இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இராணுவ நீதிமன்றம் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் பற்றி ஐ.நா மனித உரிமை குழு

492

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இராணுவ நீதிமன்றம் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் பற்றி ஐ.நா மனித உரிமை குழு கேள்வி எழுப்பியுள்ளதுடன் இது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்தை கேட்;டுள்ளது.
sri_lanka_0425
ஓக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள குறிப்பிட்ட குழுவின் அறிக்கை இலங்கை பற்றிய பல கேள்விக்கணைகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இலங்கை குறித்து ஒக்டோபர் 7;ம் திகதி இந்த குழு விசாரணை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு தரப்பிலும் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையின் பிடியிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டதை முடிவிற்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ள ஐ.நா குழு மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்க தருணத்தில், உறுதியான நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேட்டுள்ளது.
பொறுப்புக்கூறுவது தொடர்பான செயலாளர் நாயகத்தின் ஆலோசனை குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து வாய்மூல பதில்களையும் குறிப்பிட்ட குழு கோரியுள்ளது.

SHARE