உலக கோப்பை கால்பந்து: கிரீசை 3 கோல் வித்தியாசத்தில் வென்றது கொலம்பியா

527
2014-உலக கோப்பை கால்பந்து போட்டியின் நான்காவது ஆட்டம் இன்று பெலோ ஹாரிசோண்ட்டில் உள்ள எஸ்ட்டாடியோ மினிரவ் மைதானத்தில் நடைபெற்றது. ‘சி’ பிரிவு போட்டியான இதில் கிரீஸ் அணியும் கொலம்பியா அணியும் மோதின.

ஆட்டத்தின் முற்பகுதி நேரம் வரை கொலம்பியா ஒரு கோல் அடித்து, கிரீஸ்-சின் கணக்கை பூஜ்ஜியத்தை விட்டு உயராமல் பார்த்துக் கொண்டது. பரபரப்பான பிற்பகுதி ஆட்டத்திலும் எதிரணியை தலையெடுக்க முடியாமல் திணறடித்த கொலம்பியா, மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் கிரீஸை வீழ்த்தியது.

16 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டியில் நுழைந்த கொலம்பியா இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்குள் நுழையும் தகுதியை பெற்றுள்ளது.

SHARE