சம்பந்தன், விக்னேஸ்வரன் விரைவில் சந்திப்பு

299

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று அடுத்த வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என கூட்டமைப்பின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பில் இணக்கம் காணப்பட்டபடி கூட்டமைப்பு தலைவர்களுடனான இந்த கலந்துரையாடல் பெரும்பாலும் அடுத்த வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தை அடுத்த வாரமளவில், யாழ்ப்பாணத்தில் அல்லது வவுனியாவில் நடத்துவதற்கு இரு தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியின் தலைவர்களான மாவை சேனாதிராசா (இலங்கைத் தமிழரசுக்கட்சி), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), த.சித்தார்த்தன் (புளொட்) ஆகியோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் வட மாகாண முதலமைச்சரும் கலந்துரையாடுவது தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE