கின்னஸ் சாதனைக்காக மார்பகங்களை பெரிதாக்கும் பெண்கள் மார்பகங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு அங்குலம் வீதம் மேலும் வளர்ச்சியடைவதாக கூறுகிறார்.

964

அமெரிக்காவைச் சேர்ந்த செல்சியா சாம்ஸ், உலகிலேயே மிகப் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண் தானே எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் தனது மார்பகங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு அங்குலம் வீதம் மேலும் வளர்ச்சியடைவதாக கூறுகிறார்.

breast1-1

அவர் தற்போது 164 XXX அளவுடைய மார்பக கச்சையை அணிகின்றார். 34 வயதான செல்சியாவின் உயரம் 5 அடி 3 அங்குலமாகும். துகிலுரி நடனங்கள் போன்றவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான டொலர்களை சம்பாதித்து வருபவர் இவர்.
பிரிட்டனின் ஐ.ரி.வி. தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அண்மையில் தோன்றிய செல்சியா, தான் சாதாரண D அளவுடைய மார்பகங்களை எவ்வாறு இப்படி பெரிதாக்கினார் என்பது குறித்து விளக்கமளித்தார். பல தடவை சத்திரசிகிச்சை செய்துகொண்டதன் மூலம்தான் அவர் இப்படியானாராம்.

20 ஆவது வயதில் முதலாவது சத்திரசிகிச்சையை மேற்கொண்டு தனது மார்பகங்களை DD அளவுடையதாக்கினார். பின்னர் இரண்டாவது சத்திரசிகிச்சை மூலம் HH அளவுக்கு அதிகரித்துக்கொண்டார். அதன் பின்னரும் அவர் ‘பொலிபுரப்பலின் ஸ்ரிங் பிராஸ்ட் இம்ளான்ட்ஸ்’ முறையில் மற்றொரு சத்திர சிகிச்சை செய்துகொண்டார்.

இந்த முறையிலான மார்பக சத்திர சிகிச்சைக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘அடிப்படையில் இது கயிறு போன்றது. அது நெஞ்சுப்பகுதிக்குள் திரவங்களை வெளியிடுகிறது. அந்த இழைகள் நெஞ்சுப்பகுதியை எரிச்சலூட்டுவதன் மூலம் திரவ உற்பத்தியை அதிகரிக்கச் செய்கின்றன.

இதனால் மார்பகம் வளரும்’ ஏன அவர் தெரிவித்துள்ளார். தான் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே சத்திர சிகிச்சைகளை செய்துகொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனாலும், இவர் இன்னும் உலகின் மிகப்பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்ணாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தற்போதைய நிலையில் கின்னஸ் பதிவுகளின்படி மெக்ஸி மௌண்ட்ஸ் என்பவரே மிகப்பெரிய மார்பங்களைக் கொண்டவராக பதிவு செய்யப்பட்டுள்ளர். இந்நிலையில், தனது மார்பகங்கள் மிகப்பெரியவை என நம்பும் செல்சியா கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்கள் தன்னுடன் தொடர்பு கொள்வார்களென காத்திருக்கிறார்.

எவ்வாறெனினும் எதிர்காலத்தில் தான் தனது மார்பகங்களை சிறியதாக்கிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக செல்சியா கூறுகிறார். தனது தொழிலுக்கு இப்பெரிய மார்பகங்கள் உதவியாக இருந்தாலும் தனது நாளாந்த வாழ்க்கைக்கு அவை பெரும் இடைஞ்சலாக இருப்பதாக செல்சியா கூறுகிறார்.

உறங்குவது, விமானங்களில் ஒடுங்கிய கதவு கொண்ட கழிவறைக்குச் செல்வது என பல விடயங்களில் தான் சிரமப்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

SHARE