சுருக்கிட்ட நிலையில் இந்தச் சிறுமி இறந்துள்ளார். இந்த சிறுமியின் தாய் தந்தையர் வீட்டில் இல்லாத நேரம், தனிமையில் இருந்தபோதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதென, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக்குச் சென்றிருந்த இந்தச் சிறுமியின் சகோதரி பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்து மூடியிருந்த கதவைத் திறந்தபோது தனது சகோதரி சுருக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து, அவர் தெரிவித்த தகவலையடுத்து அயலவர்கள் ஒன்று கூடியிருந்த போதே தாய் தந்தையர் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தந்தையாருடனும், ஒரு சகோதரன் மற்றும் சகோதரியுடன் வாழ்ந்து வந்த இந்ச் சிறுமி நான்கு மாதங்களாகப் பாடசாலைக்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு மாதங்களாகப் பாடசாலைக்குச் செல்லாதிருந்த இந்தச் சிறுமியே, தனது தாயார் இரண்டு வருடங்களாக வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்றிந்தபோது வீட்டுச் சமையல் உள்ளிட்ட வேலைகளைச் செய்து வந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றி அறிந்த ஓமந்தை காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். திடீர் மரண விசாரணை அதிகாரி அமிர்தலிங்கம் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்குச் சென்று பார்வையிட்டு விசாரணைகள் நடத்தியதன் பின்னர் சடலத்தை வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும், புதிய வேலர் சின்னக்குளத்திற்குச் சென்று விடயம் குறித்து கேட்டறிந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சம்பவ இடத்தில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்குச் சிறுமியின் சடலத்தைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
சடலம் தற்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.