‘சமஷ்டி’ முறையில் ஒன்றிணைய தமிழ் அரசியல் ஏதோ ஒரு மாதிரியாக தேர்தல் திருவிழா நடந்து முடிந்தாயிற்று..

616

 

‘சமஷ்டி’ முறையில் ஒன்றிணைய தமிழ் அரசியல்

ஏதோ ஒரு மாதிரியாக தேர்தல் திருவிழா நடந்து முடிந்தாயிற்று…அடுத்து வரும் ஐந்து

ஆண்டுகளுக்கு வாக்குப்பிச்சை கேட்கும் தேவைப்பாடு வராது.

tna

நடந்து முடிந்த தேர்தலுக்காக பிச்சை கேட்டு கேட்டே அழைந்த அலுப்புச்சலுப்பில் வெற்றி

பெற்றவர்களும் அதனை கை நழுவ விட்டவர்களும் தமது கஜானா பெட்டியில் இருந்து காழியான

பணத்தின் கணக்கு வழக்குகளை பார்ப்பதில் தற்போது இருப்பார்கள்.

இவைதான் காலம் காலமாக நடந்தேறுகின்றன… இந்நிலையிலேயே அடுத்த வருடத்துக்குள்

தீர்வு எனும் மாயக் குண்றொன்டை போட்டு ஒருமாதிரியாக வெற்றி பெற்று

விட்டார்கள்.

இது ஒருபுறமிருக்க தேசியம் பேசி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தேசிய

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப்பதவி எடுப்பதா? இல்லையா? என்பதான உள்ளக

போரில் அடிபட்டு தற்போது அதிஸ்ரவசமாக பிரதான எதிர்கட்சி பாத்திரத்தை

சுவிகரித்திருக்கின்றனர்.

இனி என்ன வரவேற்பு, மாலையும் கழுத்துமாக பவனி வரும் காட்சிகளுக்காக ஒதுக்கி

ஒருமாதிரி இவ்வருடத்தை நகர்த்தி விடுவார்கள்.

‘தெரியாத பேயைக்காட்டிலும் தெரிந்த பிசாசு பரவாயில்லை’ என்ற நிலையில்தான்

வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதை அவர்கள் தமக்கான மக்கள் ஆணை என்பதாக

பிதற்றிக்கொண்டு திரிகிறார்கள், அப்படி ஒன்றுமில்லை.

தேசிய இனப்பிரச்சிணைக்கு சிறந்த தீர்வாக சமஷ்டி முறையே பலராலும்

பிரஸ்தாபிக்கப்படுகின்றது. இது ஒருவகையில் நியாய பூர்வமானதாகவும் இருக்கலாம்.

ஏனெனில் இலங்கை என்பது பல்லின, பல்தேசிய மற்றும் பல்வேறு கலாச்சார சூழலை

கொண்டமை இதற்கு ஒரு அடிப்படை காரணம் எனலாம்.

அந்த வகையில் ஒற்றையாட்சி என்பதன் கீழான நிர்வாக முறைமை அல்லது ஆட்சி முறை

என்பது இன்றைய காலகட்டத்தில் பொருந்தாத அல்லது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத

ஒன்றாகவே இருக்கின்றது.

ranil

தமிழர் தேசிய பிரச்சினை என்பது சுமார் எழுபது வருடங்களை அண்மித்து வரும் நிலையில்

அதற்கான நீதியானதும், நிலைத்து நிற்கக் கூடியதுமான தீர்வும் எட்டப்பட வேண்டிய தேவை

காலத்தின் கட்டாயமாகவே பார்க்கப்படுகின்றது.

ஆளுக்காள் பழைய பஞ்ஞாங்கத்தை மாறி மாறி புரட்டுவதை விடுத்து பெரும்பாலும்

ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு புள்ளியில் ஒத்திசைய வேண்டும்.

தமிழன் எந்த நேரத்திலும் ஒற்றுமைப் படமாட்டான் என்பதை நாம் மட்டுமல்ல சர்வதேசமும்

நன்கு கற்றறிந்து, அனுபவப்பட்டு புரிந்து கொண்ட ஓர் விடையம்தான்;.

இவ்வாறான நிலையில் இந்த தேசிய இனப்பிரச்சினை எனும் கருப்பொருளை எத்தனை

தலைமுறையினர்க்கு கடத்தப்போகின்றோம் என்பதுதான் எமக்கே தெரியாத

அதேவேளை எம்முன் இருக்கும் ஒரு கேள்வியாகும்.

ஏதோ ஒரு இடத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! அந்த முற்றுப்புள்ளியை யார்,

எதால், எப்படி, எங்கு..? வைப்பது என்பது முக்கியமல்ல.

