சிறுநீர் பாதையில் தொற்றுநோயா? குணப்படுத்த புதிய சிகிச்சை முறை

355
சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுநோய்களை விரைவாக குணப்படுத்தக்கூடிய வகையில் USB ஸ்டிக் போன்ற சாதனத்தை East Anglia பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இத் தகவலானது San Diego இல இடம்பெற்ற மருத்துவ மாநாட்டில் வெளியிடப்பட்டுளள்து.

இச் சாதனமானது நுண்ணுயிர்க் கொல்லிகளைக் கொண்ட பரம்பரை அலகுகளை (DNA) வரிசையான முறையில் சிறுநீர்ப் பாதைகளினூடு செலுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நுண்ணுயிர்க் கொல்லிகளின் எதிர்ப்புத் தன்மையையும் இச்சாதனம் கண்டறியக்கூடியதாக இருக்கின்றது என East Anglia பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான David Livermore என்பவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐரோப்பிய நாடுகளில் ஆண்டுதோறும் 400,000 பேர் சிறுநீரகத் தொற்றுக்கு உள்ளாவதாகவும், இவர்களில் 25,000 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SHARE