சிறுநீரகத்தை விற்றாவது ஐபோன் வாங்க வேண்டும்: வாலிபர்களின் விபரீத முயற்சி………

404

ஐபோன் மோகத்தில் மக்கள் சிக்கி திளைக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக சீனாவில் இரண்டு வாலிபர்கள் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Iphone 6S தற்போது தான் சந்தைக்கு வந்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது, இந்நிலையில், சீனாவை சேர்ந்த வூ மற்றும் ஹுஆங் ஆகிய இரு நண்பர்கள், ஐபோன் வாங்க ஆசைப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்களிடம் ஐபோன் வாங்க பணம் இல்லாததால் தங்களுடைய சிறுநீரத்தை விற்பனை செய்து அதில் வரும் பணத்தினை கொண்டு ஐபோன் வாங்க முடிவு செய்த இவர்கள், இணையதளம் மூலம் சிறுநீரக விற்பனை தரகரை தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால், பேசியபடி குறிப்பிட்ட இடத்திற்கு தரகர் வராத காரணத்தால் ஏமாற்றமடைந்தனர், இதனைத் தொடர்ந்து ஹுஆங் என்பவர் சிறுநீரகத்தை விற்று எப்படியாவது ஐபோன் வாங்கிவருவேன் என்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர் திரும்பி வராத காரணத்தால் இவரது நண்பர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

தற்போது பொலிசார் காணாமல் போன நபரை தேடி வருகின்றனர்.

SHARE