மாறாக ஒன்றுபட்ட, ஐக்கியப்பட்ட கூட்டு நடவடிக்கைகளே அதற்கு இன்றியமையாததாகும்

என்பதே கடந்த காலத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.

அதற்கு யார் யார் எல்லாம் தமிழர் தலைவிதியை நாம்தான் தீர்மானிப்போம் என

புறப்பட்டார்களோ அவர்கள் அத்தனை பேரும் ஓரிடத்தில் சங்கமிக்க வேண்டும்.

சாப்பாட்டு மேசைகளில் மட்டும் ஒன்றுபட்டு உண்பதாலும், களியாட்ட நிகழ்வுகளில்

கூத்துப்போடுவாலும் எதுவும் பெரிதாக நடக்கப்போவதில்லை.

தேர்தல் காலங்கள் வந்ததும் ஆள்மாறி ஆளாக வீர பிரதாபங்களை மேடைகள் தோறும்

அள்ளி வீசுவதும், உசுப்பேத்தும் தேசியவாதம் கக்குவதும் அதன் பின்னர் கதிரைகளுக்காக

தங்களுக்குள் அடிபடுவதையும் முதலில் நிறுத்திக்கொண்டு ஒன்றாக சேர்வது பற்றி

சிந்திக்க வேண்டும்.

இதனை விடவும் சரியோ, பிழையோ அரசியல் தளத்தில் ஒன்றாக ஆற அமர இருந்து

விவாதிக்க முன்வரவேண்டும். அப்போதுதான் எங்களுக்குள் ஒரு தெளிவு பிறக்கும்.

சர்வதேசம் எமது பிரச்சினையை ஒரு பொது பிரச்சினையாக, பொருட்டாக கருதி அதனை எடுக்க

வேண்டுமானால் முதலில் எங்களுக்குள் தெளிவான ஒருமித்த கருத்து இருக்க வேண்டும்.

தேசிய இனப்பிரச்சிணைக்குரிய தீர்விற்கான ஆரம்பம் எப்போதோ தொடங்கி விட்டது.

நாம்தான் அதனை சரியாகப் பற்றிக்கொள்ள வில்லை என தோன்றுகின்றது.

முற்றுப்புள்ளி வைக்க தவறிவிடுவோமோ என மண்டையை போட்டு குழப்புவதை விடுத்து

தொடக்கப் புள்ளியான பண்டா-செல்வா ஒப்பந்தத்தை புறட்டிப்பார்த்தால் என்ன என்பது

தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மாறிமாறி ஆட்சிபீடம் ஏறிய சிங்கள அரசாங்கங்கள்… என்றுதான் இன்றும்

பிதற்றிக்கொண்டிருக்கின்றோம்.

அப்படியானால் மாறாமலே தமிழ் அரசியல் பீடத்தில் குந்திக்கொண்டிருக்கும் நம்

அரசியல் தலமைகள் எந்த திட்டத்தை சரியாக பற்றிப்பிடித்துக்கொண்டன.

ஆக, அன்றும் இன்றும் எமது தமிழர் பிரச்சினையின் பொருட்டு அரசியல் வாதிகள்

இருந்திருக்கின்றார்கள், தற்போதும் சந்திகள் தோறும் நாளுக்கொன்றாக

தோன்றிக் கொண்டேதான் இருக்கின்றார்கள்.

ஆனால் அரசியல் ஞானி அல்லது அரசியல் ராஜதந்திரி (ளுவயவநளஅயn) என்று

சொல்லும் அளவிற்கு எமது அரசியல் தலமைகள் இன்னும் வளரவில்லை என்றே சொல்ல

வேண்டியிருக்கின்றது.

ஏனெனில் அன்று தொட்டு இன்று வரையில் தமிழ் அரசியல் தலமைகளின் செயற்பாடு

என்பது ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஷ்காரம்’ என்பதாகவே அமைந்து விட்டது.

சேர்.பொன் இராமநாதன் மற்றும் சேர்.பொன் அருணாச்சலம் ஆகியோர் சிங்கள

அரசியல் தலமைகளுடன் முன்னெடுத்த இணக்க அரசியல் முயற்சி தோல்வி கண்டிருந்தது.

அதேபோன்று தந்தை செல்வா அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சை

வழிப்போராட்டம்; தமிழ் மக்களை கடவுள்தான் காக்க வேண்டும் என்றதுடன் தோல்வி கண்டது.

அதேபோன்று இடைப்பட்ட காலத்தில் தலை தூக்கிய ஆயுதப்போராட்டத்தின் ஒரு பகுதி

அரசியல் நீரோடையில் கால் நணைத்து தொடர்கின்றது, மற்றைய பகுதி

முள்ளிவாய்க்காலுடன் மௌனிக்கப்பட்டிருக்கின்றது.

இவைகலெல்லாம் தமிழர் தரப்பு அரசியல் நீர் ஓட்டத்தில் காலங்காலமாக பதிவாகும்

வழமையான சம்பவங்களாகிவிட்டன.

ஆக தமிழர் அரசியலை அன்று கையில் எடுத்தவர்களும் தமது கடந்த கால தவறுகளை

திருத்திக்கொண்டதாகவோ, தோல்விகள் பற்றி ஆராய்ந்ததாகவோ இல்லை!

இன்று கையில் எடுத்திருப்பவர்களும் அவைகள் பற்றி சிந்தித்து பார்ப்பதாகவுமில்லை!

எல்லாமே இன்று எல்லை தாண்டி போயாயிற்று, சிதம்பர சக்கரத்தை பேய்பார்த்த

கதையாகி விட்டது!

ஆக ஆள்மாறி ஆளாக ஊடக அறிக்கை, அதற்கு மறுப்பறிக்கை, எதிர் அறிக்கை

என்றுதான் தொடர்கின்றதே தவிர ஆக்கபூர்வமான, செயற்பாட்டு ரீதியிலான

எதனையும் காணக்கூடியதாக இல்லை.

தமிழ் அரசியல் தலமைகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் பல எடுக்கப்பட்டாலும் அவைகள்

எல்லாம் தோல்வியையை கண்டிருக்கின்றன.

jvp

இவ்வாறான நிலையில் சர்வதேச சமூகத்தினால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட

மதத்தலைவர்களுள் ஒருவரான மன்னார் ஆயர் அருட்கலாநிதி இராயேப்பு ஜோசேப்பு

ஆண்டகை அவர்கள் எடுத்த காத்திரமான முயற்சிக்கும் எவரும் வலுச்சேர்க்கவில்லை.

ஆயர் இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகையின் முயற்சிக்கே ஒன்றிணையாதவர்கள் வேறு

எந்த சக்திகளின் அழைப்பிற்கும் ஒன்றிணைவார்கள் என்பதை தற்போதைக்கு எதிர்பார்க்க முடியாது.

இந்நிலையில் ஐ.நாவிற்கு எதிராக போராட்டம் நடத்தி என்ன, கொடும்பாவி எரித்து

என்ன நடக்கப்போகின்றது.

ஓன்;றை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் மேற்குலகம் ஒரு தீர்மானத்தை,

முடிவை எடுத்து விட்டால் அது சரியோ பிழையோ அதிலேயே பற்றி நிற்கும்.

நன்மை பயக்கும் எனும் நப்பாசையில் ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு எடுக்கும் எமது

அரசியல் தலமைகளின் எந்தவொரு முடிவும் மேற்குலகை எந்த வகையிலும்

பாதிக்கப்போவதில்லை.

அது திரும்பவும் எமது கழுத்தினையே சுற்றி இறுக்கும் என்பதை எமது அரசியல் தலமைகள்

புரியாமலும் இருக்க மாட்டார்கள் என்பதுமில்லை.

இதனிடையே தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணப்பட

வேண்டும் எனும் அழுத்தம் தொடர்ச்சியாக கொடுக்கப்படும் என பாராளுமன்ற

உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆரம்பம் முதல் தெரிவித்தே வருகின்றார்.

தேசிய இனப்பிரச்சினை மற்றும் விடுதலைப்புலிகளுடனான தோல்வியடைந்த சமாதான

முன்னெடுப்புக்களில் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு குறிப்பிடத்தக்க

இடமிருக்கின்றது.

அதாவது, 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி

அரசாங்கத்தின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழீழ விடுதலைப்

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் முதல்கட்டமாக போர்நிறுத்த

உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது நிணைவிருக்கலாம்.

இந்த போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்த அனைத்து சமாதான

பேச்சுவார்த்தைகளுக்கும் நோர்வே அரசாங்கப் பிரதிநிதிகள் மத்தியஸ்தம்

வழங்கியிருந்தனர்.

சர்வதேச சமூகம் ஏற்றக்கொண்ட பிரதிநிதிகளாக தொடர்ந்தும் நோர்வே அரசாங்கம்

தனது ஒத்துழைப்பை வழங்கி இருந்தது.

போர்நிறுத்த உடன்படிக்கை என்பதை விட ‘புரிந்துணர்வு ஒப்பந்தம்’ என்றே

அழைக்ப்பட்டிருந்தது. (ஆநஅழசயனெரஅ ழக ருனெநசளவயனெiபெ – ஆழரு)

இதன் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சுமார் ஆறு

சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தன.

இவை அனைத்தும் இலங்கையில் அல்லாமல் அதற்கு வெளியே மூன்றாம் நாடுகளில்

இடம்பெற்றிருந்தமை நியாபகமிருக்கலாம்.

இதில் 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒஸ்லோவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள்

ஒரு முக்கிய கட்டத்தை எட்டியது எனக் குறிப்பிடலாம்.

அதாவது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ‘சமஷ்டி ஆட்சி’ முறைமை குறித்து

ஆராயப்பட்டது. எனினும், ஒஸ்லோவில் காணப்பட்ட புரிந்துணர்வு தொடர்ச்சியாக

நீடிக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த ஒஸ்லோ புரிந்துணர்வை நிராகரித்திருந்ததன்

காரணத்தினால் 2003 ஆம் ஆண்டளவில் புரிந்துணர்வின் அடிப்படையிலான

பேச்சுவார்த்தைகள் சர்ச்சைக்குரிய நிலைக்குள் தள்ளப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் இணங்கியவற்றிற்கு அமைவாக

நடந்து கொள்ளவில்லை எனக்கூறி தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளிலிருந்து

விலகிக் கொண்டனர்.

இருப்பினும் 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஆழிப்பேரலை அணர்த்தத்தின்

பின்; தடைப்பட்டிருந்த சமாதான முன்னெடுப்புக்கள் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களினால்

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அரசியல் ரீதியான

அனுகுமுறைகளின் அடித்தளம் ஒன்றை மையப்படுத்தியதாகவே புரிந்துணர்வு உடன்படிக்கை

(ஆநஅழசயனெரஅ ழக ருனெநசளவயனெiபெ – ஆழரு) அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அதிகாரப் பரவலாக்கலின் மூலம் அரசியல் சாசனத்தினூடாக

இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க அப்போதைய இலங்கை அரசாங்கம்

உண்மையிலேயே தயாராக இருந்தது.

ஆனால் தனிநாட்டு கோரிக்கை ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள

வேண்டும் என்கிற நிலைப்பாட்டின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் இருந்தனர்.

இவ்விரு வேறுபட்ட நோக்கங்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப வேண்டிய

நிர்ப்பந்தமே 2002 ஆம் ஆண்டு சமாதான முன்னெடுப்புக்களின் பிரதான சவாலாகக்

காணப்பட்டது.

இரு தரப்பினர்க்கிடையிலும் காணப்படும் இணக்கப்பாட்டுத் திறனின் அடிப்படையில்

சாதாரண அதிகாரப் பகிர்வொன்றை நோக்கிச் செல்லக்கூடிய வாய்ப்பு நிறையவே

இருந்தது.

இதைப்போன்ற சூழ்நிலை ஒன்றுதான் ராஜீவ் காந்தி, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைக்

கொண்டு வந்தபோதும் இருந்தது. அதனை விடுதலைப் புலிகள் ஏற்றிருக்க வேண்டும்.

ஆனால், அதனை அவர்கள் செய்ய தவறிவிட்டனர்.

இந்திய இராணுவம் அமைதிப்படை எனும் பெயரில் இலங்கை வந்தபோது, அனேக தமிழ்

விடுதலைப் போராட்ட இயக்கங்களும் இந்திய அரசின் ஆலோசனையை ஏற்று, வடகிழக்கு

இணைந்த மாகாண சபை அமைப்பு முறைமைக்கு சம்மதித்திருந்தன.

ஆயினும் விடுதலைப்புலிகள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இந்திய இராணுவத்திற்கெதிரான

போரை நடாத்தியிருந்தனர்.

‘தனி நாடு வேண்டாம்; தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் பெற்றுத் தருகிறோம்’ என்ற

இந்தியாவின் அருமையான திட்டம் உதாசீனம் செய்யப்பட்டதால் இணைந்த வடகிழக்கு

மாகாணசபை எனும் மாபெரும் அரிய வாய்ப்பு கைநழுவிப் போனது.

அத்தகைய வரலாற்றுத் தவறினையும் தாண்டி விடுதலைப்புலிகள் அப்போதைய இந்திய

பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் கொலையுடன் தொடர்புபட்டதன்; விளைவாக

இந்திய அரசு தமிழர் விவகாரத்தில் இருந்து பின்வாங்கி விட்டது எனலாம்.

இதன் பிற்பாடு ஸ்காண்டிநேவியன் நாடுகளில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சமஷ்டி

முறையிலான தீர்வுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. அதனையும் கைநழுவ விட்டனர்.

