உலகில் தொடர்ச்சியாக 22 தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய ஒரே கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த பரிசு வழங்கப்படும்.

392
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நோபல் பரிசு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகில் தொடர்ச்சியாக 22 தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய ஒரே கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த பரிசு வழங்கப்படும்.

வெளிநாட்டு சூழ்ச்சியாளர்களுடன் இணைந்து நாட்டுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி துரோகம் இழைக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நாடாளுமன்றில் செயற்பட்டு வருகின்றது.

பலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் அழிவுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

பலஸ்தீன விவகாரம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பியுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியும் அவையிலிருந்து வெளியேறியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE