சர்ச்சையை கிளப்பிய அவுஸ்திரேலிய அணித்தலைவரின் விசித்திர களவியூகம்

415
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் அமைத்த களத்தடுப்பு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.பாகிஸ்தான்– அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது.

இதன் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திணறினர். இதனையடுத்து சில களவியூகங்களை மைக்கேல் கிளார்க் அமைத்தார்.

அதாவது மிட்செல் ஜான்சனை அழைத்து நேராக, அதாவது பந்து வீசும் பந்து வீச்சாளருக்கு நேராக நிற்க வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், துடுப்பாட்டக்காரர்கள் பவுலரின் கை நன்றாகத் தெரிவதற்காகத்தான் ‘சைட் ஸ்க்ரீன்’ வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை சரியில்லை என்றால் துடுப்பாட்டக்காரர்கள் ஓடி வரும் பந்து வீச்சாளர்களை கூட நிறுத்துவதை நாம் பார்த்திருக்கலாம்.

நிலைமை இப்படி இருக்க துடுப்பாட்டக்காரருக்கு தொந்தரவு செய்யும் விதமாக நடுவருக்கு நேராக பந்து வீச்சாளர் பந்து வீசும் திசையில் நேராக ஜான்சனை கிளார்க் நிறுத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது குறித்து முன்னாள் அவுதிரேலிய அணித்தலைவர் ஆலன் பார்டர், `இந்த களவியூகம் கிரிக்கெட் உணர்வுக்கு எதிரானது’ என சாடியுள்ளார்.

SHARE