இவற்றை விடவும் மேலானதாகவே நோர்வேயின் தலைநகராகிய ஒஸ்லோவில் வைத்தும் ஒரு

உடன்பாடு கைச்சாத்திடப்பட்டிருந்தது.

அதாவது, ‘ஓயாத அலைகள்’ போர் நடவடிக்கை மூலம் ஒரு மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையை

முறியடித்திருந்தனர் விடுதலைப்புலிகள்.

இதன் காரணமாக அந்நேரத்தில் அப்போதைய பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்க

ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் மிகுந்த ஆர்வம் காட்டியிருந்தார்.

குறித்த ஒஸ்லோ பேச்சுவார்த்தை குழுவில் விடுதலைப்புலிகளின் சார்பில்;

விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாவும்;) ஓர் அங்கமாகியிருந்தார்.

மேற்கத்திய நாடுகளின் வௌ;வேறு நகரங்களில் சுமார் ஆறு சுற்றுப்

பேச்சுவார்த்தைகள் நடந்தேறின. இதனடிப்படையில் ‘சமஷ்டி’ முறை தீர்வுக்கு இலங்கை அரசு

அப்போது ஒத்துக் கொண்டிருந்தது.

அந்த முறையை எப்படி அமுல் செய்வது என்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்றும்

முடிவானது.

ஒஸ்லோவில் வைத்து இந்த ஒப்பந்தத்தில் அன்டன் பாலசிங்கமும், இலங்கையின் அப்போதைய

வெளிவிவகார அமைச்சருமான மிலிந்த மொரகொடவும் கையெழுத்திட்டிருந்தனர்.

மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை பிரபாகரனுக்கு மிகுந்த ஆத்திரத்தை

தோற்றுவித்திருந்தது, இதன் காரணமாகவே அவர் ‘யாரைக் கேட்டுக் கையெழுத்துப்

போட்டீர்கள்’ என கருணா அவர்களை கடிந்து கொண்டார்.

இதுவே கருணாவிற்கும் பிரபாகரனுக்குமிடையே உள்ளக ரீதியாக புகைந்து கொண்டிருந்த

கருத்து முரண்பாடு பெரிதாக வெடித்தது எனலாம்.

இதனை கடந்த ஆட்சியில் பிரதி மீள் குடியேற்ற அமைச்சராக இருந்த விநாயக மூர்த்தி

முரளிதரன் (கருணா) இந்திய ஊடகங்களுக்கு அவ்வப்போது அளித்து வரும் பேட்டியில்

அவரே குறிப்பிடுகின்றார்.

‘தனி நாடு என்ற கோரிக்கையை இனி உலகம் ஏற்காது’ அதற்கு எந்த நாடும்

ஆதரவும் தெரிவிக்காது! என்பதையும் விநாயக மூர்த்தி முரளிதரன்

வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

இதனையே, நேர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மும்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ‘சமஷ்டி’ முறைமையே சிறந்த தீர்வுத்திட்டம் என்று

தெரிவித்திருந்தார்.

mahindha

தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் இனங்களின் பெரும்பாலான மக்களும், சர்வதேச

சமூகமும் அதனை அங்கீகரித்திருந்தன.

சமஷ்டி முறையானது ஐக்கிய இலங்கைக்குள் இடம்பெறவேண்டும் என்பதே சர்வதேசத்தின்

விருப்பம் எனக் குறிப்பிட்டிருந்த சொல்ஹெய்ம் அதனையே சர்வதேசமும்

எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.

இலங்கையில் தனியான தமிழ் ஆட்சியொன்று உருவாகுவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை

என்பதையும் சொல்ஹெய்ம் ஏலவே குறிப்பிட்டு விட்டார்.

சற்று முன்னகர்ந்து நோக்கினால் ‘எல்லா தமிழ்த் தலைமைகளும் ஒன்று சேருங்கள் என்று

இந்தியா திம்பு பேச்சுவார்த்தையின் போது கூறியது. அதற்கும் அதில் பங்கேற்ற

எவரும் உடன்பட்டதாக இல்லை.

திம்பு பேச்சுவார்த்தை 1985-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி தொடங்கி, 13-ஆம் தேதி

வரை நடைபெற்றது.

