சில பௌத்த துறவிகளின் செயல்கள் பௌத்த மதத்திற்கு அவமானம்: பிரதமர் டி.எம். ஜயரத்ன

434
nishantha-sri-warnasinghe

சில பௌத்த துறவிகளின் நடவடிக்கைகள் பௌத்த மதத்திற்கு அவமானமாக மாறியுள்ளதாகவும் அவர்களின் காவிகள் கூட மாறிவிட்டது எனவும் பிரதமர் டி.எம். ஜயரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சில மதத் தலைவர்கள் தேவையில்லாமல் அரசியலில் ஈடுபடுகின்றனர். அத்துடன் புத்த மதத்தையும் புத்த பகவானையும் அரசியலுடன் சம்பந்தப்படுத்துகின்றனர்.

பௌத்த துறவிகள் ஜனாதிபதியாக வர வேண்டும் என்றும் புத்தரும்,பௌத்த மதமும் கோரவில்லை.

இது காவி உடைக்கு அவமானமானது. இலங்கை என்பது பல இன மற்றும் மதங்களை கொண்ட நாடு என்பதோடு அனைத்து மக்களுக்கு சம உரிமை உள்ளது. சகல சமூகங்களும் ஒன்றிணைய வேண்டும்.

நாம் ஐக்கியப்பட வேண்டும். நாம் அனைவரும் இலங்கையர்களாக இருக்க வேண்டும்.

இலங்கையை ஆசியாவின் அதிசயமாக மாற்ற அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்திகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும்.

அனைத்து சமூகங்களின் ஆதரவுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றி பெறுவார் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

 

SHARE