கல்முனை விபத்துச் சம்பவத்தில் பயணிகள் அனைவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

520

கல்முனை நகரிலிருந்து 48 பயணிகளுடன் சவளக்கடை ஊடாக 11ம் கொலனி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், வேகக்கட்டுப்பாட்டை இழந்து கிட்டங்கி ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் பயணிகள் அனைவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

கல்முனை நகரிலிருந்து நாவிதன்வெளிப் பிரதேசத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களின் நலன்கருதி இந்த பஸ் சேவை இடம்பெறுகின்றது.

ஆசிரியர்களுடனும் பொதுமக்களுடனும் கிட்டங்கி வீதியால் வந்து கொண்டிருந்தபோது, பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது. சாரதியின் சாமர்த்தியத்தால் பஸ் குடை சாயாது, பாரிய விபத்திலிருந்து காப்பாற்றியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த இடத்திற்கு வருகை தந்த சவளக்கடைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

SHARE