இதில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் (Pடுழுவு) இணைந்து

ஒரு குழுவாகவும்,

விடுதலைப் புலிகள் இயக்கம் (டுவுவுநு)இ தமிழீழ விடுதலை இயக்கம் (வுநுடுழு), ஈழ மக்கள்

புரட்சிகர விடுதலை முன்னணி (நுPசுடுகு)இ ஈழப் புரட்சிகர அமைப்பு (நுசுழுளு) உள்டடங்கிய

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (நுNனுடுகு); என்பன பிரிதொரு குழுவாகவும்

பங்கேற்றிருந்தன.

இதனிடையே, இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும், அதற்கு நடந்தேறிய கறைபடிந்த

சம்பவங்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக் கூறியே ஆகவேண்டும், என்பதனை

தென்னாபிரிக்கப் பயணத்தின் போது அந்நாட்டு முக்கியஸ்தர்களிடம் தாம் விரிவாக

எடுத்துக் கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

தெரிவித்திருந்தார்.

அதாவது கடந்த வருடம் (09.04.2014) தென்னாபிரிக்காவிற்கான பயணம் ஒன்றினை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலமையிலான குழுவினர்

மேற்கொண்டிருந்தமை நியாபகமிருக்கலாம்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ. சுமந்திரன்

மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்

உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

தென்னாபிரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தாம் அவதானித்துக் கொண்டிருப்போம்

என்றும் அதற்கேற்றவாறு தமது பங்களிப்புகளை வழங்குவோம் என்றும், தாம் இனியும்

ஏமாறத் தயாரில்லை என்பதாகவும் சம்மந்தன் அந்த விஜயம் தொடர்பில்

தெரிவித்திருந்தார்.

சம்மந்தன் அவர்களின் இக்கூற்று சிந்திக்க வேண்டிய ஒன்றாகவே இருக்கின்றது.

ஏனெனில் அது அவரின் பட்டனுபமாகவும் இருக்கலாம் ஏனெனில் கடந்த வருடம்(2014)

இடம்பெற்ற ஜெனிவா அமர்வில் யாரும் எதிர்பாராத விதத்தில் இந்தியா கை விரித்ததை

அவர் இவ்வாறு சொல்லியிருக்கலாம்.

அப்படியாயின் தாம் பல தடவைகள் ஏமாற்றமடைந்திருப்பதை சம்மந்தன்

வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கின்றார் என்பதுதான் அதன் பொருளாக இருக்க

வேண்டும்.

தமது தென்னாபிரிக்கா பயணம் ஆக்கபூர்வமாகவும், அதேவேளை திருப்தியாகவும்

அமைந்தது எனவும் தாம் சொல்ல வேண்டிய விடயங்களை தென்னாபிரிக்க அரச

தரப்பினரிடம் தெட்டத் தெளிவாகக் கூறிவிட்டதாகவும் திரு. சம்மந்தன் தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும்

தீர்வைக் காண்பதற்கும் தென்னாபிரிக்க அரசு முன்வந்திருக்கின்றது.

இந்நிலையில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்கென

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா விசேட பிரதிநிதி ஒருவரையும் கடந்த வருடமே

நியமித்திருந்தார்.

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும், அவர்கள் அரச படைகளின்

தொந்தரவுகள் எதுவுமின்றி சகல உரிமைகளுடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே எமது

நிலைப்பாடு என்பதை தென்னாபிரிக்காவிடம் தாம் எடுத்துக் கூறியதாக தலைவர் சம்பந்தன்

அப்போது தெரிவித்திருந்தார்.

இதனிடையே, மாநிலங்களின் சம்மேளனமாக இலங்கை உருவாகுவதை தான்

நியாயப்படுத்துவதாக காலம் சென்ற முன்னாள் அமைச்சரான கே.எம்.சொக்ஸி

தெரிவித்திருந்தார்.

அதேவேளை சம்மேளனம் என்பது ஈழம் அல்ல என்றும் அது பிரிவினைக்கு இட்டுச் செல்லாது

என்பதாகவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

ஐ.தே.க எம்.பியும் முன்னாள் நிதி அமைச்சருமான காலம் சென்ற கே.எம்.சொக்ஸி

பாராளுமன்றத்தில் பேசும்போதே அவ்வாறு தெரிவித்திருந்தார்.

சர்வதேச பிரதிநிதிகள் குழுவானது தமது கூட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைபபிற்கும்

அழைப்பு விடுக்க வேண்டுமெனவும், மாநிலங்களின் சம்மேளனத்தை அடிப்படையாகக் கொண்டு

கலந்துரையாடல்களை முன்னெடுக்க இணக்கப்பாட்டுக்கு முன்வரவேண்டும் என்பதாகவும்

கேட்டிருந்தார்.

