உலக கோப்பை கால்பந்து: இத்தாலி– இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை

541

உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஆப் டெத் ‘டி‘ பிரிவாகும். அந்த பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் இத்தாலி, இங்கிலாந்து உருகுவே மற்றும் கோஸ் டாரிகா அணிகள் இடம் பெற்றுள்ளன.

நாளை அதிகாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இத்தாலி– இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

24 முறை இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் இத்தாலி 9 ஆட்டத்திலும், இங்கிலாந்து 8 ஆட்டத்திலும் வெற்றி பெற்றன. 7 ஆட்டம் ‘டிரா’ ஆனது. தரவரிசையில் இத்தாலி 9–வது இடத்திலும், இங்கிலாந்து 10–வது இடத்திலும் உள்ளன.

முன்னதாக நள்ளிரவு 12.30 மணிக்கு நடை பெறும் ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள உருகுவே– கோஸ்டாரிகா மோதுகின்றன. இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள கொலம்பியா– கிரீஸ் மோதுகின்றன.

SHARE