ஆனால் வேதத்தில் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவைகளால் மற்றவர்கள் எச்சரிக்கப்படுகின்றனர் என்பதை இன்றைய பாஸ்டர்கள் மற்றும் ஊழியர்கள் என்று தங்களை காட்டிக்கொள்பவர்கள் அநேகர் ஏற்றுக்கொள்ள மறுப்பதேன்?
வேதத்தில்,
1. ஆதாம் ஏவாளின் பாவம்
2. ஆபேலின் கொலை
3. லோத்தின் சந்ததி
4. இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்கள்
5. நியாயாதிபதிகளின் தவறுகள்
6.இராஜாக்களின் தவறுகள
7. சவுல் ராஜாவின் தவறுகள்
8. தாவீது அரசனின் பாவங்கள்
9. சாலோமோனுடைய பின்மாற்றம்
10. கள்ள தீர்க்கதரிசிகளைப்பற்றின எச்சரிப்புகள்
11. பீலேயாமின் பொருளாசை
12. கள்ள ஊழியர்களின் அட்டூழியங்கள்
13. யூதாஸின் பண ஆசை
14. கள்ள அப்போஸ்தலர்கள்
15. கள்ள சகோதரர்கள்
16. லூசிபரின் அழிவு
என்ற பற்பல சம்பவங்களால் தேவன் வேத வசனங்கள் மூலமாகவே அவருடைய பிள்ளைகளை எச்சரிக்கின்றார். இந்த காரியங்கள் அனைத்தையும் தேவன் மூடிமறைக்காமல் அப்படியே எழுதி தந்திருக்கிறார். காரணம் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிக்கப்போகின்ற அவருடைய ஜனங்கள் இவைகளால் எச்சரிக்கப்பட்டு அக்கினியும் கந்தகமும் எரிகின்ற எரிநரகத்துக்கு தப்பிக்கப்படவேண்டும் என்பதற்காகதான்.
1. இந்த காரியங்களால் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படுகின்றதா?
2. விசுவாசிகள் வேதத்தை தியானித்துவிட்டு விசுவாசத்தை விட்டு விலகிப்போகிறார்களா?
3. புதிய விசுவாசிகளுக்கு வேதத்தில் சொல்லப்பட்ட இந்த சம்பவங்கள் இடையூறாக இருக்கின்றதா?
4. இத்தனை சம்பவங்கள் உள்ள வேத வசனங்களால் புறஜாதிகளுக்கு சுவிசேஷம் அறிவிகப்படவில்லையா?
5. உண்மையாய் ஊழியம் செய்கின்றவர்கள் வேதத்தில் சொல்லப்பட்ட இந்த சம்பவங்களால் எங்கேயாவது பாதிக்கப்படுகின்றார்களா?
என்பதை சற்றே சிந்தித்து பார்க்கவேண்டும். நம்மாளுங்க நியாயப்படுத்துவது போன்று தேவன் நினைத்திருந்தால் இப்படிப்பட்ட சம்பவங்கள் எல்லாவற்றையும் மூடிமறைத்து தேவன் எடிட் செய்து வேதத்தை வெளியிட்டிருப்பார்.
இப்போதாவது புரிகின்றதா? இப்படி டயலாக் அடிக்கின்றவர்களெல்லாரும் தேவனுடைய துரோகிகள் மற்றும் தேவனுடைய நாமத்தை தவறாக பயன்படுத்தி பிழைப்பு நடத்துகிறவர்களாதான் என்று.