2008ம் ஆண்டு டிசெம்பர் மாதம் பாராளுமன்றில் இடம்பெற்ற 240 ஆவது அவசர காலச்

சட்ட நீடிப்பு விவாதத்தில்; கலந்து கொண்டு பேசிய காலம் சென்ற சொக்ஸி அவர்கள்

துரதிர்ஸ்டவசமாக இலங்கைக்கு ஒளிக்கீற்று கூட தென்படவில்லை என்பதையும் அப்போதே

சுட்டிக்காட்டியிருந்தார்.

தேசியப் பிரச்சினைக்கு ஒன்றுபட்ட தீர்வு அவசியம், கட்சி அரசியலுக்கு அப்பால்

சகல தரப்பினரும் ஒன்றுபட்டுத் தீர்வு காண வேண்டும்.

தனிநாட்டுக் கோரிக்கையை எமது நாட்டின் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்

கொள்ளமாட்டார்கள். ஆனால்;, உள்மட்ட சுயாட்சி மற்றும் உள்மட்ட சுயநிர்ணயம்

என்பவற்றுக்கான விதைகள் ஆழமாக வேரூன்றி விட்டன.

இந்தக் கோரிக்கைகளை சகல அரசியல் கட்சிகளும், பிரஜைகள் அமைப்புகளும் தலையாய தேசிய

பிரச்சினையாக அங்கீகரித்துத் தீர்வு காண முன்வர வேண்டும்.

மாகாண முறைமை மற்றும் அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் என்பன ஏற்கெனவே

எம்மிடம் உள்ளன.

சில அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன! ஆதலால், சமாதானத்தை வென்றெடுக்க

அதிகாரப் பகிர்வு பாதையில் நாடு மேலும் முன்னேறிச் செல்ல முடியும். தீர்விற்கு

சம்மேளனத்தை பயனுள்ள ஒன்றாக பரிசீலிக்க முடியும்.

இலங்கையானது சுமார் 200 வருடங்களாக ஒற்றையாட்சி முறையில் நிர்வாகிக்கப்படுகிறது.

1815 ஆம் ஆண்டில் கண்டியை பிரித்தானியர் கைப்பற்றி இலங்கை முழுவதையும் ஆட்சி

செய்த காலம் தொடக்கம். ஓற்றையாட்சியே நடைமுறையிலிருந்து வருகிறது.

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலும்; தற்போதும் ஒற்றையாட்சி

முறைமையே நடைமுறையிலிருக்கிறது.

அதேவேளை இந்த நாட்டில் மூன்று பிரதான இனங்களும், நான்கு மதங்களும் இருக்கின்றன

என்பதையும் நாங்கள் பல்லின, பலமத மக்கள் வாழும் தேசம் என்பதையும் ஞாபகத்தில்

கொள்ள வேண்டும். என்பதாகவும் அவர் அன்றே தெரிவித்திருந்தார்.

இன்று நாம் பற்றிக்கொண்டிருக்கும் இதே மாகாண சபை முறையினை வரதராஜபெருமாள்

காலத்திலாவது வசப்படுத்தியிருந்தால் இவ்வளவு இழப்புக்களையும், துன்பங்களையும் இயன்றளவு

தவிர்த்திருக்கலாம்.

அதைத்தான் தவர விட்டாலும், ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ எனும்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்த

அழைப்பிற்காவது ஒத்தாசை வழங்கியிருக்கலாம்.

ஆக, எவற்றையெல்லாம் நம் தமிழ் அரசியல் தலமைகள் தேவைப்படாது, வேண்டாம்,

பொருந்தாது என்று தட்டிக் கழித்தார்களோ அதைத்தான் இப்போது விடாப்பிடியாக

பற்றி நிற்கிறார்கள்.

அதற்குள், கிடைத்ததும் போதாது என்று அடம்பிடித்து தற்போது கைவசம் உள்ளதையும்

பறிகொடுக்க முயற்சிக்கும் நிலைதான் ஏற்பட்டிருக்கின்றது போல் தெரிகின்றது.

தற்போது முழுமை என்று சொல்லப்படாவிட்டாலும் ஓரளவு சிறந்த மாகாண சபை ஆட்சி

முறைமை வட-கிழக்கில் ஏற்பட்டிருக்கின்றது.

இதனை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வது மிக முக்கியம், அதனை விடுத்து காணி, பொலிஸ்

அதிகாரங்கள் என்று காவடி எடுக்க புறப்பட்டால் நிலமை விபரிதமாகவே

முடியலாம்.

மாநில சுயாட்சியை அடிப்படையாக கொண்டு இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடாக உலகில்

பிரகாசிக்கின்றது.

