இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை போர்க்குற்ற ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் காட்டப்பட்டது.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம், உள்நாட்டுப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, போர் இல்லா மண்டலத்தில் தஞ்சம் புகுந்த பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை சிXXX ராணுவம் கொன்று குவித்து, இனப்படுகொலை செய்தது.
அங்கு நடந்த போர்க்குற்றங்கள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தின.
இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானம் வெற்றி பெற்றது. அதையடுத்து இலங்கையில் தேசிய செயல் திட்டம் என்ற ஒன்றை அதிபர் XஜXக்சே ஏட்டளவில் கொண்டு வந்தார்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை அரங்கேற்றிய சிXXள ராணுவத்தைக் கொண்டே போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். ஆனால் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றங்களுக்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக சிXXள ராணுவம், பழியை விXXலைXபுலிXள் மீது போட்டது.
ஆனால் ஐ.நா. வல்லுனர் குழு, இலங்கை போர் இறுதிக்கட்டத்தை அடைந்தபோது, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக அறிக்கை அளித்தது. உயிருக்கு பயந்து போர் இல்லாத மண்டலங்களில் தஞ்சம் புகுந்தபோது, தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது உலக நாடுகளை எல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த மனித உரிமை மீறல்கள், தமிழர்கள் நிர்வாண நிலையில், கைகள் கட்டப்பட்டு கூட்டம், கூட்டமாக சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளை வெளியிட்டு இங்கிலாந்து நாட்டின் சனல்-4 தொலைக்காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போது அதே சனல்-4 தொலைக்காட்சி ‘போர் இல்லா மண்டலம்: இலங்கையின் கொலைக்களங்கள்’ என்ற தலைப்பில், இயக்குனர் கல்லம் மெக்ரேயைக் கொண்டு போர்க்குற்ற ஆவணப்படம் ஒன்றை மீண்டும் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், XXதலைப்XXகள் தலைவர் XரXகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை பதுங்குகுழியில் 2 அடி தூரத்தில் நிற்க வைத்து XXகள ராணுவம் சுட்டுக்கொன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
இலங்கைக்கு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானத்தில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானத்தை இந்தியா முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று சர்வதேச தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியும், இது தொடர்பாக டெல்லி மேல்-சபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தும், மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை.
தொடர்ந்து நழுவி வருவது குறிப்பிடத்தக்கது.