by going further back into the past.”

In their paper entitle “Sinhala Buddhist Apotheosis and Tamil Responses” in the Journal of South Asian Studies Pathmanesan Sanmugeswaran et al., of the University of Kentucky, “highlight the irony of the recent Buddhist appropriation of Ravana as a signifier of indigeneity and sovereignty, given that he has already been employed in this capacity in the Tamil Hindu context for nearly a century. We note several convergences between the ‘Sinhala Ravana’ phenomenon and its Tamil counter-narrative, including a shared archive of textual material invoked as evidence, the introduction of alleged physical evidence as proof of Ravana’s historicity, and a sympathetic outlook on Ravana’s character, emphasising his qualities as a learned and righteous king.”

Role of Arisen Ahubudu

Historical chronicles like the Mahawamsa, Rajavaliya and Ravanavaliya identify Ravana as a Sinhala king and extol his intellectual, artistic,  physical and political prowess. However, the credit for starting the Ravana cult in the modern era goes to the Sinhala cultural and linguistic revivalist the Late Arisen Ahubudu. Ahubudu. He represented the “Hela” movement founded by the Late Munidasa Kumaratunga. The Hela movement has been urging Sinhalese to go back to their roots shunning Indian, Hinduistic and other alien influences.

In his book Sakvithi Ravana (1988) Ahubudu says that Ravana reigned  from 2554 to 2517 BC. He quotes Ravanavaliya to say that Ravana belonged to the “Sun race”, as “Ra” signified the Sun and “vana” signified generation. Ravana’s ten heads represented the ten crowns he wore as a result of his being the sovereign of ten countries. According to Ahubudu, Ravana’s ancestors ruled over what is now the Polonnaruwa district. He termed Polonnaruwa as a derivative of the word Pulasthi, the name of the dynasty to which Ravana belonged. However, Ravana himself ruled over the entire island and many places overseas. Ahubudu trashes the story that Rama invaded Lanka because Ravana had kidnapped his consort, Sita. According to Ahubudu, Ravana’s step brother Vibhishana, had invited Rama to invade Lanka because he was wanting to oust Ravana from the kingship of the island and take it over. “Considering the fact that Sita’s chastity was proved, this (the alleged abduction of Sita) can be taken as a story concocted by Yuwaraja Vibhishana in order to discredit Ravana in the eyes of his people and take advantage thereof,” Ahubudu says.

According to Prof. Buddhasasa Hewavitharana, the Sinhalese disapproved of Vibhishana’s conduct. In popular lore, the area to which he belonged to (Kalutara North) came to be known as the land of the Desha Shatru (betrayer of the country).

Munidasa Kumaratunga claimed that Ravana had written medical books such as Nadi Pariksha, Arka Prakashata, Uddisa Chiktsaya, Oddiya Chikitsa, Kumara Tantraya and Vatina Prakaranaya in Sinhala, which were translated into Sanskrit.

Historically, Sri Lankan Buddhist monks have had problems with the Ramayana, pointed out Prof K.N.O. Dharmadasa, Editor of the Sinhala Encyclopaedia. He recalled that a 15th century Sinhala poet had asked why Rama, a God, could not hop across to Sri Lanka like Hanuman did, and had to get a bridge constructed. “Could a God’s power be so small in this world?” the poet wondered.

http://www.dailymirror.lk/print/opinion/Ravana-cult-energises-Sri-Lankan-nationalism/172-193283

——————————————————————————————————————–

Ravana is a hero for Sinhala nationalists

PK Balachandran, Hindustan Times

In modern Sri Lanka, there has been a movement to revive Ravana as a cult figure, who represents Sinhala or Sri Lankan nationalism, writes PK Balachandran.

Sep 23, 2007

The Ramayana is not part of the mainstream Sinhala religious and cultural tradition in Sri Lanka, because Buddhism has been the religion of the majority of Sinhalas for a long. But ancient Sinhala works like Rajavaliya and Ravanavaliya identify Ravana as a Sinhala king and extol him as a great one.

