இலங்கை மக்களின் வாக்காளர் பதிவுகளுக்கு 9 லட்சம் பேர் வாக்களிக்கும் தகுதியை இழந்துள்ளனர்

464
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 9 லட்சம் பேர் வாக்களிக்கும் தகுதியை இழப்பார்கள் என தெரியவருகிறது.

இலங்கை மக்களின் வாக்காளர் பதிவுகளுக்கு அமைய தேசிய அடையாள அட்டையோ வேறு அடையாள பத்திரங்களோ இல்லாததே இந்த தகுதியிழப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் தேர்தலுக்கு முன்னர் அடையாள அட்டைகள் இல்லாத வாக்காளர்களுக்கு அடையாள அட்டை அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

9 லட்சம் பேரில் சுமார் 25 வீதமானவர்களுக்கேனும் அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுக்க எண்ணியுள்ளதாக இலங்கை மனித உரிமை கேந்திர நிலையம் தெரிவித்துள்ளது.

 

SHARE