இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வன்னி மாவட்ட சாலைகளுக்கு புதிய பஸ் வண்டிகள் கையளிக்கும் நிகழ்வு மன்னார் அரச பஸ் தரிப்பிடத்தில் நேற்று(14) சனிக்கிழமை மாலை வடமாகாண அரச போக்குவரத்துச் சேவையின் பொது முகாமையாளர் முஹமட் அஸ்ஹர் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி போக்குவரத்து அமைச்சர் எம்.எஸ்.முஹமட் தௌபீக், கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியூதீன், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக்,முத்தலிப் பாபா பாரூக்,வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான பதியுதீன் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது புதிய 15 பஸ்களில் மன்னார் சாலைக்கு 5 பஸ்களும்,வவுனியா சாலைக்கு 8 பஸ்களும்,முல்லைத்தீவு சாலைக்கு 2 பஸ்களும் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.