இந்தியாவின் மாநில சுயாட்சியின் அடிப்படையில் இங்கு பொலிஸ் அதிகாரத்தை

கோருவது சாத்தியமானதாக அமையாது. அது மிகப்பெரிய நாடு மக்கள் தொகையினால் அது

வியாபித்திருக்கின்றது.

அதனால் அங்கு மாநில பொலிஸ் சாத்தியமானது, ஆனால் இலங்கையில் உள்ள

சனத்தொகைக்கு ஒன்பது மாகாணங்களிற்கும் தனியான பொலிஸ் அதிகாரத்தை எதிர்பார்க்க

முடியாது.

அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரம் மேயரிடம் இருக்கின்றது என்பதற்காக

இலங்கையிலும் பிரதேச சபைகளின் தவிசாளர்க்கு பொலிஸ் அதிகாரம் வேண்டும்

என்று கோர முடியுமா?

மாநில சுயாட்சியினை ஏனைய நாடுகளிலிருந்து மாதிரிகளாக பெற்றுக்கொள்ளலாமே

தவிர அதனை அப்படியே அச்சொட்டாக இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என

எதிர்பார்ப்பது எந்த வகையிலும் பொருத்தமாக இருக்காது.

அதே போன்றுதான் வட-கிழக்கில் இராணுவ பிரசன்னத்தையும் நோக்க வேண்டும்.

படைவிலகல் என்பதை எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாது. அதேவேளை அது

சாத்தியப்பாடான ஒன்றாகவும் இருக்காது.

ஏனெனில் இலங்கையின் பூகோளம், மற்றும் அதன் அமைவிடம் அவ்வாறானதாகத்தான்

இருக்கின்றது.

இலங்கை என்பது இறைமையுள்ள ஒரு தனி அரசு! என்னதான் எங்களுக்குள் பிணக்குகள்,

பாகப்பிரிவினைகள் இருந்தாலும் நாம் எல்லோரும் இலங்கையர்.

அந்த வகையில் நான்டின் ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு எனும் விடயங்கள் மிகவும்

முக்கியம் வாய்ந்தவை. இலங்கை ஒரு தீவாக இருப்பதனால் அது இன்னும் இரட்டிப்பான

முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்து.

அதேவேளை அளவுக்கதிகமான படைப் பிரசன்னத்தையும், இராணுவ முகாம்களின்

எண்ணிக்கையினையும் குறைப்பது என்பதை கடினமான ஒன்றாக அரசாங்கம் நோக்கவும்

தேவையில்லை.

கடந்து போன காலங்கள் போனவையாக இருக்கட்டும்! ஆனால் அவற்றில் இருந்து அறிந்து

கொள்ள வேண்டியவற்றை கற்றுக்கொண்டு தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் யார்

யாரெல்லாம் உள்வாங்கப்பட வேண்டுமோ அவர்களையும் இணைத்துக்கொண்டு பயணிக்க

வேண்டும்.

தந்தை செல்வா எமக்கு தந்த தமிழன் எனும் அடையாளத்தை உலக அரங்கில் காத்திரமாக

பதிவு செய்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதை எவரும் கனவிலும் மறந்து

விடக்கூடாது.

அந்த வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் எவரும் தனித்து

உரிமை கோர முடியாது! கோரவும் கூடாது! அதற்கு இடமளிக்கப்படவும் கூடாது!

தற்போது மக்கள் ஓரளவேனும் அமைதியாக வாழத்தொடங்கியிருக்கும் இச்சூழ்நிலையில்

நடந்து முடிந்த எட்டாவது பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஊடாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு

சிறந்த பாராளுமன்றம் அமையப்பெற்றிருக்கின்றது.

இந்நிலையில் இச்சூழ்நிலை குழம்பாத வகையில் உள்ளக சுயாட்சி, சமஸ்டி என்பதன் நடைமுறைச்

சாத்தியமான பிரயோகப்பாட்டில் ஒன்றிணைந்து பயணிப்பது தொடர்பில் சிந்திக்க

தமிழ் அரசியல் தலமைகள் முன்வரவேண்டும் என்பதே இன்றை எதிர்பார்ப்பாக

இருக்கின்றது.

அரசறிவியியலாளர் அறிஞர் லெனின் குறிப்பிடுவதைப்போன்று ‘தவறுகளை

ஒப்புக்கொள்ளும் தைரியமும் அவற்றை திருத்திக் கொள்ளுவதற்கான பலமும்தான்

வெற்றிக்கான வழி’ எனும் கருத்தை இன்றைய தமிழ் அரசியல் தலமைகள் தமது சிந்தனையில்

எடுத்துக்கொள்ள வேண்டும்.

-முற்றும்-

SHARE