இலங்கையில் தமிழர்கள் கௌரவத்துடன் வாழ வழிகைய செய்ய வேண்டும் என இந்தியப் பிரமர் நரேந்திரமோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

344

 

இலங்கையில் தமிழர்கள் கௌரவத்துடன் வாழ வழிகைய செய்ய வேண்டும் என இந்தியப் பிரமர் நரேந்திரமோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார். மூன்று நாள்கள் உத்தியோக பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்க்கிரம பிரதமர் நரேந்திர மோடியை அவரது ஹைதராபாத் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் இந்த சந்திப்பில், தமிழக மீனவர்கள் பிரச்சினை, இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸலின் நடவடிக்கைகள், இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக என்று கூறப்படுகிறது. இதையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறும் போது – நான் பிரதமரான பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளமை பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கம். பழைய காயங்களை உற்று நோக்கும் வேளையில் எதிர்காலத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம். தீவிரவாத எதிர்ப்பு, கடலோர பாதுகாப்பு போன்ற விசயங்களில் இணைந்து செயல்படுவோம். இந்தியாவுடனான பொருளாதர ஒத்துழைப்பு என்பது மிகவும் தொன்மையானது. அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் வேலைவாய்ப்பை உருவாவாக்குவதே எங்கள் இலக்கு. சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது குறித்தும், பேசியுள்ளேன் என கூறினார். பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது – இந்த ஆண்டு இந்திய இலங்கை உறவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. மிகவும் அண்மையில் உள்ள நெருக்கமான நட்பு நாடாக இலங்கை இருக்கிறது. இலங்கையின் அனைத்து வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கும் என்பதற்கு உறுதியளிக்கிறோம். இலங்கையில் தமிழர்கள் கெளரவமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என ரணில் விக்ரம சிங்விடம் வலியுறுத்தியுள்ளார் எனத் தெரிவித்தார்.

SHARE