In modern Sri Lanka, there has been a movement to revive Ravana as a cult figure, who represents Sinhala or Sri Lankan nationalism because he was among the first in the island’s history to have resisted an alien/Indian invader. <b1>

Scholar Arisen Ahubudhu is the current representative of the ultra-nationalistic Hela movement founded by the renowned Sinhala litterateur, the Late Munidasa Kumaratunga. The Hela movement has been urging the Sinhalas to go back to their roots shunning Indian, Hinduistic and other alien influences.

In his book Sakvithi Ravana (first published in 1988) Ahubudhu says that Ravana reigned over Sri Lanka from 2554 to 2517 BC. He quotes Ravanavaliya to say that Ravana belonged to the “Sun race” as Ra signifies the sun and vana signifies generation.

Ravana’s ten heads represent the ten crowns he wore as a result of his being the sovereign of ten countries. Ravana’s ancestors ruled over what is now the Polonnaruwa district in North Central Sri Lanka, the name Polonnaruwa being a derivative of the word Pulasthi, the name of the dynasty to which Ravana belonged. Ravana, however, ruled over the entire island and many places beyond.

Ahubudhu trashes the Ramayana story that Rama invaded Sri Lanka because Ravana had kidnapped Sita. According to the author, Ravana’s stepbrother Vibhishana had invited Rama to invade Sri Lanka because he was wanting to oust Ravana from the kingship of the island.

“When considering the fact that Sita’s chastity was proved, this can be taken as a story concocted by Yuwaraja Vibhishana in order to discredit Ravana in the eyes of his people and take advantage thereof,” he says.

According to Prof Buddhadasa Hewavitharana, the Sinhalas disapproved of Vibhishana’s conduct. In popular lore, the area to which he belonged (Kalutara North, near Colombo) came to be known as the land of the Desha Shatru (betrayer of the country).

Sinhala lore has it that Sri Lanka under the scholarly Ravana saw great advancements in science and medicine. The pushpaka vimana or the aeroplane which he flew, was no figment of imagination, they believe. Ravana holds a high position even as a physician and there exists, to this day, seven books on medicine in his name.

According to Munidasa Kumaratunga, Ravana’s medical works Nadi Pariksha, Arka Prakashata, Uddisa Chiktsaya, Oddiya Chikitsa, Kumara Tantraya and Vatina Prakaranaya was originally written in Sinhala and translated into Sanskrit.

Even Indian lore extols Ravana as a Shiva Bhakta and as the composer of the Shivathandawa Stotra. He was a musician, who had fashioned his own stringed instrument called Ravana Vina.

“The Ramayana may not be in the mainstream of the Sinhala religious culture.But it is very much a part of Sinhala folk lore,” says Prof Hewavitharana.

“As children were told stories from the Ramayana to illustrate ideas of good and bad, the moral and immoral.”

There are places in Sri Lanka which are still identified with the Ramayana, like the Sita Eliya in Nuwara Eliya district, where there is a temple dedicated to Sita on the banks of a mountain stream. As per local legend, this was the place where Sita was confined by Ravana.

Then there is a hill called Ravana Elle, which was supposedly the headquarters of Ravana.

There is a temple for Vibhishana in Dondra in south Sri Lanka, even though he is derided for supporting the invader Rama and letting down his brother Ravana. Sita, Bharata and Lakshman are popular Sinhala names. But strangely enough, no Sinhala is ever named Rama!

Opposition from Buddhist purists

But Buddhist religious leaders have always had problems with the Ramayana, as indeed, with other aspects of the local religious life which have a Hindu or Indian origin. When in the 15 century, Vishnu and Shiva worship was gaining popularity in Sri Lanka among the Buddhists, the Buddhist purists campaigned against it.

Prof KNO Dharmadasa, the Editor of the Sinhala Encyclopaedia, points to a 15th-century writer who ridiculed the Ramayana in his poems. The poet asked why Rama the God could not hop across to Sri Lanka like Hanuman did, and had to get a bridge constructed. “Could a God’s power be so small in this world?” he wondered.

SHARE