இலங்கையின் பிரதான நகரங்களில் உள்ளநான்கு பள்ளிவாசல்களை உடைக்குமாறு கோத்தபாய உத்தரவு!

399

இலங்கையின் பிரதான நகரங்களில் உள்ள நான்கு முஸ்லிம் பள்ளிவாசல்களை உடைத்து அகற்றுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

tri

பொரலஸ்கமுவ நகரில் உள்ள ஜூம்மா பள்ளி, வத்தளை – திப்பிட்டிகொடவில் உள்ள தக்கியா பள்ளி, மாத்தறை இஸ்ஸதீன் நகரில் உள்ள ஒஸ்ஜித் தக்வா பள்ளி, மாவனல்லை – கெரமினிய பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளி ஆகியவற்றையே இவ்வாறு உடைத்து அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.

குறித்த நான்கு பள்ளி வாசல்களை அப்பிரதேசங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு கோரி வந்தது.

மேற்படி பிரதேசங்களில் உள்ளூராட்சி அமைப்புகளிடம் அந்த அமைப்பு இது தொடர்பில் வலியுறுத்தி வந்தது.

1உள்ளூராட்சி சட்டமூலத்தின் 98வது பிரிவின் அடிப்படையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுதல், பிரதேசத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய விடயங்களில் அடிப்படையில் ஏற்கனவே இந்த பள்ளி வாசல்களை உடைக்க உள்ளூராட்சி அமைப்புகள் முயற்சித்தன.

எனினும் நீதிமன்ற தடையுத்தரவினால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில், நகர அபிவிருத்தி அதிகார சபை நேரடியாக தலையிட்டு இந்த பள்ளி வாசல்களை உடைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பு, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் ஆசியுடன் இயங்குவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் பள்ளி வாசல்களை உடைக்க உத்தரவிட்டுள்ளமை தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதனையும் வெளியிடவில்லை.

 

SHARE