குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப்படாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப்படும் என பலரும் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படாது ஐக்கிய நாடுகள்அமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியா தொடர்பான விசாரணைகளின் போது கூட பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.