ஐ.நா அறிக்கை குறித்து இலங்கையுடன் இணைந்து செயற்படத் தயார் – அமெரிக்கா

344

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கை குறித்து இலங்கையுடன் இணைந்து செயற்படத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
விசாரணை அறிக்கை வெளியிடப்படும் வரையில் ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச நிறுவன விவகாரங்களுக்கான பிரிவின் துணைப் பிரதி செயலாளர் எரின் எம். பார்க்லேய் இதனைத் தெரிவித்துள்ளார்.
நம்பகமானதும் அர்த்தபூர்வமானதுமான பொறுப்புக்கூறுதல் முறைமை ஒன்றை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்த பூரண ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE