சந்தானம் தற்போது விஜய் சேதுபதியின் ரூட்டை பின்பற்றுகிறரர்

519

கோலிவுட்டை விஜய் சேதுபதி வருவதற்கு முன், வருவதற்கு பின் என்று இரண்டு விதமாக பிரிக்கலாம்.

குறும்பட இயக்குனர்களின் ஆதிக்கத்தை தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதி தான் ஆரம்பித்து விட்டார் என்று கூட சொல்லலாம் .

அதற்கு முன்பெல்லாம் வித்தியாசமான படங்களை இயக்கி அவர்கள் எந்த நடிகரிடம் போட்டுக்காட்டினாலும் அந்த கதையை நம்பி யாருமே நடிக்க முன்வரவில்லை.

ஆனால் விஜய் சேதுபதி நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்கள் மெகா ஹிட்டடித்ததால், அந்த படங்களை இயக்கியவர்களின் படங்களில் நடிக்க பல முன்னணி ஹீரோக்களே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சந்தானம் தற்போது விஜய் சேதுபதியின் ரூட்டை பின்றிபற்யுள்ளார், அதாவது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்கு பிறகு அதே பிவிபி நிறுவனத்துக்கு படம் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கும் சந்தானம் சமீபத்தில் குறும் பட இயக்குனர் ஒருவர் சொன்ன காமெடி கலந்த ஆக்சன் கதை பிடித்தால் நடிக்க ஓகே சொல்லியுள்ளார்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் பணியாற்றிய அதே தொழிநுட்ப கலைஞர்கள் இதிலும் பணியாற்ற உள்ளனர்

தற்போது லிங்காவில் நடித்து வரும் சந்தானம் அவர் நடிக்க வேண்டிய பகுதியை முடித்து கொடுத்து, மீண்டும் ஹீரோவாக இப்படத்தில் களம் இறங்க உள்ளார். அதுவும் இப்படத்தை மிகவேகமாக முடிக்க திட்டமிட்ட உள்ளாராம்.

 

SHARE