இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக தற்போதைக்கு நாங்கள் கருதவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயித் ராட் அல்குசைன் தெரிவித்துள்ளார்.
கண்மூடித்தனமான எறிகணை வீச்சு, சட்டவிரோத படுகொலைகள்,பலவந்தமாக காணமற் போகச்செய்யப்படுதல், மிகசேமாசமான சித்திரவதைகள், பாலியல் வல்லுறவு.சிறுவர்களை படையணிகளில் சேர்த்தல் உட்பட பாரிய குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
மனித குலம் முழுவதற்கும் கடும் கரிசனையை ஏற்படுத்தக்கூடிய விபரங்கள் இந்த அறிக்கை மூலம் வெளியாகியுள்ளன.
புலம்பெயர் தமிழர்கள் உட்பட சகலசமூகத்தினரும் இந்த அறிக்கையை மறுத்தல் என்ற நிலையிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அங்கீகரித்தல் மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாடுகளிற்கான சந்தர்ப்பமாக கருதவேண்டும்.